அன்று மகிந்தவை அழித்தது யார்? சூழ்ந்து கொண்ட ஒற்றர்கள்! கோட்டாபயவுக்கு ஆடை நெய்வது எவர்?

கோட்டாவையும் அரசாங்கத்தை அழிப்பது கோட்டாவை சுற்றியிருக்கும் வஞ்சர்கள்.. இது அரசாங்கத்தின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசப்படும் பிரபலமான கதை.

கோட்டாவையும் அரசாங்கத்தையும் அழிக்கும் கோட்டாவை சுற்றியிருக்கும் சிறந்த வஞ்சகரை தேடும் போட்டியில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதிகளையும் அரசாங்கங்களையும் அழிவுக்கு இட்டுச் செல்லும் வஞ்சகர்கள் பற்றி மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது அற்புதமான கதை ஒன்றை கூறினார்.

அவர்களை அவர், அரசர்களுக்கு ஆடை நெய்பவர்கள் என வர்ணித்தார். ஆடை நெய்பவர்கள் தொடர்பான இந்த கதையை மகிந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கே கூறியிருந்தார். மகிந்த அப்போது எதிர்க்கட்சியில் அங்கம் வகித்த வெறுமனே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்.

மகிந்த 90 ஆம் ஆண்டுகளில் வழங்கிய இருந்த அந்த அறிவுரையை அவருக்கு நினைவுப்படுத்தும் வகையில் இந்த கட்டுரையாளர் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார்.

மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சியில் இருக்கும் காலத்தில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அற்புதமான அறிவுரையை வழங்கியிருந்தார். நாட்டின் உண்மை நிலைமையை ஜனாதிபதியிடம் கூறுங்கள் என்பதே அந்த அறிவுரை.

இது 1993 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது மகிந்த ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கிய அறிவுரை.

“ நீங்கள் அமைதியாக இருப்பது தவறு. இருக்கும் உண்மையான நிலைமையை சுட்டிக்காட்ட வேண்டும். நீங்கள் உச்சத்தில் இருப்பவர்களிடம் அவற்றை சுட்டிக்காட்டுவதில்லை. அவர்களுக்கு இந்த நிலைமைகள் மூடப்பட்டுள்ளன. அவர்கள் பாதுகாப்பு படையினரால் மூடப்பட்டு காணப்படுகின்றனர். அவர்கள் வேறு உலகத்தில் இருக்கின்றனர். அவர்கள் ஒற்றர்களால் மூடப்பட்டுள்ளனர்.

கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் தலைவர்களை கண்டு அஞ்சுகின்றனர். தலைவர்களின் தவறுகளை சுட்டிக்காட்ட பயப்படுகின்றனர். தலைவரிடம் சென்று என்ன கூறுகின்றனர்?. நீங்கள் செய்வது அனைத்தும் சரியானது, நீங்கள் சரியானவர் எனக் கூறி மற்றவர்கள் தவறானவர்கள் என்றே கூறுகின்றனர். இப்படித்தான் தலைவரிடம் அனைத்தையும் கூறுகின்றனர்.

சிறந்தவற்றை மாத்திரம் தலைவரிடம் கூறுவதையே நீங்கள் பழக்கப்படுத்திக்கொண்டுள்ளீர்கள். அவர் விரும்புவதை மாத்திரமே சென்று கூறுகிறீர்கள். கௌரவ ஜனாதிபதி, கௌரவ பிரதமர், ஏனைய தலைவர்கள் விரும்புவதை மாத்திரமே அவர்களிடம் தெரிவிக்கின்றீர்கள். இப்படி சாமரம் வீசும் போது, அவர்கள் கூறும் விடயங்கள், செய்யும் காரியங்கள் அனைத்தும் சரியானது என்றே அவர்கள் நினைப்பார்கள்.

எனக்கு இந்த சந்தர்ப்பத்தில் ஆடை நெய்பவன் பற்றிய கதை நினைவுக்கு வருகிறது. ஆடை நெய்பவன் சிறந்த ஆடை எனக் கூறி அரசனுக்கு ஆடை ஒன்றை அணிவித்தான். சிறந்த அழகான ஆடை என எண்ணி அரசரும் அதனை அணிந்துகொண்டார். இறுதியில் பார்க்கும் அரசர் ஆடையின்றியே சென்றுள்ளார். இதனால், தலைவர்களுக்கு உண்மை நிலைமையை, நாட்டின் உண்மையான நிலைமையை, மக்களின் உண்மையான நிலைமையை, கட்சியினரின் உண்மை நிலைமையை தலைவர்களுக்கு உணரவைப்பது சகலரதும் கடமையாகும்.” (மகிந்த ராஜபக்ச – 1993 நவம்பர் 16 நாடாளுமன்ற குறிப்பேடு.)

தற்போது நாட்டின் ஜனாதிபதியாக இருப்பது மகிந்த ராஜபக்ச, அவருக்கு ஆடை நெய்பவன் எப்படியான ஆடையை அணிவித்துள்ளான்? மகிந்த மாறு வேடம் பூண்டு வீதிக்கு சென்று மனிதர்களை சந்தித்து கேட்டால், ஆடை நெய்பவன் அவருக்கு அணிவித்துள்ள அழகான ஆடை பற்றி அறிந்துக்கொள்ளலாம்.

மகிந்தவுக்கு ஆடை நெய்வது யார்? மகிந்தவுக்கு ஆடை நெய்வது வேறு யாருமல்ல அவரின் சகோதரர்கள். பாதுகாப்பு படையினர், ஒற்றர்கள் சூழ்ந்துகொண்டிருப்பதாக அன்று மகிந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதியை பார்த்து கூறியிருந்தார். தற்போது மகிந்த பாதுகாப்பு படையினர், ஒற்றர்கள் மாத்திரமின்றி சகோதரர்களாலும் சூழப்பட்டுள்ளார்.

நாட்டில் தற்போது நடக்கும் விடயங்கள், நாட்டின் உண்மையான நிலைமையை ஜனாதிபதியிடம் கூற முடியவில்லை. கூறினால், கோட்டா மற்றும் பசிலிடம் கூறினீர்களா என்று கேட்கிறார். இது மகிந்த, மங்கள சமரவீர மற்றும் ஸ்ரீபதி சூரியாராச்சியை அரசாங்கத்தில் இருந்த வெளியேற்றிய போது மங்கள மற்றும் ஸ்ரீபதி ஆகியோர் ஊடகங்களிடம் கூறியது.

எமது அரசாங்கத்தின் மனித உரிமை செய்திகள் சரியில்லை. இதனால், நாடு சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தப்படும். இது எமக்கு பாதிப்பானது. இது மங்கள அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் முன்னர் கூறியது. மங்கள இதனை 2007 ஆம் ஆண்டளவில் கூறியிருந்தார். ஒரு வருடம் கழிந்துள்ளது. அவர் கூறியது போல் இலங்கை சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் ஆசனத்தை இழந்தது. அன்று மங்களவை வெளியேற்றாது, அவர் கூறியதை கேட்டு, அரசாங்கம் மனித உரிமை பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டிருந்தால், இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் ஆசனம் இல்லாமல் போயிருக்காது. அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டிய காரணத்தினால், மங்களவும் ஸ்ரீபதியும் அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், ஆளும் கட்சியை சேர்ந்த எவரும் தற்போது வாய்த்திறப்பதில்லை.

ஆளும் கட்சியினர் தற்போது மகிந்தவுக்கு அவரது சகோதரர்கள் அணிவிற்கு ஆடையை பார்த்து “அழகானது, அழகானது என்றே கூறி வருகின்றனர். அந்த ஆடைக்கு சிலர் தங்க ஜரிகையை தைக்கின்றனர். மேலும் சிலர் வேலைப்பாடுகளை செய்கின்றனர்.

ஜனாதிபதி அவர்களே எரிபொருள் விலைகளை மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பேருந்து கட்டணம் அதிகம் என்று பயணிகள் அரசாங்கத்தை கடுமையாக பேசுகின்றனர். சகல பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. போதாக் குறைக்கு வீதியில் செல்ல முடியவில்லை வெடிக்குண்டுகள். மக்கள் கடைகளுக்கு சென்று பொருட்களின் விலைகளை கேட்டு அதிர்ச்சியடைக்கின்றனர். இவ்வாறு அரசாங்கத்தை எப்படி முன்னெடுத்துச் செல்வது.

இவ்வாறு வாயை திறந்து மகிந்தவிடம் கூறும் ஆளும் கட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருமில்லை. ஐயா உங்களது தம்பி பசிலின் விளையாட்டு இல்லை என்றால், எமது கதை முடிந்திருக்கும். ஐயா உங்களது தம்பி கோட்டாவின் யுத்தம் இல்லை என்றால் அரசாங்கம் கவிழ்ந்திருக்கும். ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிளைகளை போல் தற்போது இந்த கதைகளையே கூறி வருகின்றனர்.

ஐயா இப்படி நாடு சென்றாலும் உங்கள் கதையும் எங்களது கதையும் முடிந்து விடும் என்று கூற முடிந்த ஒருவரை தேடிக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில், மகிந்த ராஜபக்ச தான் ஜனாதிபதியாக பதவியேற்று ஓராண்டு பூர்த்தியடைந்த காலத்தில் தொழிலாளர்கள் முன்னிலையில் அற்புதமான கதை ஒன்றை கூறினார்.

“குறைகளை சுட்டிக்காட்டுமாறு ஹேக் ஹசிடம் கூறுங்கள். தொலைக்காட்சிகளின் நாட்டின் குறைகளை சுட்டிக்காட்டுகின்றனர். எமது குறைப்பாடுகளை அறிந்து கொள்ள வேண்டியது எமது தேவை”. (மகிந்த ராஜபக்ச – 2007-01-02 லங்காதீப)

இந்த நிலையில், மகிந்தவின் சகோதரரான கோட்டாபய தற்போது லேக் ஹவுஸ் செய்தியாளர்களை அழைத்து என்ன கூறுகிறார்?. அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்க வேண்டாம் என்கிறார். போரின் குறைபாடுகளை சுட்டிக்காட்ட வேண்டும் என்று கூறுகிறார். இது எப்படி நடந்தது?

உண்மையில் மகிந்த ராஜபக்ச நாட்டு மக்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் ஊடகவியலாளர்கள் மத்தியிலும் “மகிந்த அண்ணா” என்ற பெயரிலேயே பிரபலமாக இருந்தார். மகிந்த அண்ணா இப்படி செய்யாதீர்கள். இப்படி செய்யுங்கள். மகிந்த அண்ணா நீங்கள் செய்யும் அந்த வேலை தவறு.. மகிந்த அண்ணா அதில் கவனமாக தலையிடுங்கள். இப்படி மகிந்த ராஜபக்ச பிரதமராக இருந்த போது, அவருக்கு ஆலோசனை வழங்கி, சுட்டிக்காட்ட பலர் இருந்தனர். இவர்கள் அனைவருக்கும் மகிந்த ராஜபக்சவிற்கு அருகில் சென்று அண்ணா என்று அழைத்து குறைகளை சுட்டிக்காட்டும் சந்தர்ப்பம் இருந்தது.

இவர்களில் பலர் ஊடகவியலாளர்கள். மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிக்கு வரும் வரை அவரை மகிந்த அண்ணா என்று அழைத்து, குறைகளை சுட்டிக்காட்டியவர்கள் இந்த தம்பிகள். எனினும் தற்போது ஜனாதிபதியாக பதவியில் இருக்கும் மகிந்த ராஜபக்ச தன்னுடன் இரத்த உறவு முறை கொண்ட தம்பிகளான ராஜபக்சவினருடன் செல்கிறார்.

“விமர்சிக்கும் போது எமக்கு வலிக்கும். எவருக்கும் வலிக்கும். எனினும் நாம் விமர்சனங்களை செவிமடுக்க பழகிக்கொள்ள வேண்டும். இதுதான் குணம். நீங்களும் விமர்சனங்களை கேட்க பழகிக்கொள்ளுங்கள். விமர்சனங்களை செவிமடுக்க முடியாத காரணத்தினாலேயே அந்த 40 பேர் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட்டனர்” (மகிந்த ராஜபக்ச 1991-11-23) மகிந்த ராஜபக்ச அன்று எதிர்க்கட்சியில் இருந்த போது, ஆளும் கட்சியினருக்கு வழங்கிய அறிவுரைகளை தற்போது அவரது சகோதரர்களுக்கு வழங்க முடிந்தால், அவர் வந்த பாதையில் மேலும் பல தூரம் செல்ல முடியும்.

மகிந்தவை அன்று அழித்தவர்கள் அவருக்கு ஆடை நெய்த அவரது இரண்டு சகோதர்கள். அவர்களில் ஒரு சகோதரரான கோட்டாபய தற்போது நாட்டின் ஜனாதிபதியாக பதவி வருவார் என எவரும் நினைக்கவில்லை. எனினும் அவர் தற்போது நாட்டின் ஜனாதிபதி. அப்படியானால், தற்போது கோட்டாபயவுக்கு ஆடை நெய்வது யார்? 2008 ஆம் ஆண்டு அதாவது 13 ஆண்டுகள் பின்நோக்கி சென்றால், இதனை நன்றாக புரிந்துக்கொள்ளலாம்.

கட்டுரையாளர் – உபுல் ஜோசப் பெர்ணான்டோ

மொழியாக்கம் – ஸ்டீபன் மாணிக்கம்

Latest Posts

கொழும்பில் இருந்து யாழ்.சென்ற ரயிலில் மோதி மாணவன் பலி (PHOTO)

முன்னாள் காதலனுடன் உடல் உறவு கொண்ட சிங்களச் சிறுமி!! நேரில் பார்த்த தற்போதய காதலன் செய்த கொடூரம்!! !! (Photo)

புலமை பரிசில் பரீட்சையில் எழுந்துள்ள ச ர் ச் சை ! வி சா ர ணை ந ட த் த பரீட்சைகள் திணைக்களம் தீர்மா ன ம்

யாழில் 12 வயதுச் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்க முற்பட்ட 42 வயது இரண்டு பொண்டாட்டிக்கார மன்மதனை புரட்டி எடுத்த பொதுமக்கள்!!

சுழற்சி முறையில் மின்வெட்டு! சற்றுமுன்னர் வெளியான அட்டவணை

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

கடலில் நீராடச் சென்ற மூன்று சிறுமிகள் உட்பட நால்வருக்கு நேர்ந்த நிலை!

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்!! உத்தியோக பூர்வ அறிவிப்பு!!

யாழில் மாணவர்களை மோதித் தள்ளி வாகனம் – தப்பியோடிய சாரதி
Related Posts