அமைச்சர் டக்ளஸ் சொல்வது சரியென ஏற்றுக் கொண்டாராம் சுமந்திரன்!

கடலட்டை ஏற்றுமதி ஊடாக 2025 ஆம் ஆண்டளவில் சுமார் 30 பில்லியன் ரூபாய் அந்நியச் செலாவணியை ஈட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(17) இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.

தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபை எனப்படும் நக்டா நிறுவனத்தின் வடக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் திரு நிருபராஜ், கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பதவியேற்ற பின்னர் கிளிநொச்சியில் 270 கடலட்டைப் பண்ணைகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் 616 இற்கும் மேற்பட்ட பண்ணைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு பிரதேச சபைகளின் அனுமதிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த கருத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஏற்றுக் கொண்டார்.

கடலட்டைப் பண்ணைகளை அமைக்கும் செயற்பாடுகளின் போது, பிரதேச சபைகளின் அனுமதிகளைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் நடமுறைச் சிக்கல்களினால், கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதில் தாமதங்கள் ஏற்படுவதாக நக்டா நிறுவனத்தின் வடக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் நிருபராஜ் தெரிவித்திருந்தார்.

இதன்போது, சம்மந்தப்பட்ட சட்ட பிரதியை காண்பித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதில் சொல்லப்பட்டிருந்த சட்ட ஏற்பாடுகளை தெளிவுபடுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து சட்டப் பிரதியை முழுமையாக வாசித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பிரதேச சபைகளின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை என்பதை ஏற்றுக்கொண்டார்.

அதேவேளை, காணிகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றபோது கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று இன்றைய கலந்துரையாலில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பூநகரிப் பிரதேசத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான 196 ஏக்கர் காணிகளை விவசாயப் பண்ணை அமைப்பதற்கு தனியார் நிறுவனம் ஒன்றினால் விண்ணப்பித்தமை தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த விடயம் இன்றைய அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்ட நிலையில், மேற்குறித்த விடயத்தினை தெரிவித்த இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் விரிவாக ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பால் தேவையைக் கவனத்தில் கொண்டு மாடு வளர்ப்பிற்கு முக்கியத்துவம் அளிக்குமாறும் அதேபோன்று ஆடு வளர்ப்பிலும் தேவையான அக்கறை செலுத்துமாறும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை வழங்கினார்.

அதேபோன்று, கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருடன் ஆராயப்பட்டதுடன் மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்நிலையில், பிரதேச சபைகளில் காணப்படுகின்ற சுகாதாரப் பணியாளர்களுக்கான பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் விசேட தீர்மானத்தினை பெற்றுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்துள்ள கரைச்சி பிதேச சபை தவிசாளரான வேழமாலிகிதன், இராணுவப் பயன்பாட்டில் இருக்கின்ற கரைச்சி பிரதேச சபை நூலகத்திற்கான பகுதிக் கட்டிடத்தினையும் விடுவித்துத் தருமாறு கோரிக்கை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

மாணவர்கள் மத்தியில் கொரோனா அதிகரிப்பு! மாணவர் எண்ணிக்கையை வரையறுக்க கோரிக்கை!

பிரபல நாடொன்றில் பாரிய குண்டுவெடிப்பு !

பிக்பாஸ் ஓடிடியில் பங்கேற்கும் 7 போட்டியாளர்கள் இவர்கள் தான்

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து நாட்டுக்கு முக்கியமா? ஆவேசமான பிரபல நடிகை!

திருவிழாவில் தீ மிதித்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த பெரும் துயரம்!

விஞ்ஞான ஆய்வு கூடத்துக்குள் வைத்து ஒரே நேரத்தில் இரு மாணவிகளுடன் பாலியல் ஆராய்ச்சி செய்த யாழ்ப்பாண ஆசிரிய மன்மதன் இவர்தான்!!(Photos)

பரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவருக்கு வீடு!

அதிபர் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

யாழ்ப்பாணத்தில் ஆட்டுக்குக் குழை வெட்டிய சிறுமி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழப்பு!! (Photos)

இலங்கை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் – மண்ணில் புதைந்த ரகசியம்

யாழில் வயிற்றில் துணி வைத்து தைக்கப்பட்டதால் பெண் உயிரிழந்த விவகாரம்; நீதிமன்றம் விடுத்த உத்தரவு

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து சேமித்து வையுங்கள்!! இலங்கையின் நெருக்கடி குறித்து எச்சரிக்கை!!

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி!

ஆறு மணிநேர மின்வெட்டு!! வெளிவந்த அதிர்ச்சிகர தகவல்!!

மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் பெண்; கணவர் கைது

யாழில் பிரபல தனியார் வைத்தியசாலை சத்திரசிகிச்சையில் ஏற்பட்ட துயர சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் பதின்ம வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து பெறவில்லை”…மனம் திறந்த கஸ்தூரிராஜா

இன்றைய இராசிபலன் ( 20.01.2022)

அடுத்த மாதம் ஊர் திரும்பவிருந்த நிலையில் மட்டக்களப்பு நபருக்கு நேர்ந்த பெரும் சோகம்!

யாழில் வெளிநாட்டில் இருந்துவந்த மகள் பூட்டிய வீட்டில் சடலமாக…தாய் வைத்தியசாலையில்

முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகள் மீது சேட்டைவிட்ட ஆசிரியர் மீது நீதிமன்றம் விடுவித்துள்ள உத்தரவு!

இன்று பிற்பகல் முதல் மின் துண்டிப்பு!! விசேட அறிவிப்பு வெளியானது!!

சமந்தாதான் எனக்கு ஏற்ற ஜோடி – நாக சைதன்யா

யாழ்.போதனா வைத்தியசாலையில் நடக்கும் அலங்கோலம்!! அதிகாரிகள் கவனிப்பார்களா??

யாழில் பிரான்ஸ் மாப்பிளையின் காலைப் பிறாண்டிய பூனையின் வாலைப் பிடித்து தலைகீழாக அடித்த மாப்பிளை!! கலியாணம் குழம்பியது!!

யாழ்ப்பாணத்தில் ‘அலிகள்‘ நடாத்திய பொங்கல் விழா!! (புகைப்படங்கள்)

வவுனியா வைத்தியசாலைக்குள் இப்படி ஒரு சம்பவம்; பலரும் அதிருப்தி

இலங்கை மக்களுக்கான பேரிடியான செய்தி! ஒவ்வொருவர் மீதும் இவ்வளவு கடனா?

இரு மின் ஆலைகளுக்குப் பூட்டு; இருளில் மூழ்குமா இலங்கை?

போர்ட் சிட்டிக்கு விசா தேவையில்லை! நேற்றைய தினம் 50,000 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள்

தனுஷ்.. ஐஸ்வர்யா.. 18 வருட திருமண பந்தம் முறிவு! பரபரப்பை ஏற்படுத்திய திடீர் பிரிவு! என்ன காரணம்?

திடீரென மயங்கி சரிந்த பாடசாலை மாணவர்கள்!

திருமண வைபவத்தில் கொடூர சம்பவம்: மாமனாரை கொலை செய்த மருமகன்

கனடாவில் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் 1400 கோடி ரூபா பரிசு வென்ற யாழ் தமிழர்..! வெளியான தகவல்!

இம்முறை சீனாவில் இருந்து அரிசி

யாழ் வேலணை வைத்தியசாலை டொக்டர் கோபிகிருஸ்ணனின் கிருஸ்ணலீலை!! குடும்பப் பெண் பரிதாபகரமாகப் பலி!!

யாழ்.வேலணை உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் உயிரிழந்த பெண்! முழுமையான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க ஆளுநர் பணிப்பு..

பேருந்துகளில் பயணிக்கும் மாணவிகளின் தலைமுடியை வெட்டி கைப்பையில் சேகரித்த நுாதன ஆசாமி கைது..!




Related Posts