அரச ஊழியர்களை சொந்த வதிவிடத்திற்கு இடமாற்ற கோரிக்கை

விலைவாசி அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு ஏற்ப அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படாத நிலையில் வெளிமாவட்டங்களில் கடமையாற்றும் அரச ஊழியர்களை தத்தமது சொந்த வதிவிட மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யுமாறு இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கத்தின் ஊடகச் செயலாளர் கானா நடராஜா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கம், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்களுக்கும் இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாட்டில் தற்போத நாளுக்கு நாள் விலைவாசி அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. எரிபொருள் உட்பட அத்தியாவசிய பொருட்கள், போக்குவரத்து கட்டணங்கள் அடங்கலாக அனைத்தும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் அரச ஊழியர்களின் சம்பளம் மாத்திரம் ஒரு சதவீதம் கூட அதிகரிக்கப்படாத நிலையில் உள்ளது. இதனால் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதுடன், அரச ஊழியர்கள் செய்வதறியாது திண்டாடுகின்றனர். 

மாதாந்தம் வழங்கப்படுகின்ற அரச ஊழியர்களுக்கான சம்பளம் வாழ்க்கை செலவுக்கு ஏற்ப 15 நாட்களுக்கு மாத்திரமே செலவு செய்வதற்கு போதுமானதாக உள்ளது. 

இந்நிலையில் வெளி மாவட்டங்களில் அரசின் கட்டாய சேவை திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகின்ற ஊழியர்கள் துயரங்களை அனுபவித்து வருவதுடன், தாம் பெற்றுக் கொள்கின்ற வேதம் முழுவதையும் தனது வாழ்க்கைச் செலவுக்கு செலவிட வேண்டியுள்ளது. 

அத்துடன் மேலதிகமாக தனது வீட்டிலிருந்து செலவுக்காக பணத்தை கோரிப் பெற்றுக் கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலையில் உள்ளனர். 

இதனால் கடனாளி என்ற அடைமொழிக்குள் அகப்பட்டு அரச ஊழியர்கள் சிக்கித் தவிக்கும் பரிதாபகரமான ஒரு நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையை கருத்திற்கொண்டு வெளிமாவட்டங்களில் கடமையாற்றும் அரச ஊழியர்கள் கோரிக்கை விடுக்குமிடத்து அவர்களை தத்தமது சொந்த வதிவிட மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யுமாறு இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இது தொடர்பான கோரிக்கை கடிதம் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர்க்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கத்தின் ஊடகச் செயலாளர் கானா நடராஜா தெரிவித்துள்ளார்.

Latest Posts

மஹிந்தவிற்கு சத்திர சிகிச்சை நடந்தது உண்மையே!

இலஞ்சம் வாங்கிய போது பாடசாலை அதிபர் வசமாக சிக்கினார்!

யாழில் ஆவா குழுக் காவாலிகளின் இராணுவப்பிரிவின் ஆயுதக் களஞ்சியம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது!!

கிளிநொச்சியில் கண் மாபியாக்களின் கொடூரம்!! 71 மாணவர்களின் கண்களுக்கு நடந்தது என்ன? பெண் வைத்திய அதிகாரி பிரியந்தினி மிரட்டப்பட்டது ஏன்?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற NCG பஸ் பாரிய விபத்துக்குள்ளானது!!

கிளிநொச்சியில் பெண் வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கத்தை அலங்கோலப்படுத்தியவர் யார்??

யாழில் நண்பர்களுடன் தேனீர் குடித்துக்கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட துயரம்!!

சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்து!! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்!! (Photos)

பிரதமர் மகிந்தவின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி மகிந்தவின் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த கில்லாடிக்கு நடந்த கதி!!

Related Posts