ஆபிரிக்க வைரஸ் நாட்டில் பரவும் ஆபத்தான நிலை; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

கொழும்பு விமானத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகள் காரணமாக ஆபத்தான ஆபிரிக்க வைரஸ் நாட்டில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்துள்ளது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

விமானநிலையத்தின் பகுதியில் பொருட்களை கொள்வனவு செய்யும் பயணிகள் எந்த வித கட்டுப்பாடுகளும் அற்ற விதத்தில் வெளியேறுகின்றதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் காரணமாக அவர்களுடைய ஆவணங்கள் உடமைகளை சோதனை செய்யும் உத்தியோகத்தர்களிற்கு இதனால் ஆபத்து என பொதுசுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல்ரோகண தெரிவித்துள்ளார்.

அதேவேளை புதிய வைரசினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படுவதை சுட்டிக்காட்டியுள்ள அவர், இது குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் அல்பா போன்ற ஏனைய வைரஸ்களுடன் ஒப்பிடும்போது தென்னாபிரிக்க நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ் 500 வீதம் அதிகமான பரவும் தன்மையை கொண்டது என்றும், ஆனால் இது குறித்து கவனம் செலுத்தப்படாதது ஆழ்ந்த கரிசனைக்குரிய விடயம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம் தற்போது பல நாடுகள் விமானசேவைகளை நிறுத்தியுள்ளன இலங்கையில் நிலைமை மிகவும் ஆபத்தானது திருப்தியளிக்க கூடிய சுகாதார பாதுகாப்பு பொறிமுறை நடைமுறையில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விமானநிலையத்தின் உள்ளே பொருட்களை கொள்வனவு செய்த பின்னரே உத்தியோகத்தர்கள் அவர்களின் ஆவணங்கள் உடமைகளை சோதனையிடுகின்றனர்.

இதன் காரணமாக அங்கு பணிபுரியும் உத்தியோகத்தர்கள் ஊழியர்களிற்கு பெரும் ஆபத்து காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் விமானநிலையத்தில் சுகாதார வழிகாட்டுதல்களில் தளர்வினை பின்பற்றுகின்றமையால் இலங்கை தென்னாபிரிக்க வைரசினால் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதது எனவும் அவர் கவலை வெளியிட்டார் .

Latest Posts

அடுத்த மாதம் ஊர் திரும்பவிருந்த நிலையில் மட்டக்களப்பு நபருக்கு நேர்ந்த பெரும் சோகம்!

யாழில் வெளிநாட்டில் இருந்துவந்த மகள் பூட்டிய வீட்டில் சடலமாக…தாய் வைத்தியசாலையில்

முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகள் மீது சேட்டைவிட்ட ஆசிரியர் மீது நீதிமன்றம் விடுவித்துள்ள உத்தரவு!

இன்று பிற்பகல் முதல் மின் துண்டிப்பு!! விசேட அறிவிப்பு வெளியானது!!

சமந்தாதான் எனக்கு ஏற்ற ஜோடி – நாக சைதன்யா

யாழ்.போதனா வைத்தியசாலையில் நடக்கும் அலங்கோலம்!! அதிகாரிகள் கவனிப்பார்களா??

யாழில் பிரான்ஸ் மாப்பிளையின் காலைப் பிறாண்டிய பூனையின் வாலைப் பிடித்து தலைகீழாக அடித்த மாப்பிளை!! கலியாணம் குழம்பியது!!

யாழ்ப்பாணத்தில் ‘அலிகள்‘ நடாத்திய பொங்கல் விழா!! (புகைப்படங்கள்)

வவுனியா வைத்தியசாலைக்குள் இப்படி ஒரு சம்பவம்; பலரும் அதிருப்தி

இலங்கை மக்களுக்கான பேரிடியான செய்தி! ஒவ்வொருவர் மீதும் இவ்வளவு கடனா?

இரு மின் ஆலைகளுக்குப் பூட்டு; இருளில் மூழ்குமா இலங்கை?

போர்ட் சிட்டிக்கு விசா தேவையில்லை! நேற்றைய தினம் 50,000 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள்

தனுஷ்.. ஐஸ்வர்யா.. 18 வருட திருமண பந்தம் முறிவு! பரபரப்பை ஏற்படுத்திய திடீர் பிரிவு! என்ன காரணம்?

திடீரென மயங்கி சரிந்த பாடசாலை மாணவர்கள்!

திருமண வைபவத்தில் கொடூர சம்பவம்: மாமனாரை கொலை செய்த மருமகன்

கனடாவில் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் 1400 கோடி ரூபா பரிசு வென்ற யாழ் தமிழர்..! வெளியான தகவல்!

இம்முறை சீனாவில் இருந்து அரிசி

யாழ் வேலணை வைத்தியசாலை டொக்டர் கோபிகிருஸ்ணனின் கிருஸ்ணலீலை!! குடும்பப் பெண் பரிதாபகரமாகப் பலி!!

விடுமுறை வழங்கவில்லை!! யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் விபரீத முடிவு!!
Related Posts