இறந்த மகனின் இரட்டைக் குழந்தைகளுக்கு பாட்டி ஆகிய தாய்!

இவ்வுலகில் தாயின் அன்பிற்கு நிகரானது வேறெதுவுமில்லை. தொப்புள்கொடியில் தொடங்குகிறது தாய்-சேய் இடையேயான பந்தம். அப்பந்தம் முடிவற்றது. அதனாலே, குழந்தைகள், அவர்களது பிரச்னைகள் என்று வந்துவிட்டால் இந்த அம்மாக்கள் மட்டும் எந்த எல்லைக்கும் சென்று அதைசரி செய்கிறார்கள். அப்படி, ஒரு தாய் இறந்த மகனுக்கு இரண்டாண்டுகளுக்குபின் உயிர்கொடுத்து மறுபிறவி எடுக்க செய்துள்ளார். ஆம், இறந்த மகனை மீண்டும் உலகில் பிறக்க வைத்த ஒரு தாயின் நெஞ்சை நெகிழ வைக்கும் பாசப்போராட்டம் இது!

குழந்தையை கருவில் சுமக்கும்போதே ஒரு தாய், அவனது அனைத்து பருவம் குறித்து கனவு கண்டுவிடுகிறாள். குழந்தையை வளர்த்து ஆளாக்கி, சமூகத்தில் உயர்ந்த மனிதனாக்குவதையே வாழ்நாள் ஆசையாகவே கொண்டுள்ளனர் பெரும்பாலான அம்மாக்கள். 

ஆனால், அனைவருடைய ஆசையும் நிறைவேறுவதில்லை. அப்படித்தான் ராஜஸ்ரீ பாட்டீலின் ஆசையும் நிராசையாகியது. புனேவைச் சேர்ந்த ராஜஸ்ரீயின் மகன் பிரதமேஷ். படிப்பில் கெட்டிக்கார மாணவர். இளங்கலை பொறியியல் பட்டப்படிப்பை முடித்து, முதுகலை பட்டப்படிப்பிற்காக 2010ம் ஆண்டு ஜெர்மனிக்கு சென்றுள்ளார். 

Rajashree Patil  family

அன்பான குடும்பம், கெட்டிக்கார மகன், மகனுடைய பிரகாசமான எதிர்காலம் என்று ராஜஸ்ரீயின் வாழ்க்கை ஆனந்தம் நிறைந்தே இருந்துள்ளது. ஆனால், 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையே அந்த ஆனந்தம் நிலைத்து இருந்தது. ஏனெனில், ஆரோக்கியத்துடன் இருந்த பிரதமேஷிற்கு மூளைக்கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. குடும்பமே நிலை குலைந்தது. 

ஜெர்மனியில் உள்ள மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்ட பிரதமேஷிற்கு கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த நாட்டின் நெறிமுறையின்படி, புற்றுநோய் சிகிச்சையால் விளையும் எந்தவொரு பாதகமான சூழ்நிலையையும்

கையாள ஏதுவாக, நோயாளிகளின் விந்தணு சேகரிக்கப் பரிந்துரைப்பது வழக்கம். அதுபோன்றே, திருமணமாகாத பிரதமேஷின் விந்துவும் சேகரித்து விந்தணு வங்கியில் பாதுகாக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் சிகிச்சை பெற்றுவந்த பிரதமேஷை, 2013ம் ஆண்டு மே மாதம் இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளனர் அவரது பெற்றோர்கள். மும்பையின் ஹிந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதமேஷுக்கு மூளைக்கட்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மகன் குணமடைந்து வருவதை கண்ட குடும்பம் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. 

ராஜஸ்ரீ

தன் மகனின் இரட்டைக் குழந்தைகளுடன் தாய் ராஜஸ்ரீ

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரதமேஷிற்கு புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறிகள் மீண்டும் தென்படத் தொடங்கின. பார்வை இழப்பு, குரல் இழப்பு மற்றும் பலவீனம் என உடல்நலம் மோசமாகியது. தீவிரவாக நோய்வாய்ப்பட்ட பிரதமேஷ் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மருத்துவர்கள் மூளைக்கட்டி மீண்டும் வளருவதை உறுதிப்படுத்தினர்.

குடும்பத்தினரும், மருத்துவர்களும் அவர்களால் முடிந்த அனைத்தையும் செய்தனர். ஆயினும், எதுவும் கைக்கொடுக்கவில்லை. மூன்று ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடிய அவர், செப்டம்பர் 3, 2016 அன்று இறந்தார். மகனை இழந்த துக்கத்திலிருந்த ராஜஸ்ரீ, மகன் இறந்த ஒரு ஆண்டுக்கு பிறகு, மகனின் விந்தணு மூலம் பேரக்குழந்தைகளை பெற விரும்பியுள்ளார். பிரதமேஷும் அவருடைய விந்தணுக்களை பெற்றுகொள்ளும் உரிமையை அவரது தாயுக்கும், தங்கைக்கும் அளித்து இருந்துள்ளார். ஆயினும், வெளிநாட்டிலிருந்து விந்தணுவை பெறுவதில் பல சிக்கல்களை எதிர்கொண்டார் அவர். 

ஆனால், எத்தடையும் அவரை தடுக்கவில்லை. பேரப்பிள்ளைகளின் வழி மகனை மீண்டும் உலகுக்கு கொண்டு வருவதில் தீர்மானமாய் இருந்துள்ளார் ராஜஸ்ரீ. அவரது விடாமுயற்சியால், ஜெர்மனியில் பதப்படுத்தி வைக்கப்பட்ட மகனின் விந்தணுவை பெற்றார். 

இறுதியாய், 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ம் தேதியன்று அவரது மகனின் அழகிய இரட்டைக் குழந்தைகளுக்கு பாட்டியாகினார் ராஜஸ்ரீ. ஆண் குழந்தைக்கு ப்ரத்மேஷ் என்ற அவரது மகனின் பெயரையும், ‘கடவுளின் கொடை’ என்ற பொருள் கொண்ட ‘ப்ரீஷா’ என்ற பெயரை பெண் குழந்தைக்கும் வைத்திருக்கிறார் அவர்.

‘‘நான் என் மகனின் ஆத்மாவை என்னுள் சுமந்து கொண்டிருந்தேன். அவன் சுவாசிக்க ஒரு உடலைத் தேடி கொண்டிருந்தேன். ஆண் குழந்தைக்கு பிரதமேஷ் என்றும், பெண் குழந்தைக்கு ப்ரிஷா என்றும் பெயரிட்டுள்ளேன். 

என் மகன் புற்றுநோய் அவதிப்பட்டுவந்த போது, கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. கீமோ சிகிச்சை அளிப்பதற்குமுன், முன்னெச்சரிக்கையாக என் மகனின் விந்தணுக்களை மருத்துவர்கள் பத்திரப்படுத்தி வைத்திருந்தனர். அன்று செய்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், இன்று என் மகனை திரும்ப பெறமுடிந்தது. 

twins

ஆனால், பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள விந்தணுவை பெறுவது அத்தனை எளிதல்ல. நாங்கள் நிறைய தடைகளை எதிர்கொண்டோம். பணமும், நேரமும் எங்களுக்கு பிரதான பிரச்னைகளாக இருந்தது. ஆனால், இப்போது இந்த குழந்தைகளுக்கு நான் பொறுப்பு, என்று பேரக் குழந்தைகளின் வழி மகனை காணும் சந்தோஷத்தில் கூறினார் ராஜஸ்ரீ.

‘‘நாங்கள் முதலில் ராஜஸ்ரீயை பரிசோதித்தோம். ஆனால், அவர் கருத்தரிக்க முடியாது என்பதை கண்டறிந்தோம். அதிர்ஷ்டவசமாக, ராஜஸ்ரீயின் முடிவிற்கு அவரது பெற்றோர்கள் முழு ஆதரவை வழங்கியதால், அவர்களது உறவினர்களில் ஒருவர், வாடகைத் தாயாக ஒப்புக்கொண்டார். முதல் முயற்சியிலே நாங்கள் வெற்றி பெற்றோம். 2017ம் ஆண்டு ஜூன் மாதம் அந்தப் பெண் கருத்தரித்தார். பின், பிப்ரவரி 12, 2018 அன்று அவர், ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் என இரட்டையர்களை பெற்றெடுத்தார்,” என்று சஹாயத்ரி மருத்துவமனையின் ஐவிஎஃப் துறைத் தலைவர் டாக்டர் சுப்ரியா புராணிக் கூறினார்.

‘‘அறிவியல் மற்றும் புதிய தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் மூலம் மக்கள் தங்கள் மகிழ்ச்சியான தருணங்களை புதுப்பித்துக் கொள்ள நாங்கள் உதவுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். மருத்துவமனையில் ஒரு பெண் ஒரு குழந்தையை பிரசவிக்கும் போதெல்லாம் நாங்கள் நிறைய உணர்ச்சியான தருணங்களையும், மகிழ்ச்சியையும் காண்கிறோம். அவர்களின் மகிழ்ச்சியான தருணங்களில் பங்கெடுத்துள்ளோம். ஆனால், 

இந்த விஷயத்தில் அபாயகரமான நோயுடன் போராடி இறந்த மகனின் தாயார் உடன் பயணித்தோம். இந்த செயல்முறை முழுவதும் அவர் வெளிப்படுத்திய நேர்மறையான எண்ணங்கள் பாராட்டக்கூடியது. ஆரோக்கியமான இரட்டைக் குழந்தைகளின் வடிவத்தில் தனது மகனைத் திரும்பப் பெற்றதற்கு அவருக்கு வாழ்த்துகள்,” என்றார் டாக்டர் சுப்ரியா.

Latest Posts

மாணவர்கள் மத்தியில் கொரோனா அதிகரிப்பு! மாணவர் எண்ணிக்கையை வரையறுக்க கோரிக்கை!

பிரபல நாடொன்றில் பாரிய குண்டுவெடிப்பு !

பிக்பாஸ் ஓடிடியில் பங்கேற்கும் 7 போட்டியாளர்கள் இவர்கள் தான்

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து நாட்டுக்கு முக்கியமா? ஆவேசமான பிரபல நடிகை!

திருவிழாவில் தீ மிதித்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த பெரும் துயரம்!

விஞ்ஞான ஆய்வு கூடத்துக்குள் வைத்து ஒரே நேரத்தில் இரு மாணவிகளுடன் பாலியல் ஆராய்ச்சி செய்த யாழ்ப்பாண ஆசிரிய மன்மதன் இவர்தான்!!(Photos)

பரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவருக்கு வீடு!

அதிபர் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

யாழ்ப்பாணத்தில் ஆட்டுக்குக் குழை வெட்டிய சிறுமி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழப்பு!! (Photos)

இலங்கை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் – மண்ணில் புதைந்த ரகசியம்

யாழில் வயிற்றில் துணி வைத்து தைக்கப்பட்டதால் பெண் உயிரிழந்த விவகாரம்; நீதிமன்றம் விடுத்த உத்தரவு

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து சேமித்து வையுங்கள்!! இலங்கையின் நெருக்கடி குறித்து எச்சரிக்கை!!

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி!

ஆறு மணிநேர மின்வெட்டு!! வெளிவந்த அதிர்ச்சிகர தகவல்!!

மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் பெண்; கணவர் கைது

யாழில் பிரபல தனியார் வைத்தியசாலை சத்திரசிகிச்சையில் ஏற்பட்ட துயர சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் பதின்ம வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து பெறவில்லை”…மனம் திறந்த கஸ்தூரிராஜா

இன்றைய இராசிபலன் ( 20.01.2022)

அடுத்த மாதம் ஊர் திரும்பவிருந்த நிலையில் மட்டக்களப்பு நபருக்கு நேர்ந்த பெரும் சோகம்!

யாழில் வெளிநாட்டில் இருந்துவந்த மகள் பூட்டிய வீட்டில் சடலமாக…தாய் வைத்தியசாலையில்

முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகள் மீது சேட்டைவிட்ட ஆசிரியர் மீது நீதிமன்றம் விடுவித்துள்ள உத்தரவு!

இன்று பிற்பகல் முதல் மின் துண்டிப்பு!! விசேட அறிவிப்பு வெளியானது!!

சமந்தாதான் எனக்கு ஏற்ற ஜோடி – நாக சைதன்யா

யாழ்.போதனா வைத்தியசாலையில் நடக்கும் அலங்கோலம்!! அதிகாரிகள் கவனிப்பார்களா??

யாழில் பிரான்ஸ் மாப்பிளையின் காலைப் பிறாண்டிய பூனையின் வாலைப் பிடித்து தலைகீழாக அடித்த மாப்பிளை!! கலியாணம் குழம்பியது!!

யாழ்ப்பாணத்தில் ‘அலிகள்‘ நடாத்திய பொங்கல் விழா!! (புகைப்படங்கள்)

வவுனியா வைத்தியசாலைக்குள் இப்படி ஒரு சம்பவம்; பலரும் அதிருப்தி

இலங்கை மக்களுக்கான பேரிடியான செய்தி! ஒவ்வொருவர் மீதும் இவ்வளவு கடனா?

இரு மின் ஆலைகளுக்குப் பூட்டு; இருளில் மூழ்குமா இலங்கை?

போர்ட் சிட்டிக்கு விசா தேவையில்லை! நேற்றைய தினம் 50,000 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள்

தனுஷ்.. ஐஸ்வர்யா.. 18 வருட திருமண பந்தம் முறிவு! பரபரப்பை ஏற்படுத்திய திடீர் பிரிவு! என்ன காரணம்?

திடீரென மயங்கி சரிந்த பாடசாலை மாணவர்கள்!

திருமண வைபவத்தில் கொடூர சம்பவம்: மாமனாரை கொலை செய்த மருமகன்

கனடாவில் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் 1400 கோடி ரூபா பரிசு வென்ற யாழ் தமிழர்..! வெளியான தகவல்!

இம்முறை சீனாவில் இருந்து அரிசி

யாழ் வேலணை வைத்தியசாலை டொக்டர் கோபிகிருஸ்ணனின் கிருஸ்ணலீலை!! குடும்பப் பெண் பரிதாபகரமாகப் பலி!!

யாழ்.வேலணை உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் உயிரிழந்த பெண்! முழுமையான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க ஆளுநர் பணிப்பு..

பேருந்துகளில் பயணிக்கும் மாணவிகளின் தலைமுடியை வெட்டி கைப்பையில் சேகரித்த நுாதன ஆசாமி கைது..!
Related Posts