இலங்கையில் பலி கொடுக்கப்பட்ட சிறுவர்கள்? தாயின் வாக்குமூலத்தால் குழப்பத்தில் பொலிஸார்

காணாமல்போயுள்ள கொட்டதெனியாவ – வத்தேமுல்ல பாந்துராகொட பகுதியைச் சேர்ந்த இரு சிறுவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கபெறவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களை கண்டுபிடிப்பதற்காக இரண்டு விசேட   குழுக்கள் நியமிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் குறித்த சிறுவர்களின் தாய், உறவினர்கள் உள்ளிட்ட 25 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக  குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 23 ஆம் திகதி முதல் குறித்த சிறுவர்கள் காணாமல்போயுள்ளனர்.

காணாமல்போயுள்ள குறித்த சிறுவர்களின் தாய், முன்னுக்குப் பின் முரணான வகையில் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

புதையல் ஒன்றை தோண்டுவதற்கு பலியிடுவதற்காக தமது பிள்ளைகள் கடத்தி செல்லப்பட்டுள்ளார்கள் என்றும், மற்றுமொரு சந்தர்ப்பத்தில், ஏதேனும் விகாரை ஒன்றில் தையல் வேலைப்பாடுகளுக்காக தமது பிள்ளைகள் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக  குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விரு சிறுவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்திருப்பின் கொட்டதெனியாவ காவல்நிலைய பொறுப்பதிகாரியின் 071 85 91 634 அல்லது கொட்டதெனியாவ காவல்நிலையத்தின் 033 – 22 72 222 அல்லது 033 – 22 40 050 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.

Latest Posts

கொழும்பில் இருந்து யாழ்.சென்ற ரயிலில் மோதி மாணவன் பலி (PHOTO)

முன்னாள் காதலனுடன் உடல் உறவு கொண்ட சிங்களச் சிறுமி!! நேரில் பார்த்த தற்போதய காதலன் செய்த கொடூரம்!! !! (Photo)

புலமை பரிசில் பரீட்சையில் எழுந்துள்ள ச ர் ச் சை ! வி சா ர ணை ந ட த் த பரீட்சைகள் திணைக்களம் தீர்மா ன ம்

யாழில் 12 வயதுச் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்க முற்பட்ட 42 வயது இரண்டு பொண்டாட்டிக்கார மன்மதனை புரட்டி எடுத்த பொதுமக்கள்!!

சுழற்சி முறையில் மின்வெட்டு! சற்றுமுன்னர் வெளியான அட்டவணை

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

கடலில் நீராடச் சென்ற மூன்று சிறுமிகள் உட்பட நால்வருக்கு நேர்ந்த நிலை!

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்!! உத்தியோக பூர்வ அறிவிப்பு!!

யாழில் மாணவர்களை மோதித் தள்ளி வாகனம் – தப்பியோடிய சாரதி
Related Posts