இலங்கையில் வாகன இறக்குமதி எப்போது அனுமதிக்கப்படும் – புதிய அறிவிப்பு

இலங்கையில் வாகன இறக்குமதி எப்போது? புதிய அறிவிப்பு

நாட்டுக்கு அந்நிய செலாவணி கிடைக்கப்பெற்று, பொருளாதார நிலைமை வழமைக்கு திரும்பியதன் பின்னர் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு (Vehicle import Sri Lanka ) மீண்டும் அனுமதி வழங்க வாய்ப்பு இருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதியை இடைநிறுத்துவது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வாகனங்கள் மற்றும் ஓடுகள் தவிர அத்தியாவசியமற்ற அனைத்து பொருட்களும் தற்போது இறக்குமதி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் பெருமளவிலான அந்நிய செலாவணி நாட்டை விட்டு வெளியேறுவதாகவும் மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டிற்கு பெருமளவிலான அந்நியச் செலாவணியைத் பெற்றுத்தரக்கூடிய சுற்றுலாத்துறை போன்ற துறைகளில் எதிர்வரும் மாதங்களில் ஸ்திரத்தன்மையினை ஏற்படுத்துவதன் மூலம் வாகனங்களை மீண்டும் இறக்குமதி செய்ய அனுமதி வழங்க முடியும் என தாம் நம்புவதாக அஜித் நிவார்ட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.

Latest Posts

கொழும்பில் இருந்து யாழ்.சென்ற ரயிலில் மோதி மாணவன் பலி (PHOTO)

முன்னாள் காதலனுடன் உடல் உறவு கொண்ட சிங்களச் சிறுமி!! நேரில் பார்த்த தற்போதய காதலன் செய்த கொடூரம்!! !! (Photo)

புலமை பரிசில் பரீட்சையில் எழுந்துள்ள ச ர் ச் சை ! வி சா ர ணை ந ட த் த பரீட்சைகள் திணைக்களம் தீர்மா ன ம்

யாழில் 12 வயதுச் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்க முற்பட்ட 42 வயது இரண்டு பொண்டாட்டிக்கார மன்மதனை புரட்டி எடுத்த பொதுமக்கள்!!

சுழற்சி முறையில் மின்வெட்டு! சற்றுமுன்னர் வெளியான அட்டவணை

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

கடலில் நீராடச் சென்ற மூன்று சிறுமிகள் உட்பட நால்வருக்கு நேர்ந்த நிலை!

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்!! உத்தியோக பூர்வ அறிவிப்பு!!

யாழில் மாணவர்களை மோதித் தள்ளி வாகனம் – தப்பியோடிய சாரதி




Related Posts