இலங்கை மக்களுக்கு ஏற்படவுள்ள பெரும் ஆபத்து – நிபுணர்கள் எச்சரிக்கை

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய அடுத்த ஆண்டு உணவு பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரிக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாய துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு உடனடியாக தீர்வு வழங்கப்படாவிடில், அடுத்த ஆண்டு மார்ச் மாதமளவில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 200 ரூபா வரை அதிகரிக்கக்கூடும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தவிடயம் தொடர்பில் கண்டியில் நேற்று(25) ஊடகங்களுக்கு கருத்துரைத்த விவசாய திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், விவசாயத்துறை நிபுணர் கே.பீ.குணரத்ன, உரத்தட்டுபாடு காரணமாக பெரும்போக விளைச்சல் உரிய முறையில் இல்லை என தெரிவித்துள்ளார்.

நெல் பயிரிடப்பட்டுள்ள போதிலும் உரத்தட்டுப்பாடு காரணமாக பயிர்களில் வளர்ச்சி போதிய அளவில் காணப்படவில்லை. அரசாங்கம் இதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் விவசாய திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், விவசாயத்துறை நிபுணர் கே.பீ.குணரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போது சந்தையில் பால்மா, எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது. அத்துடன் அவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துரைத்த வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் ஊடாகவே அத்தியாவசிய பொருட்களில் விலை மற்றும் வாழ்க்கை செலவு என்பவற்றின் அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தார்.

Latest Posts

கொழும்பில் இருந்து யாழ்.சென்ற ரயிலில் மோதி மாணவன் பலி (PHOTO)

முன்னாள் காதலனுடன் உடல் உறவு கொண்ட சிங்களச் சிறுமி!! நேரில் பார்த்த தற்போதய காதலன் செய்த கொடூரம்!! !! (Photo)

புலமை பரிசில் பரீட்சையில் எழுந்துள்ள ச ர் ச் சை ! வி சா ர ணை ந ட த் த பரீட்சைகள் திணைக்களம் தீர்மா ன ம்

யாழில் 12 வயதுச் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்க முற்பட்ட 42 வயது இரண்டு பொண்டாட்டிக்கார மன்மதனை புரட்டி எடுத்த பொதுமக்கள்!!

சுழற்சி முறையில் மின்வெட்டு! சற்றுமுன்னர் வெளியான அட்டவணை

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

கடலில் நீராடச் சென்ற மூன்று சிறுமிகள் உட்பட நால்வருக்கு நேர்ந்த நிலை!

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்!! உத்தியோக பூர்வ அறிவிப்பு!!

யாழில் மாணவர்களை மோதித் தள்ளி வாகனம் – தப்பியோடிய சாரதி
Related Posts