இலங்கை வந்தடைந்த உலகம் சுற்றும் இளம் பெண் விமானி!

உலகம் முழுவதும் தனியான விமானத்தில் பயணம் செய்யும் 19 வயதான இளம் பெண் விமானி Zara Rutherford இரத்மலானை கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளார்.

பெல்ஜியம் மற்றும் பிரிட்டன் வம்சாவளி விமானி Zara Rutherford, 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் திகதி முதல் தனியாக விமானத்தில் உலகத்தை சுற்றி வருகிறார்.

51 ஆயிரம் கிலோ மீற்றர் தூரம் விமானத்தில் பயணிக்க அவர் உத்தேசித்துள்ளார். 5 கண்டங்கள் மற்றும் 52 நாடுகளை கடந்து எதிர்வரும் ஜனவரி மாதம் நடுப்பகுதியில் பயணத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார்.

56 வது தரிப்பிடமாக அவர் இலங்கை வந்துள்ளார். Zara Rutherford பயணிக்கும் விமானம் ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்ட உயர் செயற்திறன் கொண்ட ultralight விமானமாகும்.

இந்த விமானம் மணிக்கு 300 கிலோ மீற்றர் வேகத்தில் பறக்கக் கூடியது. நீண்ட தூர பயணத்திற்காக இந்த விமானம் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. 

இரத்மலானை கொழும்பு சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் Zara வை வரவேற்றதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். 

Latest Posts

மஹிந்தவிற்கு சத்திர சிகிச்சை நடந்தது உண்மையே!

இலஞ்சம் வாங்கிய போது பாடசாலை அதிபர் வசமாக சிக்கினார்!

யாழில் ஆவா குழுக் காவாலிகளின் இராணுவப்பிரிவின் ஆயுதக் களஞ்சியம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது!!

கிளிநொச்சியில் கண் மாபியாக்களின் கொடூரம்!! 71 மாணவர்களின் கண்களுக்கு நடந்தது என்ன? பெண் வைத்திய அதிகாரி பிரியந்தினி மிரட்டப்பட்டது ஏன்?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற NCG பஸ் பாரிய விபத்துக்குள்ளானது!!

கிளிநொச்சியில் பெண் வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கத்தை அலங்கோலப்படுத்தியவர் யார்??

யாழில் நண்பர்களுடன் தேனீர் குடித்துக்கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட துயரம்!!

சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்து!! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்!! (Photos)

பிரதமர் மகிந்தவின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி மகிந்தவின் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த கில்லாடிக்கு நடந்த கதி!!

Related Posts