“உருளைக்கிழங்கினைத் தான் சாப்பிடுகின்றோம்” இலங்கையிலிருந்து வந்த ஒரு தாயின் குமுறல்

நாட்டில் உருளைக்கிழக்கினை சாப்பிடும் நிலைமைக்கு வந்துவிட்டோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) தெரிவித்துள்ளார்.

அரச தலைவர் அதிகாரிகளை திட்டுவதில் எந்த அர்த்தமுமில்லை, நீங்கள் தான் நாட்டின் ஆட்சியாளர், தலைவர், நீங்கள் எடுத்த முடிவுகளால் இந்த நிலை ஏற்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு – மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

விவசாய அமைச்சின் நான்கு செயலாளர்கள் இராஜினாமா செய்தாலும் விவசாய அமைச்சின் செயலாளரால் சர்வசாதாரணமான பணிகளைச் செய்ய முடியாது. வர்த்தமானியை மாற்றுவதற்கு அர்த்தமில்லை. நாட்டில் உரம் இல்லை இப்போது என்ன செய்யவது.

விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே 95% அறுவடை கிடைக்கும் என்று கூறினாலும் அறுவடைகள் 50% ஆல் குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பெரும் போக பருவத்தில் இருந்தே அதிக பலன் அடைகிறோம். நாட்டின் மொத்த அரசி தேவையில் 65% பெரும் போகத்திலயே கிடைக்கிறது. இதன் மூலம் நாங்கள் சுமார் 1.8 மில்லியன் மெட்ரிக் தொன் அரிசியை உற்பத்தி செய்கிறோம். 50% ஆல் அறுவடைகுறைக்கப்பட்டால் 2022 உணவுக்கு 800,000 மெட்ரிக் தொன் போதுமானதாக இருக்காது.

நாம் 800,000 மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டும். தோராயமாக 300 மில்லியன் மதிப்புள்ள அரிசி ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்னும் அரிசி வகைகள் சந்தையில் உள்ளன. தன்னிறைவு பெற்ற நாட்டிற்கு அரிசியை கொண்டு வந்தால், கீரி சம்பா போன்ற உயர்தர பொருட்களை மட்டுமே இறக்குமதி செய்வோம்.

நாங்கள் இனிப்பு, உருளைக்கிழங்கு மற்றும் அதன் இலைகளை சாப்பிட வேண்டும் என்று கூறகின்றனர். இந்த தற்போதைய ஆட்சியாளர்களே பொறுப்பு.

நான் ஒரு கிராமத்திற்குச் சென்று ஒரு தாயை அழைத்து வந்து என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டேன், உருளைக்கிழங்கு என்றார். 

எனவே, 2022 டொலர் நஷ்டம் ஏற்பட்டால், அரிசியை இறக்குமதி செய்து சாப்பிட முடியாது. அதற்கு கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட இந்த அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும். அதை அதிகாரிகளிடம் விட்டு விட்டு தப்பிக்க தயாராக இருக்காதீர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Posts

கொழும்பில் இருந்து யாழ்.சென்ற ரயிலில் மோதி மாணவன் பலி (PHOTO)

முன்னாள் காதலனுடன் உடல் உறவு கொண்ட சிங்களச் சிறுமி!! நேரில் பார்த்த தற்போதய காதலன் செய்த கொடூரம்!! !! (Photo)

புலமை பரிசில் பரீட்சையில் எழுந்துள்ள ச ர் ச் சை ! வி சா ர ணை ந ட த் த பரீட்சைகள் திணைக்களம் தீர்மா ன ம்

யாழில் 12 வயதுச் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்க முற்பட்ட 42 வயது இரண்டு பொண்டாட்டிக்கார மன்மதனை புரட்டி எடுத்த பொதுமக்கள்!!

சுழற்சி முறையில் மின்வெட்டு! சற்றுமுன்னர் வெளியான அட்டவணை

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

கடலில் நீராடச் சென்ற மூன்று சிறுமிகள் உட்பட நால்வருக்கு நேர்ந்த நிலை!

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்!! உத்தியோக பூர்வ அறிவிப்பு!!

யாழில் மாணவர்களை மோதித் தள்ளி வாகனம் – தப்பியோடிய சாரதி
Related Posts