ஒன்றரை ஆண்டுகளின் பின் முகக் கவசம் இன்றி ஒன்றுகூடிய உலகத் தலைவர்கள்! (படங்கள்)

  • குமாரதாஸன், பாரிஸ்.

ஜீ-7 மாநாட்டுக் குழுவின் தலைவர்களை மகாராணி எலிஸபெத் தலைமையில் அரச குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர். இங்கிலாந்தின் கடற்கரை பிரதேசமான 
கார்பிஸ் பேயில் (Carbis Bay) முக்கிய நாடுகளது தலைவர்கள் கூடும் மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது.


மாநாட்டில் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்கல், பிரெஞ்சு அதிபர் மக்ரோன், ஜப்பானியப் பிரதமர் யோஷிஹைட் சுகா, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இத்தாலியப் பிரதமர் மரியோ ட்ராகி ஆகியோர் பங்கு கொள்கின்றனர்.இவர்களுடன் ஐரோப்
பிய ஒன்றியத்தின் தலைவி உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) அவர்களும் அங்கு பிரசன்னமாகி உள்ளார்.

  சுமார் பதினெட்டு மாதங்கள் நீடித்த பெரும் தொற்றுநோய்க் காலத்தின் பிறகு பிரதான நாடுகளின் தலைவர்கள் முகத்துக்கு நேரே – சந்தித்துள்ளனர்.

வீடியோ வழியாக டிஜிட்டல் திரைகளில் நடைபெற்றுவந்த பல கூட்டங்களுக்குப் பிறகு தலைவர்கள் நேரில் – மாஸ்க் அணியாமல்- சந்தித்துக் கொண்ட மாநாட்டின் காட்சிகள் லண்டனில் வெளியாகி உள்ளன.

ஏழு நாடுகளின் தலைவர்களை அரச குடும்பத்தினர் வரவேற்கின்ற நிகழ்வு
ஏடன் உள்ளக மழைக்காட்டு மையத்தில் (Eden Project, indoor rainforest centre) நடைபெற்றது. அரச குடும்பத்தவர்களும் தலைவர்களும் மாஸ்க் அணியாதவர்களாக – நெருங்கி அளவளாவி உள்ளனர்.

  கொரோனா வைரஸ் தடுப்பூசிப் பங்கீடு, பருவநிலை மாற்றம் ஆகிய இரு விடயங்கள் ஏழு தலைவர்கள் மாநாட்டின் முக்கிய விவகாரங்களாக விவாதிக்கப்பட வுள்ளன. ‘கடந்த 18 மாதகாலப்பகுதியில் விட்ட தவறுகள் மீள நிகழாமல் இருப் பதை உறுதிப்படுத்திக் கொள்வது முக்கியமானது’ – என்று மாநாட்டை நடத்துகின்ற இங்கிலாந்தின் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தொடக்க உரையில் தெரிவித்திருக்கிறார்.


டொனால்ட் ட்ரம்ப் காலத்தில் தனிமைப் பட்டுப் போயிருந்த அமெரிக்காவின்
முக்கியத்துவத்தை சர்வதேச அரங்கில்
மீள நிறுவவேண்டிய பொறுப்போடு புதிய அதிபர் பைடன் இந்த மாநாட்டில் தனது சகாக்களை எதிர்கொள்கிறார்.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து ஐரோப்பாவும் பல உலக நாடுகளும் மெல்ல மீண்டு வருகின்றன. எனினும் இங்கிலாந்தில் வைரஸ் திரிபுகளது தொற்றுக்கள் அதிகரிப்பதால் கட்டுப்பாடுகளில் இருந்து நாட்டை முற்றாக விடுவிக்கின்ற இறுதி நாளைத் தள்ளிப் போடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.


மாநாடு நடைபெறுகின்ற பகுதியில் ஊடகவியலாளர்கள் மற்றும் பணியாளர்கள் தங்குகின்ற ஹொட்டேல் ஒன்று தொற்றுக் காரணமாக மூடப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருக்கின்ற பொலீஸ் உத்தியோகத்தர்களில் ஒருவருக்கும் வைரஸ் தொற்றுஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது.




Latest Posts

அரச நிறுவனங்கள், பொது இடங்களுக்குச் செல்வோருக்கு கோவிட்-19 தடுப்பூசி அட்டை அவசியம் – எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தத் தீர்மானம்

ஆகஸ்ட் 2 முதல் அனைத்து அரசாங்க ஊழியர்களையும் மீண்டும் கடமைக்கு அழைக்க ஜனாதிபதி செயலாளர் உத்தரவு

புற்று நோயால் திடீரென இறந்த ஒரு பிள்ளையின் தந்தையான இள வயது ஆசிரியர்

ஹிஷாலினியின் சரீரத்தை தோண்டி எடுக்கும் நடவடிக்கை ஆரம்பம்! (படங்கள்)

15 வயதுச் சிங்களச்சிறுமியின் உடல் உறவுக் காட்சியை இணையத்தளத்தில் பார்வையிட 5 நிமிடத்திற்கு 5 ஆயிரம் ரூபா!! நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு இது!!

வடமாகாண அமைச்சு வாகனத்தை கொழும்பிலிருந்து உறவினர்களை அழைத்துவர பயன்படுத்திய அதிகாரி!

10 பேருக்கு கொரோனா! இரு வர்த்தக நிலையங்களுக்கு சீல் வைப்பு

வெள்ளவத்தையில் தொடர்மாடி குடியிருப்பில் வெளிநாட்டு பெண் தற்கொலை!

யாழில் பெண்கள் சிலரின் மோசமான செயல்; பிறந்த நாளில் இளைஞர் விபரீத முடிவு!

மீண்டும் நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு? வெளியான தகவல்

புறா சண்டை!! கொரோனா தொற்றுடன் பெண்கள் ஆடிய பேயாட்டம்!!

விவாகரத்தான பெண் மீது காதல்; ஏற்க மறுத்ததால் யாழ் இளைஞன் செய்த செயல்

உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் சீனாவுக்கு விற்பனை? வெளியானது மற்றுமொரு தகவல்

வடக்கில் நாளை முதல் 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி

‘சீனாவில் ஏலத்துக்கு செல்லும் உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல்’

அரச ஊழியர்கள் இனி சீதனம் வாங்க முடியாது: புதிய சட்டம்!

சுகாதாரப் பரிசோதகரின் விளையாட்டு கண்ணீருடன் யுவதி!

விவாகரத்து செய்த மனைவியை பார்க்க வந்த முன்னாள் கணவர்: பூட்டிய வீட்டில் நடந்த விபரீதம்!!

அடுப்படியில் பெற்றோலை வைத்த கணவன்; அறியாமல் அடுப்பை மூட்டிய இளம் பெண் எரிந்து மரணம்: யாழில் துயரம்!

யாழிலிருந்து தொழில் தேடி கொழும்பிற்கு சென்ற சிறுவனிற்கு ஏற்பட்ட கதி: வீதியோரங்களில் தூங்கும் அவலம்!

வடக்கிற்கு இன்று கிடைத்த தடுப்பூசிகள் 29ம் திகதி முதல் செலுத்தல்!

போலி நோட்டுகளுடன் கடைக்குச் சென்றவரின் பையில் போலி நோட்டுக்களை அச்சிட பயன்படுத்திய இயந்திரம்! வெல்லம்பிட்டி நபர் கைது!

ஹிஷாலினிக்கு பதிலான சிங்கள பெயரை வழங்கிய ரிஷாட்டின் மாமனார் – செயலிழந்த CCTV கமராக்கள் – நீதிமன்றில் வெளியாகிய பரபரப்பு மிக்க தகவல்கள்

சம்பவம் நடக்க முதல் செயலிழந்த சிசிடீவிகள்; பல மர்மங்கள் நீதிமன்றில் வெளிப்படுத்தல்!

மருத்துவத்துறைக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு சவால்! மஞ்சள் நிறமாக மாறிய சிறுவனின் நாக்கு

திருமணமான 10 மாதத்தில் கிணற்றிற்குள் சடலங்களாக மிதக்கும் இளம் ஜோடி

இன்றைய ராசிபலன் – 27/07/2021

மாணவியை ஏமாற்றி அழைத்துச்சென்று துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது!

இலங்கை சாதனையை பாராட்டிய உலக சுகாதார அமைப்பு.

காதலியை திருமணம் செய்ய முயற்சித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி! பெண் வீட்டார் செய்த திட்டமிட்ட சம்பவம்..!!!

கொவிஷீல்ட் செலுத்திக் கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு

தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் குறித்து ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

இலங்கையில் அனைத்து பாலியல் இணையத்தளங்களுக்கும் தடை! – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

யாழ்.தாதியர் பயிற்சி கல்லுாரியில் தனிமைப்படுத்தப்பட்ட 64 பேர் ; அனைவருமே 2 டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றவர்களாம்

யாழில் மதுபோதையில் பொலிஸார் அட்டகாசம்; இளைஞனை கடத்தி சித்திரவதை!

தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு 100 டொலர்கள் பரிசு:எங்கு தெரியுமா?

தீராத பண கஷ்டங்களை நீக்க இதை செய்யுங்கள் !

பிரபல நடிகரால் 3 முறை கர்ப்பமான முன்னணி நடிகை ? யார் தெரியுமா? அதிர்ச்சியில் திரையுலகம்!

நயன்தாரா செய்தது நியாயமா, கேட்க தைரியம் இருக்கா?- மீண்டும் வம்பிழுக்கும் வனிதா







Related Posts

%d bloggers like this: