ஒமிக்ரானை அடுத்து உலகை உலுக்க காத்திருக்கும் புதிய வைரஸ்; ஆய்வாளர்கள் பகீர் தகவல்!

கொரோனா வைரஸின் திரிபான “ஒமிக்ரான்” வகை வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் புதிய வகை வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

“ஒமிக்ரான்” மாறுபாடடைந்த வைரஸ் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில் சுகாதார நிபுணர்கள் இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் சமூகப் பரவலாக மாறி வருவதாக கவலை தெரிவித்துள்ளனர். 

ஒமிக்ரான் பாதிப்பில் இந்தியாவின் தலைநகரான டெல்லி இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது. அதேபோல் டெல்டா வைரஸை விட ஒமிக்ரான் வகை வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் மாறுபாடடைந்த மற்றொரு புதிய வகை வைரஸ் பரவி உலக நாடுகளிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கொரோனாவின் இரட்டை மாறுபாடு அடைந்த டெல்மிக்ரான் (Delmicron) என்ற புதிய வகை வைரஸ் தற்போது பரவ தொடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த புதிய வகை வைரஸின் பெயரானது கொரோனாவின் மாறுபாடு அடைந்த ஒமிக்ரான் மற்றும் டெல்டா வகை வைரஸ்களின் பெயரை இணைத்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒமிக்ரான் மற்றும் டெல்டா வகை வைரஸிலிருந்து உருமாறிய “டெல்மிக்ரான்” புதிய வகை வைரஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்த உள்ளதாக கோவிட் பணிக்குழு உறுப்பினர் ஷஷாங்க் ஜோஷி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல் இந்தியாவில் தற்போது பரவி வரும் டெல்டா டெரிவேடிவ்கள் முக்கியமான வைரஸ் வகைகளாக கருதப்படும் நிலையில், உலகின் பிற பகுதிகளில் டெல்டா வைரசை விட ஒமிக்ரான் வகை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 

இருப்பினும் ஒமிக்ரான் மற்றும் டெல்டா டெரிவேட்டிவ் வைரஸ்கள் எவ்வாறு செயல்படும் என்பதை கணிக்கவே இயலவில்லை எனகோவிட் பணிக்குழு உறுப்பினர் ஷஷாங்க் ஜோஷி கவலை தெரிவித்துள்ளார்.

Latest Posts

கொழும்பில் இருந்து யாழ்.சென்ற ரயிலில் மோதி மாணவன் பலி (PHOTO)

முன்னாள் காதலனுடன் உடல் உறவு கொண்ட சிங்களச் சிறுமி!! நேரில் பார்த்த தற்போதய காதலன் செய்த கொடூரம்!! !! (Photo)

புலமை பரிசில் பரீட்சையில் எழுந்துள்ள ச ர் ச் சை ! வி சா ர ணை ந ட த் த பரீட்சைகள் திணைக்களம் தீர்மா ன ம்

யாழில் 12 வயதுச் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்க முற்பட்ட 42 வயது இரண்டு பொண்டாட்டிக்கார மன்மதனை புரட்டி எடுத்த பொதுமக்கள்!!

சுழற்சி முறையில் மின்வெட்டு! சற்றுமுன்னர் வெளியான அட்டவணை

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

கடலில் நீராடச் சென்ற மூன்று சிறுமிகள் உட்பட நால்வருக்கு நேர்ந்த நிலை!

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்!! உத்தியோக பூர்வ அறிவிப்பு!!

யாழில் மாணவர்களை மோதித் தள்ளி வாகனம் – தப்பியோடிய சாரதி




Related Posts