ஒரே வாரத்தில் பற்களின் பின் இருக்கும் அசிங்கமான மஞ்சள் கறையைப் போக்கும் அற்புத வழி!

ஒருவரது அழகு புன்னகையிலும் உள்ளது. ஒருவர் சிரித்த முகத்துடன் இருந்தால், அதுவே ஒருவரை மிகவும் அழகாக வெளிக்காட்டும். அதற்கு நம் பற்கள் நன்கு வெள்ளையாக, துர்நாற்றமின்றி இருக்க வேண்டும். ஆனால் இன்று பலர் தங்களது வாயில் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதில் சொத்தைப் பற்கள், வாய் துர்நாற்றம், மஞ்சள் கறையுடனான பற்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் பற்களைத் துலக்க வேண்டும். இருப்பினும் பற்களைத் துலக்குவதால் மட்டும், பற்களில் படிந்துள்ள மஞ்சள் களைகளைப் போக்க முடியாது. எனவே பலர் தங்களது பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்க பல் மருத்துவரை சந்திக்கின்றனர்.

ஆனால் பல் மருத்துவரிடம் செல்லாமல், வீட்டிலேயே ஓர் எளிய வழியின் மூலம் பற்களின் பின் இருக்கும் மஞ்சள் கறைகளைப் போக்க முடியும் என்பது தெரியுமா? இந்த கட்டுரையில் அந்த வழி குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது. வாருங்கள் பார்ப்போம்…
தேவையான பொருட்கள்:பேக்கிங் சோடா – 2 டேபிள் ஸ்பூன் , எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன் , டூத் பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் , ஆப்பிள் சீடர் வினிகர் – 1 டேபிள் ஸ்பூன் , தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் , அலுமினியத்தாள்

பேக்கிங் சோடா:பேக்கிங் சோடா ஒரு ஆன்டி-பாக்டீரியல் பொருள். இது வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்துவிடும். பேக்கிங் சோடா பற்களை வெள்ளையாக்கும் மற்றும் வாயில் pH அளவைப் சீராக்கும். பேக்கிங் சோடா அலர்ஜியை ஏற்படுத்தினால், அந்த பொருளைத் தவிர்த்திடுங்கள். பேக்கிங் சோடா பயன்படுத்த விரும்பாதவர்கள், அதற்கு பதிலாக எலுமிச்சை சாற்றினை பயன்படுத்தலாம்.

எலுமிச்சை சாறு:இந்த முறையில் பயன்படுத்தப்படும் எலுமிச்சை சாறு ப்ளீச்சிங் போன்று செயல்படும். மேலும் இதில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை உள்ளதால், வாயில் இருக்கும் பாக்டீரியாக்களை அழித்து, பற்களை வெண்மையாகவும், வாயை துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ளும்.
ஆப்பிள் சீடர் வினிகர்:இந்த முறை சக்தி வாய்ந்ததாக இருப்பதற்கு மற்றொரு காரணமே ஆப்பிள் சீடர் வினிகர் தான். இதில் உள்ள அமிலத்தன்மை, பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகளை எளிதில் அகற்ற உதவும். ஆனால் இதை ஒரு டேபிள் ஸ்பூனுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது.

தேங்காய் எண்ணெய்:தேங்காய் எண்ணெய் பற்களுக்கு மிகவும் சிறப்பான பொருள். இது பல் சொத்தையாவதைத் தடுக்கும் மற்றும் ஈறுகளுக்கு ஊட்டமளித்து, ஈறுகள் வீங்குவதைக் குறைக்க உதவும். அதற்கு தேங்காய் எண்ணெயை இந்த முறையில் பயன்படுத்துவது மட்டுமின்றி, தனியாக இந்த எண்ணெயைக் கொண்டு ஆயில் புல்லிங் கூட செய்யலாம். இதனால் ஈறுகள் மென்மையாவதோடு, வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் குணமாகும். ஒருவேளை தேங்காய் எண்ணெய் பயன்படுத்த விரும்பாதவர்கள், கடுகு எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

டூத் பேஸ்ட்:இந்த முறையில் டூத் பேஸ்ட் பயன்படுத்துவதால், இது மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக இருக்கும். இந்த முறையில் டூத் பேஸ்ட் தான் ஒரு தளத்தைப் போல வேலை செய்கிறது. முக்கியமாக இந்த முறைக்கு வெள்ளை நிற டூத் பேஸ்ட்டைப் பயன்படுத்துங்கள்.
செய்முறை:ஒரு பௌலில் பேக்கிங் சோடா மற்றும் டூத் பேஸ்ட் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.பின் அதில் எலுமிச்சை சாறு மற்றும் ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.பின்பு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.அடுத்து அந்த கலவையை இரண்டு துண்டு அலுமினியத் தாளின் மீது தடவ வேண்டும். பின் ஒரு துண்டை மேல் பற்களின் மீதும், மற்றொன்றை கீழ் பற்களின் மீதும் வைக்க வேண்டும்.

2 நிமிடம் கழித்து, அலுமினியத்தாளை நீக்கி, நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.எஞ்சிய கலவையைக் கொண்டு, மீண்டும் பற்களை கை விரலால் துலக்கி, நீரால் வாயை கொப்பளியுங்கள். முக்கியமாக ஒருமுறை இந்த கலவையைத் தயாரித்தால், அப்போதே பயன்படுத்திவிட வேண்டும். மறுநாளைக்கு வைத்து பயன்படுத்தக்கூடாது.
குறிப்பு:பற்களின் பின் இருக்கும் மஞ்சள் கறையைப் போக்க உதவும் இந்த வழியை வாரத்திற்கு 2 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இப்படி செய்தால், பற்களின் பின்னால் இருக்கும் மஞ்சள் கறைகள் காணாமல் போவதோடு, பற்கள் வெள்ளையாகவும், வாய் துர்நாற்றமின்றியும் இருக்கும். மேலும் இது இயற்கைப் பொருட்களைக் கொண்டு செய்யப்படுவதால், எந்த ஒரு பக்கவிளைவும் இருக்காது.




Latest Posts

அரச நிறுவனங்கள், பொது இடங்களுக்குச் செல்வோருக்கு கோவிட்-19 தடுப்பூசி அட்டை அவசியம் – எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தத் தீர்மானம்

ஆகஸ்ட் 2 முதல் அனைத்து அரசாங்க ஊழியர்களையும் மீண்டும் கடமைக்கு அழைக்க ஜனாதிபதி செயலாளர் உத்தரவு

புற்று நோயால் திடீரென இறந்த ஒரு பிள்ளையின் தந்தையான இள வயது ஆசிரியர்

ஹிஷாலினியின் சரீரத்தை தோண்டி எடுக்கும் நடவடிக்கை ஆரம்பம்! (படங்கள்)

15 வயதுச் சிங்களச்சிறுமியின் உடல் உறவுக் காட்சியை இணையத்தளத்தில் பார்வையிட 5 நிமிடத்திற்கு 5 ஆயிரம் ரூபா!! நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு இது!!

வடமாகாண அமைச்சு வாகனத்தை கொழும்பிலிருந்து உறவினர்களை அழைத்துவர பயன்படுத்திய அதிகாரி!

10 பேருக்கு கொரோனா! இரு வர்த்தக நிலையங்களுக்கு சீல் வைப்பு

வெள்ளவத்தையில் தொடர்மாடி குடியிருப்பில் வெளிநாட்டு பெண் தற்கொலை!

யாழில் பெண்கள் சிலரின் மோசமான செயல்; பிறந்த நாளில் இளைஞர் விபரீத முடிவு!

மீண்டும் நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு? வெளியான தகவல்

புறா சண்டை!! கொரோனா தொற்றுடன் பெண்கள் ஆடிய பேயாட்டம்!!

விவாகரத்தான பெண் மீது காதல்; ஏற்க மறுத்ததால் யாழ் இளைஞன் செய்த செயல்

உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் சீனாவுக்கு விற்பனை? வெளியானது மற்றுமொரு தகவல்

வடக்கில் நாளை முதல் 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி

‘சீனாவில் ஏலத்துக்கு செல்லும் உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல்’

அரச ஊழியர்கள் இனி சீதனம் வாங்க முடியாது: புதிய சட்டம்!

சுகாதாரப் பரிசோதகரின் விளையாட்டு கண்ணீருடன் யுவதி!

விவாகரத்து செய்த மனைவியை பார்க்க வந்த முன்னாள் கணவர்: பூட்டிய வீட்டில் நடந்த விபரீதம்!!

அடுப்படியில் பெற்றோலை வைத்த கணவன்; அறியாமல் அடுப்பை மூட்டிய இளம் பெண் எரிந்து மரணம்: யாழில் துயரம்!

யாழிலிருந்து தொழில் தேடி கொழும்பிற்கு சென்ற சிறுவனிற்கு ஏற்பட்ட கதி: வீதியோரங்களில் தூங்கும் அவலம்!

வடக்கிற்கு இன்று கிடைத்த தடுப்பூசிகள் 29ம் திகதி முதல் செலுத்தல்!

போலி நோட்டுகளுடன் கடைக்குச் சென்றவரின் பையில் போலி நோட்டுக்களை அச்சிட பயன்படுத்திய இயந்திரம்! வெல்லம்பிட்டி நபர் கைது!

ஹிஷாலினிக்கு பதிலான சிங்கள பெயரை வழங்கிய ரிஷாட்டின் மாமனார் – செயலிழந்த CCTV கமராக்கள் – நீதிமன்றில் வெளியாகிய பரபரப்பு மிக்க தகவல்கள்

சம்பவம் நடக்க முதல் செயலிழந்த சிசிடீவிகள்; பல மர்மங்கள் நீதிமன்றில் வெளிப்படுத்தல்!

மருத்துவத்துறைக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு சவால்! மஞ்சள் நிறமாக மாறிய சிறுவனின் நாக்கு

திருமணமான 10 மாதத்தில் கிணற்றிற்குள் சடலங்களாக மிதக்கும் இளம் ஜோடி

இன்றைய ராசிபலன் – 27/07/2021

மாணவியை ஏமாற்றி அழைத்துச்சென்று துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது!

இலங்கை சாதனையை பாராட்டிய உலக சுகாதார அமைப்பு.

காதலியை திருமணம் செய்ய முயற்சித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி! பெண் வீட்டார் செய்த திட்டமிட்ட சம்பவம்..!!!

கொவிஷீல்ட் செலுத்திக் கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு

தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் குறித்து ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

இலங்கையில் அனைத்து பாலியல் இணையத்தளங்களுக்கும் தடை! – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

யாழ்.தாதியர் பயிற்சி கல்லுாரியில் தனிமைப்படுத்தப்பட்ட 64 பேர் ; அனைவருமே 2 டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றவர்களாம்

யாழில் மதுபோதையில் பொலிஸார் அட்டகாசம்; இளைஞனை கடத்தி சித்திரவதை!

தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு 100 டொலர்கள் பரிசு:எங்கு தெரியுமா?

தீராத பண கஷ்டங்களை நீக்க இதை செய்யுங்கள் !

பிரபல நடிகரால் 3 முறை கர்ப்பமான முன்னணி நடிகை ? யார் தெரியுமா? அதிர்ச்சியில் திரையுலகம்!

நயன்தாரா செய்தது நியாயமா, கேட்க தைரியம் இருக்கா?- மீண்டும் வம்பிழுக்கும் வனிதா







Related Posts

%d bloggers like this: