கல்முனையில் சொகுச்சுக்காரில் வந்தவரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்பு!

சொகுசு காரில் 13 கிராம் ஐஸ் போதைப்பொருளை கடத்திய சந்தேகத்தில் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதானார்.

இன்று (21) அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை விசேட அதிரடிப்படையினர் மற்றும் அக்கரைப்பற்று இராணுவ புலனாய்வு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொத்துவில் பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்துசாலையின் முன்பாக வைத்தே குறித்த சொகுசு காரில் ஐஸ் போதைப்பொருளுடன் பயணம் செய்த நபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

இச்சோதனை நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர் சேனாதீரவின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் நளீன் பெரேரா மற்றும் மாவட்ட கட்டளை அதிகாரி டி.சி வேவிடவிதான ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் ஜி.எஸ்.பி.பண்டார உள்ளிட்ட அதிகாரிகள் புலனாய்வு பிரிவினர் இணைந்தே இந்நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது குறித்த நபரிடமிருந்து போதைப்பொருளை கொள்வனவு செய்வதாக புலனாய்வு அதிகாரிகள் அழைப்பை ஏற்படுத்திய பின்னர் அவ்விடத்தில் மாறுவேடத்தில் சென்ற விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பயன்படுத்திய அதி சொகுசு கார் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அதில் இருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் கைது செய்யப்பட்ட நபர் கார் உள்ளிட்ட போதை பொருள் யாவும் அக்கரைப்பற்று பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

மஹிந்தவிற்கு சத்திர சிகிச்சை நடந்தது உண்மையே!

இலஞ்சம் வாங்கிய போது பாடசாலை அதிபர் வசமாக சிக்கினார்!

யாழில் ஆவா குழுக் காவாலிகளின் இராணுவப்பிரிவின் ஆயுதக் களஞ்சியம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது!!

கிளிநொச்சியில் கண் மாபியாக்களின் கொடூரம்!! 71 மாணவர்களின் கண்களுக்கு நடந்தது என்ன? பெண் வைத்திய அதிகாரி பிரியந்தினி மிரட்டப்பட்டது ஏன்?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற NCG பஸ் பாரிய விபத்துக்குள்ளானது!!

கிளிநொச்சியில் பெண் வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கத்தை அலங்கோலப்படுத்தியவர் யார்??

யாழில் நண்பர்களுடன் தேனீர் குடித்துக்கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட துயரம்!!

சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்து!! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்!! (Photos)

பிரதமர் மகிந்தவின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி மகிந்தவின் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த கில்லாடிக்கு நடந்த கதி!!

Related Posts