காணிப்பிரச்சினை தொடர்பில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் பலி.

மட்டக்களப்பில் காணிப்பிரச்சினை தொடர்பில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அல் மஜ்மா மேற்கு வயல் பிரதேசத்தில் தாய் மாமனுக்கும் மருமகனுக்கும் ஏற்பட்ட கை கலப்பில் தாய் மாமன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அல் மஜ்மா மேற்கு முள்ளிவட்டவான் விவசாய கண்டத்தில் உள்ள வயல் காணி தொடர்பாக சகதோரர் ஒருவருக்கும் அவரது சகோதரிக்கும் இடையில் காணி தகராரு சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இன்று  சகோதரியின் மகனுக்கும் தாய் மாமனுக்கும் ஏற்பட்ட தகராரே இந்த கொலைக்கான காரணம் என்று ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

கொலை செய்யப்பட்டவரின் தாயார் சேகு இஸ்மாயில் உம்மு சல்மா என்பவர் கருத்துத் தெரிவிக்கையில்,  நானும் எனது மகனும் வயலுக்கு உரம் எறிவதற்கு வந்த போது வயலக்குள் எனது மகளின் மகன் வேலை செய்து கொண்ருந்தார்.

அப்போது எனது மகன் ஏன் எனது காணிக்குள் வந்தாய் என்று எனது பேரனிடம் கேட்ட போது, அவருக்கு அடித்து வெட்டிவிட்டு, என்னிடம் உனது மகனை வெட்டியுள்ளேன் கொண்டு போ என்று சொலிவிட்டு எனது பேரன் சென்று விட்டான் எனத் தெரிவித்தார்.மேலும் இது தொடர்பாக முள்ளிவட்டவான் விவசாய அமைப்பு தலைவர் ஐ.எல்.எம். முஸ்தபா கருத்து தெரிவிக்கையில்,நானும் என்னுடன் மற்றுமொரு விவசாயியும் முச்சக்கர வண்டியில் வரும் போது உசனார் பௌசான் என்பவர் எனது மாமாவை வெட்டி விட்டேன் அவரை உங்கள் ஆட்டோவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுங்கள் என்று தெரிவித்தார்.

அவருடன் நானும் என்னுடன் வந்தவர்களும் வந்து பார்த்த போது அவர் இறந்து விட்டார் நீங்கள் அம்புலன்ஸ்சுக்கு அறிவியுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றார் என்று தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் மீராவோடை மாஞ்சோலை பள்ளிவாயில் வீதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அலியார் ஹமீட் வயது 38 என்பவரே உயிரிழந்துள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் வாழைச்சேனை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாழைச்சேனை காவல்துறையினர் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Posts

மஹிந்தவிற்கு சத்திர சிகிச்சை நடந்தது உண்மையே!

இலஞ்சம் வாங்கிய போது பாடசாலை அதிபர் வசமாக சிக்கினார்!

யாழில் ஆவா குழுக் காவாலிகளின் இராணுவப்பிரிவின் ஆயுதக் களஞ்சியம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது!!

கிளிநொச்சியில் கண் மாபியாக்களின் கொடூரம்!! 71 மாணவர்களின் கண்களுக்கு நடந்தது என்ன? பெண் வைத்திய அதிகாரி பிரியந்தினி மிரட்டப்பட்டது ஏன்?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற NCG பஸ் பாரிய விபத்துக்குள்ளானது!!

கிளிநொச்சியில் பெண் வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கத்தை அலங்கோலப்படுத்தியவர் யார்??

யாழில் நண்பர்களுடன் தேனீர் குடித்துக்கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட துயரம்!!

சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்து!! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்!! (Photos)

பிரதமர் மகிந்தவின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி மகிந்தவின் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த கில்லாடிக்கு நடந்த கதி!!

Related Posts