காதலிக்கு வீடியோ அழைப்பு ஏற்படுத்தி தற்கொலை செய்த இளைஞன்: யாழில் விபரீத சம்பவம்!

யாழ்ப்பாணம், நாச்சிமார் கோயிலடியில் தங்கியிருந்த இளைஞன் ஒருவர், காதலிக்கு வீடியோ அழைப்பை ஏற்படுத்தி தூக்கில் தொங்கி உயிரிழந்த விபரீத சம்பவம் நேற்று (16) இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியில், நாச்சிமார் கோயிலடியை அண்மித்த மேல்மாடி கட்டடத் தொகுதியில் நேற்று மாலை இந்த சம்பவம் நடந்தது.

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல அச்சகத்தில் கணினி வடிவமைப்பாளராக பணியாற்றி வந்த வீரசிங்கம் ஸ்ரலின் ஜெயசிங்கம் (31) என்ற இளைஞனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தார்.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை பகுதியை சேர்ந்த இந்த இளைஞன், யாழ்ப்பாணத்திலுள்ள அச்சகத்தில் பணியாற்றி வந்தார். அவர் தங்கியிருந்த நாச்சிமார் கோயிலடி கட்டடத் தொகுதியிலிருந்து நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.

வவுனியாவை சேர்ந்த யுவதியொருவரை அவர் காதலித்து வருகிறார். சில முரண்பாடுகளையடுத்து, நேற்று திடீரென காதலியை வீடியோ அழைப்பில் தொடர்பு கொண்டு, தற்கொலை செய்யப் போவதாக கூறியுள்ளார்.

அவரை சமாதானப்படுத்த காதலி முயன்றார். ஆனால் முடியவில்லை. காதலி பார்க்கும் விதமாக தொலைபேசியை அவர் வைத்த போது, காதலி அழைப்பை துண்டித்து விட்டு, உடனடியாக அவர் பணியாற்றிய நிறுவனத்திற்கு தகவல் வழங்கினார்.

அச்சக த்தினர்  உடனடியாக இளைஞனின் தங்குமிடத்திற்கு விரைந்து சென்றனர். அவர் சென்ற போது, இளைஞனின் அறை பூட்டப்பட்டிருந்தது.

உள்ளெ நுழைந்த போது, இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருந்தார்.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Latest Posts

மஹிந்தவிற்கு சத்திர சிகிச்சை நடந்தது உண்மையே!

இலஞ்சம் வாங்கிய போது பாடசாலை அதிபர் வசமாக சிக்கினார்!

யாழில் ஆவா குழுக் காவாலிகளின் இராணுவப்பிரிவின் ஆயுதக் களஞ்சியம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது!!

கிளிநொச்சியில் கண் மாபியாக்களின் கொடூரம்!! 71 மாணவர்களின் கண்களுக்கு நடந்தது என்ன? பெண் வைத்திய அதிகாரி பிரியந்தினி மிரட்டப்பட்டது ஏன்?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற NCG பஸ் பாரிய விபத்துக்குள்ளானது!!

கிளிநொச்சியில் பெண் வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கத்தை அலங்கோலப்படுத்தியவர் யார்??

யாழில் நண்பர்களுடன் தேனீர் குடித்துக்கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட துயரம்!!

சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்து!! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்!! (Photos)

பிரதமர் மகிந்தவின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி மகிந்தவின் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த கில்லாடிக்கு நடந்த கதி!!

Related Posts