காதல் மயக்கத்தில் பட வாய்ப்புகளை இழந்த சிம்பு பட நடிகை.. சினிமாவுக்கு முழுக்கு போட்ட சோகம்

தமிழில் மயக்கம் என்ன என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யா. இந்தப் படத்தில் அவர் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ஒரு தைரியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

மயக்கம் என்ன திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவர் பல விருதுகளை பெற்றார். அதை தொடர்ந்து அவர் சிம்புவுடன் இணைந்து ஒஸ்தி திரைப்படத்தில் நடித்தார். அழகான நடிகையாக ரசிகர்களை கவர்ந்த இவர் தமிழில் முன்னணி நடிகையாக வருவார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் ஒஸ்தி படத்தின் தோல்விக்கு பிறகு இவருக்கு தமிழில் எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதன்பிறகு அவர் பெங்காலியில் ஒரு திரைப்படத்திலும், தெலுங்கில் சில திரைப்படங்களிலும் நடித்தார். ஆனால் அவருக்கு அங்கும் எந்த பட வாய்ப்பும் சரியாக கிடைக்கவில்லை.

அந்த சமயத்தில் அவர் மயக்கம் என்ன திரைப்படத்தில் தன்னுடன் நடித்த சுந்தர் ராமுவுடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப் பில் இருந்தார். இரண்டு பேரும் நெருக்கமாக பழகி காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தங்கள் காதலை முறித்துக் கொண்டு பிரிந்து விட்டனர்.

இந்த காதலால் அவர் சினிமாவில் தன்னுடைய மார்க்கெட்டையும் இழந்தார். கடந்த 2013-ம் ஆண்டுக்குப் பிறகு அவர் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. மேலும் அவர் சினிமா துறையை விட்டு விலகுவதாகவும் சமூக வலைதளங்களில் அறிவித்தார்.

அதன்பிறகு ரிச்சா அமெரிக்காவுக்கு சென்று பிசினஸ் சம்பந்தப்பட்ட தன்னுடைய படிப்பை தொடர்ந்தார். அங்கு படிக்கும் போது சக மாணவருடன் காதல் வயப்பட்டு அவரை திருமணமும் செய்து கொண்டார். தற்போது அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

தன்னுடைய முதல் படத்திலேயே அனைவரும் வியந்து பார்க்கும் அளவிற்கு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இந்த நடிகை தன்னுடைய காதலால் தடுமாறி பல பட வாய்ப்புகளை இழந்து இன்று சினிமா துறையை விட்டே விலகியுள்ளார்.

Latest Posts

மஹிந்தவிற்கு சத்திர சிகிச்சை நடந்தது உண்மையே!

இலஞ்சம் வாங்கிய போது பாடசாலை அதிபர் வசமாக சிக்கினார்!

யாழில் ஆவா குழுக் காவாலிகளின் இராணுவப்பிரிவின் ஆயுதக் களஞ்சியம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது!!

கிளிநொச்சியில் கண் மாபியாக்களின் கொடூரம்!! 71 மாணவர்களின் கண்களுக்கு நடந்தது என்ன? பெண் வைத்திய அதிகாரி பிரியந்தினி மிரட்டப்பட்டது ஏன்?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற NCG பஸ் பாரிய விபத்துக்குள்ளானது!!

கிளிநொச்சியில் பெண் வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கத்தை அலங்கோலப்படுத்தியவர் யார்??

யாழில் நண்பர்களுடன் தேனீர் குடித்துக்கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட துயரம்!!

சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்து!! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்!! (Photos)

பிரதமர் மகிந்தவின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி மகிந்தவின் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த கில்லாடிக்கு நடந்த கதி!!

Related Posts