கிறிஸ்தவ கல்லறை சேதம்; பதிலடியாக இந்து மயானம் சேதம்: யாழில் சாதிய மோதலை தூண்ட திரைமறைவு முயற்சி?

மயானத்தை சமரசம் உலாவும் இடம் என்பார்கள். அங்குதான் பேதமிருக்காது எல்லோரும் உயிரற்ற சடலங்களே. ஆனால், அண்மைக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் மயானங்களை வைத்தே நிறைய சச்சரவுகள் உருவாக்கப்படுகிறது. சமூகங்களிற்குள் உருவாகும் சின்னச்சின்ன சச்சரவுகளை, ஊதிப் பெருப்பித்து, அரசியல் செய்ய பல வல்லூறுகள் காத்திருக்கும் அப்படியொரு சம்பவமே வதிரி ஆலங்கட்டை இந்து மயானத்தில் நடந்துள்ளது.

அடக்கம் செய்யப்பட்ட கிறிஸ்தவரின் கல்லறையை அடித்து உடைத்ததாக, சமூக ஊடகங்களில் சிலர் பரப்பும் தகவல் உண்மையா?, இதன் பின்னணி என்ன என்பதை அலசும் செய்தித் தொகுப்பு இது.

நெல்லியடி சந்தியிலிருந்து திக்கம் கடற்கரை நோக்கி செல்லும் போது, வதிரி சந்திக்கு அப்பால், இடதுபக்கமாக செல்லும் வீதியில் அமைந்துள்ளது வதிரி ஆலங்கட்டை இந்து மயானம்.

7 கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த  சுமார் 840 குடும்பங்கள் இந்த மயானத்தை பாவிக்கிறார்கள். மயானம் சமரசம் உலாவும் இடம் என்பது ஆலங்கட்டை இந்து மயானத்திற்கும் பொருந்தும். எல்லா சமூகத்தினரும், சமயத்தினரும் உடல்களை தகனம் செய்யலாம்.

வடமராட்சியில் ஏனைய மயானங்களில் சாதிக்கு ஒரு எரியூட்டும் படுக்கை உள்ளது. ஆலங்கட்டை இந்து மயானத்தில் மட்டுமே, ஒரே படுக்கையில் உயிரிழந்த மனிதர்களை தகனம் செய்யும் நடைமுறையுள்ளது. இதன் அர்த்தம் வதிரியில் சமத்துவம் நிலவுகிறதென்பதல்ல. ஆனால், முன்னோக்கிய நடவடிக்கைகள் உள்ளன என்பதை பாராட்டத்தானே வேண்டும்!

ஆலங்கட்டை மயானத்தில் தகனம் செய்யும் கிராம சேவகர் பிரிவுகளில் 16 மெதடிஸ்த மிசன் குடும்பங்கள் வாழ்கின்றன. அதில் 10 இற்கும் குறைவான குடும்பங்கள் தற்போது பிரதேசத்தில் வசிக்கின்றன. அந்த சமூகத்தை சேர்ந்தவர்களும் மயானத்தில் உடலை அடக்கம் செய்து வந்தனர்.

அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டு, இனம்தெரியாதவர்களால் உடைக்கப்பட்ட பெயர் பலகை

எனினும், இடப்பற்றாக்குறை காரணமாக சில வருடங்களின் முன்னர் மயான நிர்வாகம், அங்கு உடல்களை அடக்கம் செய்து கல்லறை கட்டுவதை நிறுத்தும் தீர்மானத்தை எடுத்தது. மாறாக அனைவரும் பேதமின்றி உடல்களை தகனம் செய்யலாமென தீர்மானிக்கப்பட்டது. இது கரவெட்டி பிரதேசசபையினால் தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டது.

இது கரவெட்டி பிரதேசசபை எடுத்த விபரீத தீர்மானமல்ல. நாடு முழுவதும் மின் மயான முறைதான் ஊக்குவிக்கப்பட்டு, பரவலடைந்து வருகிறது.

கிறிஸ்தவ கல்லறை உடைக்கப்பட்டதா?

ஆலங்கட்டை இந்து மயானத்தில் மெதடிஸ்த மிசன் சமயத்தவர்களின் கல்லறை உடைக்கப்பட்டதாக ஓரிரு தனிநபர்களால் பிரச்சாரம் செய்யப்பட்டது.

அது குறித்து தமிழ்பக்கம் சுயாதீனமாக விசாரித்ததில் பல தகவல்களை பெற்றது.

25 வருடங்களின் முன்னர் உயிரிழந்து, அடக்கம் செய்யப்பட்ட ஒருவரிற்கு பெயர்ப்பலகை அமைக்க, அவர்களின் உறவினர்கள் என கூறிய சிலர் கரவெட்டி பிரதேசசபையில் அனுமதி கோரியுள்ளனர்.

பதிலடியாக உடைக்கப்பட்ட மயான கட்டுமானம்

எனினும், கரவெட்டி பிரதேசசபை அதற்கான அனுமதியை வழங்கவில்லை. பிரதேசசபை தீர்மானத்திற்கமைய அங்கு புதிய கல்லறை கட்டுமானங்கள் செய்ய முடியாது என்பதையும், அவர்களிற்கு அனுமதியளித்தால், புதிய கல்லறை கட்டுமானங்கள் அனுமதிக்கப்பட வேண்டுமென்றும் சுட்டிக்காட்டினர்.

விடயம் அந்தளவில் முடியவில்லை.

பயணத்தடை விதிக்கப்பட்டு, நாடு முழுவதும் முடக்கப்பட்டிருந்த சமயத்தில், திடீரென அங்கு பெயர்ப்பலகை கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. மாலை வேளையில் கட்டுமானம் ஆரம்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பயணத்தடைக்குள் சட்டவிரோதமாகவே இந்த கட்டுமானம் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து, எழுந்த சர்ச்சையை தொடர்ந்து இரவோடு இரவாக புதிதாக அமைக்கப்பட்ட கல்லறையின் பெயர் கட்டுமானம் உடைக்கப்பட்டது. அதை யார் செய்தது என்பது தெரியாது. இதை சாதி பிரச்சனையாக சித்தரிக்க தலைகீழாக நின்று முயற்சிக்கும் சிலர், கரவெட்டி பிரதேசசபை தவிசாளர் மற்றும் சிலரின் பின்னணியில் அது நடந்ததாக குற்றம்சாட்டினர். எனினும், அது தவறான குற்றச்சாட்டு என்றே அறிய முடிகிறது.

கல்லறைக்கு உரியவரின் உறவினர்கள் என குறிப்பிடும் சிலரால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் ஒரு முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கல்லறை கட்டுமானத்தை உடைத்துதான் இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டுமா? உடைப்பது நாகரிகமான அணுகுமுறையா என்ற கேள்விகள் உள்ளன. ஆனால், அப்படியான சூழ்நிலையை அடக்கம் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் சட்டவிரோத கட்டுமாணத்தின் மூலம் ஏற்படுத்தியுள்ளனர் என்பதையும் கவனித்தே தீர வேண்டும்.

பதிலடியாக உடைக்கப்பட்ட கட்டுமானங்கள்

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கட்டுமானங்கள் உடைக்கப்பட்டதை தொடர்ந்து, மயானத்தில் சட்டபூர்வமாக அமைக்கப்பட்ட சில கட்டுமானங்கள் உடைக்கப்பட்டன. மயானத்தின் வெளிப்புறத்தில் தோரண வடிவத்தில் அமைக்கப்பட்ட கட்டுமாணங்கள் இரவோடு இரவாக உடைக்கப்பட்டது.

கல்லறை பெயர்ப்பலகை உடைக்கப்பட்டதற்கு பதிலடியாக உடைக்கப்பட்டதா? அல்லது இந்த விடயத்தை வைத்து சாதிய மோதலை தூண்டி விட முயலும் தரப்புக்களால் உடைக்கப்பட்டதா என்பது கண்டறியப்பட வேண்டியது.

மயான நிர்வாக குழுவின் கூடுதல் பொறுப்பு

இந்து மயானம் என்ற பெயர் பலகை தற்போதுதான் வந்தது, முன்னர் அப்படியிருக்கவில்லையென இப்பொழுது சிலரால் கூறப்படுகிறது. இதை கரவெட்டி பிரதேசசபை தவிசாளர் மறுத்துள்ளார். 1949ஆம் ஆண்டு யாப்பிலேயே, ஆலடி இந்து மயானம் என குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறார்.

பின்னர், இடைச்செருகலாக, மெதடிஸ்த மிசனை சேர்ந்தவர்களின் சடலங்களையும் அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டது.

அத்துடன், மயான நிர்வாக குழுவில் மெதடிஸ்த மிசன் சமயத்தினரும் அங்கம் வகித்து வந்துள்ளனர். கடந்த நிர்வாக சபையின் செயலாளராக பதவி வகித்தவரும் மெதடிஸ்த சமயத்தவரே.

எனினும், இந்த விதமான சாதி, சமய குற்றச்சாட்டுக்களுடன் அரசியல் செய்ய முயலும் தரப்பினருக்கும் இடமளிக்காத விதமான நிர்வாகத்தை செயற்படுத்துவது மயான நிர்வாக சபையின் பொறுப்பு. மயான நிர்வாக தெரிவில் சாதி ரீதியான ஒதுக்கீடுகள் வழங்கும் அணுகுமுறை தவறு. அதை கடைப்பிடிக்கவே கூடாது. நிர்வாக செயற்பாட்டில் பங்கேற்கும் அனைவருக்குமிடையிலிருந்து தெரிவுகள் இடம்பெற வேண்டும்.

அதேபோல, அந்த நிர்வாக செயற்பாட்டில் அனைத்து தரப்பினரும்- சாதி, சமய வேறுபாடின்றி பங்கேற்கும் சூழலை, மயான நிர்வாக சபை கூடுதலாக உறுதிப்படுத்த வேண்டும்.

இந்து தான் பிரச்சனையே!

ஆலங்கட்டை இந்து மயானம் என்ற பெயரை மாற்றும் படி கடந்த 2 வருடங்களாக மெதடிஸ்த மிசன் சமூகத்தின சிலர் பிரதேசசபையிடம் கோரி வருகின்றனர். இருப்பது 10 இற்கும் உட்பட்ட குடும்பங்கள்தான்.

கரவெட்டி பிரதேசசபையின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிடுகையில், “கடந்த 2 வருடங்களாக பிரதேசசபையிடம் மெதடிஸ்த மிசன் மதத்தினர் இந்து மயானம் பற்றி பேசி வருகிறார்கள். அண்மையில் ஒருவர் வந்து பேசும்போது, தாம் இயேசு கிறிஸ்துவை மட்டுமே கடவுளாக கொண்டவர்கள். மரண அஞ்சலி விபரம் ஒலிபெருக்கியில் அறிவிக்கும் போது, இந்து மயானத்தில் அடக்கம் செய்வதாக அறிவிப்பது நல்லதல்ல என எமது மக்கள் கருதுகிறார்கள். கேட்பவர்களும் எங்களை இந்துக்களென நினைத்து விடுவார்கள் என்றார். எனினும், 1949ஆம் ஆண்டு யாப்பில் உள்ளபடி, இந்து மயானம் என்ற பெயரை மாற்ற முடியாதென நாம் கூறிவிட்டோம் என்றார்.“

அந்த மயானத்தில் உடல்களை அடக்கம் செய்யும் மெதடிஸ்த மிசன் குடும்பங்களுடன் பேசியபோது,

“இந்துக்களின் உடல்கள் ஒரே இடத்தில் எரிக்கப்படுகின்றன. ஆனால் அவர்களிற்கு அதிக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மினசரியினரின் உடல்கள் அடக்கம் செய்யப்படுவதால் அதிக இடம் தேவை. ஆனால் எமக்கு சிறிய இடம்தான் உள்ளது.

மயான பராமரிப்பு சபையிலும் நிறைய பிரச்சனைகள் உள்ளன. அவர்கள் எடுக்கும் தீர்மானங்கள் பலருக்கு தெரியாது. யாராவது உயிரிழந்து, சடங்களை அடக்கம் செய்ய வழங்கப்படும் பற்றுச்சீட்டுத்தான், அந்த சபையின் அங்கத்துவ சீட்டு.

பொதுமயானம் என்றுதான் பதிவுகள் உள்ளன. இப்பொழுது சில வருடங்களாகவே இந்து மயானம் என பெயர்ப்பலகை நாட்டியுள்ளனர். அதையே அகற்ற கோருகிறோம்“ என்றனர்.

சாதி அரசியல்

மெதடிஸ்த மிசன் சமூகத்தினருடன் தொடர்புபட்ட இந்த விவகாரத்தை சாதி அரசியலாக்கி, நன்மைபெறும் முயற்சியில் அந்த பிரதேசத்தில் சிலர் ஈடுபட்டனர். மெதடிஸ்த மிசன் சமயத்தில் ஒரு சமூகத்தினர் மட்டுமிருக்கவில்லை. பல்வேறு சமூகத்தினர் உள்ளனர்.

கரவெட்டி பிரதேசசபை உறுப்பினரான நாகேந்திரன் புஷ்பவசந்தன் என்பவர் சாதிய மோதலை தூண்டும் விதமான நச்சு கருத்துக்களை வெளியிட்டிருந்தார். தமது சமூகத்தினரை திரட்டி, வெளியிடத்திலிருந்து (வேறொரு குறிப்பிட்ட சாதியினரை) சடலங்களை கொண்டு வந்து தகனம் செய்ய அனுமதிக்க விடாமல் போராட்டம் செய்வோம் என மிரட்டி வீடியோ வெளியிட்டிருந்தார். மக்கள் பிரதிநிதியாக அரசியல் களத்திற்கு வருபவர்கள், சமூகங்களிற்குள் பிளவை ஏற்படுத்துபவர்களாக அல்லாமல், சமூகங்களை ஒருங்கிணைத்து முன்னோக்கி செல்பவர்களாக செயற்பட வேண்டும்.

அந்த பிரதேசத்தில சமூகங்களிற்கிடையிலுள்ள சக வாழ்வை சீரழித்து, அதில் அரசியல் ஆதாயம் தேட முயலும் நச்சுக்களைகளை இனம்கண்டு, விழிப்புடன் செயற்பட வேண்டியது பிரதேச மக்களின் கடமை.

அத்துடன், கல்லறை பெயர் பலகை உடைக்கப்பட்ட இடத்தை அங்கஜன் இராமநாதனின் செயலாளரும் வந்து பார்த்தார். அங்கஜன் இராமநாதனின் தரப்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு மண் கவ்விய விளையாட்டு உத்தியோகத்தர் ஒருவரும் அதை சாதி பிரச்சனையாக்க முயன்றார். அவர் பேசும், மத மோதல், சாதி மோதல் போல சித்தரிக்கும் வீடியோ ஒன்றும் வெளியானது.

அங்கஜன் இராமநாதன் தரப்பினர் கடந்த தேர்தலில் சாதிய வாக்குகளை குறிவைத்தே செயற்பட்டனர். ஒடுக்கப்பட்ட சமூகங்கள் வாழும் பகுதிகளிலேயே இவர்களில் இலவசம், வேலைவாய்ப்பு பிரச்சாரங்கள் எடுபட்டன. மக்கள் மத்தியில் மயக்கத்தை ஏற்படுத்தியது. இதனாலோ என்னவோ, அங்குள்ள கட்சிக்காரர்கள் சாதிய விவகாரத்தை வைத்து அரசியல் செய்யலாமென நினைக்கிறார்கள் போலும்!

யுத்தத்தின் பின்னராக காலகட்டத்தில் பல்வேறு தேர்தல்களில் ஆளுந்தரப்பின் கைப்பொம்மைகளாக பணம், பதவிக்காக சாதிய மோதல்களை ஏற்படுத்தி, வாக்கு பெறலாமென முயன்ற பலர் இன்று அடிச்சுவடே இல்லாமல் வாழும் உதாரணங்களாக உள்ளனர். மயானத்தை வைத்து சாதிய மோதலை ஏற்படுத்த முயல்பவர்கள் இந்த வாழும் வரலாறுகளை படித்து அறிய வேண்டும். அல்லது, தாம் வாழும் சமுதாயத்தினாலேயே நிராகரிக்கப்பட்டவர்களாகுவர்.

thank you page tamil
Latest Posts

யாழ்ப்பாணம் அராலியில் கொடூர விபத்து!!

நாட்டை திறப்பதா மூடுவதா இராணுவத் தளபதியின் புதிய அறிவிப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் வலையில் மாட்டிய புள்ளி சுறா!!

கணவர் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய கொடூர மனைவி!! துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்!!

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறித்து இன்று எடுக்கப்பட்ட முடிவு!!

பெண்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள்!!

பேஸ்புக் காதலியை திருமணம் முடித்த அம்பாறை இளைஞனுக்கு பெற்றோர் செய்த அலங்கோல வேலை!!

இலங்கையில் இளம் பெண் மருத்துவரின் உயிரைப் பறித்த கொரோனா!

எந்த ஒரு நாட்டிலும் இப்படி ஒரு அநியாயம் நடக்குமா?

அண்ணனின் இழப்பால் ஏற்பட்ட விரக்தி! யாழில் 24 வயது பிரகாஸ் விபரீத முடிவு!!

பிக்பாஸ் சீசன் 5 இல் இந்த பிரபல மாடல் கலந்துகொள்கிறாரா..? தீயாய் பரவும் தகவல் : இவங்க வந்த விறுவிறுப்பு தான் : காத்திருக்கும் ரசிகர்கள்

பிக்பாஸ் சீசன் 5 இல் இந்த பிரபல மாடல் கலந்துகொள்கிறாரா..? தீயாய் பரவும் தகவல் : இவங்க வந்த விறுவிறுப்பு தான் : காத்திருக்கும் ரசிகர்கள்

அண்ணனின் இழப்பால் ஏற்பட்ட விரக்தி! யாழில் 24 வயது பிரகாஸ் விபரீத முடிவு!!

யாழில் விடுதலை புலிகள் அமைப்பின் படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது!!

பெண்கள் எந்த ராசியில் பிறந்த ஆண்களைத் துரத்தி துரத்தி காதலிப்பார்கள் தெரியுமா?

பெண்களின் இந்த தவறுகளால் தான் இடுப்பு சதை அதிகரிக்கின்றது!! குறைக்க சூப்பரான டிப்ஸ் இதோ…

பக்கத்து வீட்டு பொடியனுடன் காமலீலை சிக்கிய 18 வயது மாணவி!

திடீரென்று பாம்பாக மாறிய இளைஞன்!! சற்றுமுன் மட்டக்களப்பில் நடந்த அதிர்ச்சிச் சம்பவம் ( வீடியோ இணைப்பு)

தாக்குதலுக்கு உள்ளாகி 19 வயதான இளைஞர் வைத்தியசாலையில் அனுமதி.

யாழில் மின்னல் தாக்கி 35 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை பரிதாப மரணம்! (Photos)

15 வயது மாணவி உயிரிழப்பு:பரிசோதனையில் தெரியவந்த உண்மை!

ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்கு ஆதரவு டளஸ் அழகப்பெரும

28 வயதான இளம் ஆசிரியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்.

கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் மின்னல் தாக்கத்தில் வேம்பு பிளந்து விழுந்த காட்சிகள்!

மகளை இரண்டாம் தாரமாக்கிய இளைஞன் மீது அசிட் வீசிய அம்மாவுக்கு நடந்த கதி!

இலங்கையில் வரும் 15ம் திகதியிலிருந்து பாடசாலைகள் ஆரம்பம்..!! சற்று முன்னர் வெளிவந்த முக்கிய அறிவித்தல்.

இலங்கையில் முடக்க நிலை தளர்த்தப்படுவது தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்

தாம்பத்திய வாழ்வுக்கு அவசியமான யோனி என்றால் என்ன?

இன்றைய இராசி பலன்கள் (24.09.2021)

யாழில் வெளிநாடு செல்லவிருந்த இளம் பெண் திடீர் மரணம்

கஜேந்திரன் எம்.பியை பிடுங்கி இழுத்துச் செல்லும் பொலிஸார்

யாழில் தொடரும் துயரம் அபிவிருத்தி உத்தியோகத்தர் உயிரிழப்பு!

இரவேடு இரவாக அமெரிக்கவுக்கு விற்கப்பட்ட இலங்கை மின் உற்பத்தி நிலையம் வெடிக்கும் போராட்டம்

பசிலின் திட்டம் பலிக்குமா தமிழர்களுக்கு ஆப்பு வைப்பாரா??

இலங்கை வந்த 41 வயது சுற்றுலாப் பயணி சடலமாக மீட்பு

பதுக்கிய பால்மா அதிகாரிகளின் மேற்பார்வையில் விற்பனை

சற்று முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கைது!

கல்முனையில் சரமாரியான வாள்வெட்டு தாக்குதல் : இளைஞர் அஸ்ரப் வைத்தியசாலையில் அனுமதி

லண்டனில் கடற்கரை ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட புலம்பெயர் தமிழ் பெண் மருத்துவர்!!

‘எனக்கு கல்யாணம் செய்து வையுங்கள்’: நடுவீதியில் உட்கார்ந்து இளைஞன் போராட்டம்!

வெளிநாட்டில் திருமணம் முடித்த இளம் குடும்ப பெண் யாழில் திடீர் மரணம்

யாழில் நடைபெறும் கொடுமைகள்!!

போட்டால் பைசர் தடுப்பூசி தான் போடுவேன் என அடம்பிடித்தவர் கொரோனா தொற்றால் மரணம்!!

யாழ் உடுவில் பிரதேசசெயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தமிழினி பிரபாகரன் கொவிட் தொற்றால் மரணம்!!

அடித்து வீழ்த்தப்பட்ட தமிழ்த்தேசியம்

மக்கள் பணத்தை சுரண்டி எடுத்த கோட்டா அரசு

இலங்கை முழுவதும் ஆயுத படை கோட்டாபய அதிரடி!!

மனைவியை திட்டமிட்டு கொலை செய்த சிங்கள வர்த்தகர்!! கொரோனாவால் இறந்தது என கதை கட்டி பிடிபட்டார்!! நடந்தது என்ன?

திடீரென மாணவிக்கு ஏற்பட்ட சுகயீனம் – ஒரு மணித்தியாலத்தில் மரணம்

புதிய நடைமுறையின் கீழ் பாடசாலைகளை மீண்டும் திறக்க திட்டம்

இன்றைய ராசிபலன் (23.09.2021)

மைத்திரி கோட்டாபய கொலை சூழ்ச்சியில்!!

காதலனுடன் காரில் சுற்றுலா சென்ற பிரபல நடிகை நீரில் மூழ்கி உயிரிழப்பு

மஹிந்தவை திணற விடும் சாணக்கியன்

இஸ்லாமியர்களின் தெய்வமான அல்லாஹ் ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியா? சபையில் குழப்பம்

லாஸ்லியாவின் முகப்பருக்கள் மறைய இதுதான் காரணமாம்; அவரே வெளியிட்ட தகவல்!

இலங்கை முழுவதும் ஆயுதம் ஏந்திய படையினர் – வெளியானது விசேட அறிவிப்பு

யாழில் சாராயப் போத்தலில் வைத்த வாயை எடுக்காமல் சாராயம் குடிக்கும் போட்டி!! ஒருவன் பலி!!

கொழும்பில் மற்றுமொரு காணியையும் குத்தகைக்கு வழங்குகிறது அரசாங்கம்

பிரதமர் மகிந்தவின் திடீர் மனமாற்றம்!

தடுப்பூசி செலுத்திய பின் மயங்கி விழுந்த இளைஞர் யுவதிகளால் பரபரப்பு!

யாழ் பாசையூரில் அடாவடி அதிரடி கைது

மேலாடை விலக கருப்பு நிற ப்ரா தெரியும்படி போஸ் குடுத்த நிவேதா தாமஸ்

அரசியல்கைதிகள் மீது ஆண் உறுப்பு மலவாசல் போன்றவற்றில் மிக மோசமான பாலியல் சித்திரவதை!! கூறுவது யார்?

கிண்ணியாவில் கோர விபத்து: ஸ்தலத்திலேயே உயிரிழந்த நபர்!

கொழும்பைச் சொந்த இடமாகக் கொண்ட லண்டனில் வசிக்கும் இளம் தமிழ்க் குடும்பப் பெண்ணின் மார்பகங்களில் சிங்கள ஆணின் பெயர் பச்சை குத்தப்பட்டுள்ளது!! கணவன் விவவாகரத்துக்கு விண்ணப்பித்தார்.

இலங்கையில் கொடுமை லாஸ்லியா அதிரடி

யாழ் அரியாலையில் கணவனை திருகுபலகையால் அடித்து கொன்ற பெண்ணின் கள்ளக்காதலன் கொடூர கொள்ளையன்!! அவனுக்கு பல பாலியல் வல்லுறவு வழக்கும் உள்ளது!!

இன்றைய இராசிபலன்கள் (22.09.2021)

பாலியல் இணையத்தளத்திற்கு அடிமையான 19 வயது சிங்கள மாணவி 15 வயது சிறுவன் மீது வல்லுறவு!!

வேப்பமரத்தின் அடியிலிருந்து மிகவும் பழமையான சிவலிங்கம் மீட்பு.

கோட்டாவிற்கு எதிராக போராட்டம் தமிழீழ அரசாங்கத்தின் அதிரடி

ஊரடங்கில் யாழில் திடீரென கூடிய மக்கள் பெரும் குழப்பம்

கிசுகிசு” பேசுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றதா? அதிர்ச்சியடையாமல் இதை படியுங்கள்…

இலங்கை தொடர்பில் லாஸ்லியா விடுத்த அதிரடி அறிவிப்பு!

ஒரே ஒரு கேள்வி!! பரிதாபமாக உயிரைவிட்ட இளம் பெண் மருத்துவர்!!

இளம் பாடகி YOHANI இலங்கை இந்திய கலாசார தூதுவராக நியமனம்.

அக்காவிடம் மாட்டிக்கொண்டு துடிதுடித்து உயிரிழந்த 5 வயது சிறுவன்.

மீண்டும் பொருட்களின் விலைகளில் மாற்றம்!!

யாழில் இரண்டு பேரை காதலித்த யுவதியின் காதல் லீலை.

வன்னியூர் சஜிதாவின் ஆபாச வீடியோவை வெளியிட்டவர் இவர்தான்.

இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு சோகத்தில் கிளிநொச்சி!

வவுனியாவிலிருந்து பிரான்ஸ்சிற்கு கொரோனாத் தொற்றுடன் தப்பி வந்த5 பேர்!! அவதானம் பிரான்ஸ் தமிழர்களே!!

ஈஃபில் கோபுரத்தில் இருந்து கயிற்றின் மீது நடந்த இளைஞர்…

பர்கர் சாப்பிடும் போது வெளியே வந்தவரின் விரல் .. திகைத்த இளம் பெண்! சமூக ஊடகங்களில் வைரல்

பல்கலைக்கழக நுழைவிற்கான அனுமதி – வெளியாகியது வெட்டுப்புள்ளி!

முல்லைத்தீவு, மல்லாவியில் ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்த இளம் குடும்பப் பெண் துாக்கில் தொங்கி தற்கொலை!!

மின்பாவனையாளர்களுக்கு வெளிவந்ததுள்ள திடுக்கிடும் தகவல்

யாழ் பாசையூரில் அடாவடியில் ஈடுபட்ட எழுவர் ; அரை மணி நேரத்தில் கைது செய்த பொலிஸார்

தாயின் உயிரை பறித்த குழந்தை அதிர்ச்சி சம்பவம்

இலங்கையில் அத்தியாவசிய பொருட்தட்டுப்பாடு

வடக்கு மக்களுக்கான அவசர அறிவித்தல்!

லொஹானுக்கு மஹிந்த வைக்கப்போகும் ஆப்பு

பிரான்ஸ் நோக்கிப் பயணித்த பயணிகள் விமானம் நடுவானில் விபத்து!

விலையுயர்ந்த கார்களை வாங்கி குவிக்கும் விஜய் டிவி பிரபலங்கள்.. மத்திய அமைச்சரை விட அதிக வருமானமாம்.!

பூம்புகார் கொலை கூட்டுக்கொலை என சந்தேகம் – மேலுமொருவர் கைது..!!!

யாழில் இப்படி ஒரு நீதிபதியா… குவியும் வாழ்த்துக்கள்

தடுப்பூசியால் உடல் நிலையில் மாற்றங்கள்! அதிரடி அறிவிப்பு

பாடசாலை மாணவர்களையும் விட்டு வைக்காத தடுப்பூசி

வீட்டு எதிரில் சிறுநீர் கழித்தவர் அடித்துக் கொலை;

தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் உடல் நிலையில் மாற்றங்கள்!!

நீண்ட காலமாக உடலுறவு கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் விளைவு என்ன தெரியுமா?

தருமபுரம் பகுதியில் குழந்தை பிரசவித்த தாய் மறுநாள் மரணம்; கதறும் உறவுகள்!!

எச்சில் கையால் காகம் துரத்தமாட்டான் காரைநகரான்(தீவான்)!!!!!

போதையில் தாக்கினார் – திருப்பித் தாக்கினேன் – திருகுவளையால் கணவனை அடித்துக் கொன்ற மனைவி வாக்குமூலம்!

ஓக்டோபர் 1ஆம் திகதியின் பின்னரும் ஊரடங்குச் தொடருமா?? சன்ன ஜயசுமனRelated Posts

%d bloggers like this: