குடும்பத்தை கொடூரமான முறையில் கொன்ற வைத்தியர்!! வெளியான திடுக்கிடும் பின்னணி!!

கொரோனா வைரஸ் யாரையும் விட்டுவைக்காது என கடிதம் எழுதி வைத்துவிட்டு குடும்பத்தினரை கொடூரமாக கொன்றுவிட்டு, வைத்தியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இந்தியாவில் உத்திரபிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கல்யாண் பூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில், தடயவியல் பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் வைத்தியர் 55 வயதான சுஷில் சிங். இவரது மனைவி சந்திரபிரபா(50) மகன் ஷிகார் சிங் (21) மகள் குஷி சிங் (16).

இந்நிலையில், கடந்த 3ஆம் திகதி சுஷில் சிங் தனது மனைவி, குழந்தைகளை கொடூரமாக கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்து தப்பி சென்றுள்ளார். தேனீரில் மயக்க மருந்து கொடுத்து மனைவி சந்திரபிரபாவை சுத்தியலால் அடித்தும், மகன் ஷிகார் சிங், மகள் குஷி சிங் ஆகிய இருவரையும் கழுத்தை நெரித்தும் சுஷில் சிங் கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த கொலை தொடர்பாக சுஷில் சிங் எழுதிய கடிதத்தத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த கடிதத்தில், தான் குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மன அழுத்தத்தில் உள்ளதாகவும் கூறிய சுஷில், ‘கொரோனா யாரையும் விட்டுவைக்காது. எனது குடும்பத்தை பிரச்சினையில் விட்டுவிட்டு செல்ல விரும்பவில்லை. அவர்களை விடுதலை செய்து பிரச்சினைகளில் இருந்து வெளியேற்ற விரும்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

குடும்பத்தினரை கொடூரமாக கொலை செய்த பின்னர் வீட்டில் இருந்து வெளியேறிய சுஷில் தனது கைபேசியை துண்டித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு தலைமறைவான சுஷிலை தீவிரமாக தேடி வந்தனர்.

பின்னர், கான்பூர் மாவட்டம் சித்நாத் ஹட் பகுதியில் அழுகிய நிலையில் சுஷில் சிங் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். சித்நாத் ஹட் பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் அழுகிய நிலையில் பிணம் கிடப்பதை அப்பகுதியை சேர்ந்த இளைஞர் கண்டுபிடித்தார். இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார், அழுகிய நிலையில் கிடந்த உடலை கைப்பற்றினர். பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பிணமாக மீட்கபட்ட நபர் குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய டாக்டர் சுஷில் சிங் என்பது தெரியவந்துள்ளது.

இதேவேளை, கைப்பற்றப்பட்ட உடல் மிகவும் மோசமான நிலையில் சிதைந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், சுஷில் சிங்கின் ஆதார் அட்டை, கைபேசி, வாகன ஓட்டுநர் அனுமதி அட்டை உள்பட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்

Latest Posts

கொழும்பில் இருந்து யாழ்.சென்ற ரயிலில் மோதி மாணவன் பலி (PHOTO)

முன்னாள் காதலனுடன் உடல் உறவு கொண்ட சிங்களச் சிறுமி!! நேரில் பார்த்த தற்போதய காதலன் செய்த கொடூரம்!! !! (Photo)

புலமை பரிசில் பரீட்சையில் எழுந்துள்ள ச ர் ச் சை ! வி சா ர ணை ந ட த் த பரீட்சைகள் திணைக்களம் தீர்மா ன ம்

யாழில் 12 வயதுச் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்க முற்பட்ட 42 வயது இரண்டு பொண்டாட்டிக்கார மன்மதனை புரட்டி எடுத்த பொதுமக்கள்!!

சுழற்சி முறையில் மின்வெட்டு! சற்றுமுன்னர் வெளியான அட்டவணை

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

கடலில் நீராடச் சென்ற மூன்று சிறுமிகள் உட்பட நால்வருக்கு நேர்ந்த நிலை!

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்!! உத்தியோக பூர்வ அறிவிப்பு!!

யாழில் மாணவர்களை மோதித் தள்ளி வாகனம் – தப்பியோடிய சாரதி
Related Posts