குறிஞ்சாக்கேணி படகு விபத்து: நகரசபை தலைவருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி படகு விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீமுக்கு திருகோணமலை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று (10) வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 23ம் திகதி குறிஞ்சாக்கேணி பிரதேசத்தில் இழுவைப் படகு கவிழ்ந்ததில் ஏற்கனவே 03 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கிண்ணியா பொலிஸாரினால் இழுவை படகில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு அனுமதி வழங்கிய குற்றச்சாட்டில் நான்காவது சந்தேக நபராகக் குற்றம் சுமத்தப்பட்ட கிண்ணியா நகர சபை தவிசாளரின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறித்த தவிசாளர் சுகவீனமுற்ற நிலையில் மாத்திரைகளைப் பாவித்து வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த சந்தேக நபரான கிண்ணியா நகர சபை தவிசாளரை பிணையில் விடுவிக்குமாறும் எதிர்வரும் 16ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறும் நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் உத்தரவிட்டுள்ளார்.

Latest Posts

கொழும்பில் இருந்து யாழ்.சென்ற ரயிலில் மோதி மாணவன் பலி (PHOTO)

முன்னாள் காதலனுடன் உடல் உறவு கொண்ட சிங்களச் சிறுமி!! நேரில் பார்த்த தற்போதய காதலன் செய்த கொடூரம்!! !! (Photo)

புலமை பரிசில் பரீட்சையில் எழுந்துள்ள ச ர் ச் சை ! வி சா ர ணை ந ட த் த பரீட்சைகள் திணைக்களம் தீர்மா ன ம்

யாழில் 12 வயதுச் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்க முற்பட்ட 42 வயது இரண்டு பொண்டாட்டிக்கார மன்மதனை புரட்டி எடுத்த பொதுமக்கள்!!

சுழற்சி முறையில் மின்வெட்டு! சற்றுமுன்னர் வெளியான அட்டவணை

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

கடலில் நீராடச் சென்ற மூன்று சிறுமிகள் உட்பட நால்வருக்கு நேர்ந்த நிலை!

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்!! உத்தியோக பூர்வ அறிவிப்பு!!

யாழில் மாணவர்களை மோதித் தள்ளி வாகனம் – தப்பியோடிய சாரதி
Related Posts