கொஞ்ச நஞ்ச பேச்சாடா பேசினிங்க.. இது வெறும் ஆரம்பம் தான். – “மரண காட்டு காட்டிட்டான்பா” இலங்கையை மிரள வைத்த தீபக் சாஹர்.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!

தோல்வியின் விளிம்பிற்கு சென்ற இந்திய அணியை ஒற்றை ஆளாக தூக்கி நிறுத்தி வெற்றி பெற வைத்துள்ளார் தீபக் சஹார்.
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் சனகா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்களை எடுத்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய அசலங்கா 65 ரன்களும், அவிஷிங்கா 50 ரன்களும், கருணரத்னே 44 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை யுஸ்வேந்திர சாஹல் மற்றும் புவனேஷ்வர் குமார் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் திணறினர். முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய ப்ரித்வி ஷா 13 ரன்களுக்கும், ஷிகர் தவான் 29 ரன்களுக்கும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். இதன் பின்னர் களமிறங்கிய இஷான் கிஷான் 1 ரன்னும், மணிஷ் பாண்டே 37 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

இந்திய அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டை போல சரிந்து கொண்டிருக்க, நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது முதல் அரைசதத்தை பூர்த்தி செய்தார். 44 பந்துகளை சந்தித்த அவர், 6 பவுண்டரிகளுடன் 53 ரன்களை விளாசி அவுட்டானார். யாதவின் விக்கெட்டிற்கு பின்னர் இந்திய அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

ஆனால் அந்த எண்ணத்தை மாற்றி அமைத்தார் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களே ரன் குவிக்க முடியாமல் திணறிய சூழலில் தீபக் சாஹர் இலங்கை பந்துவீச்சை அசால்ட்டாக கையாண்டார். சிறப்பாக விளையாடிய அவர் 82 பந்துகளில் 69 ரன்களை குவித்தார். 

சர்வதேச கிரிக்கெட்டில், தான் விளையாடிய முதல் இன்னிங்ஸிலேயே அரைசதம் அடித்து அவர் அசத்தினார். அவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்த புவனேஷ்வர் குமார் 19 ரன்கள் எடுத்தார். 

இதன் மூலம் இந்திய அணி ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டிப்பிடித்தது. மேலும் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த போட்டியை இந்திய அணி வென்றதால், வரலாற்று சாதனையை படைத்துள்ளது. அதாவது ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே அணிக்கு எதிராக அதிக போட்டிகளை வென்ற அணியாக இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. இலங்கை அணிக்கு எதிராக இந்தியா இதுவரை 92 ஒருநாள் போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளது.
Latest Posts

ஜேர்மனியில் ஜப்னா பஜார் கடை முதலாளி தமிழ்க் குடும்பப் பெண்களுடன் காமலீலை!! பிடிபட்டதால் யாழ் தப்பி ஓட்டம்!! குடும்பப் பெண் தற்கொலை முயற்சி!!

கட்டு நாயக்க விமான நிலைய ஊழியரின் வயிற்றில் 7 கோடி பெறுமதியான தங்க பிஸ்கட்கள்!!

“சினோபாம்” தடுப்பூசி தொடர்பில் ஆய்வில் வெளியான முடிவு!

வாகனதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

ரிஷாட் வீட்டில் உயிரிழந்த இஷாலினி வழக்கில் திடீர் திருப்பம்!

பேஸ்புக் காதல்! சந்திக்க சென்ற போது ஒன்றாக உயிரிழந்த ஜோடி!

ஆண்கள் இரு திருமணம் செய்யவேண்டுமாம்..!! இல்லையென்றால் சிறை..!

மக்களுக்கு அடுத்த பேரிடி பெட்ரோல் விலை உயர்வு? கோட்டா மகிந்தவுக்கு பெரும் தலையிடி!

ஆசிரியர்களுக்கு பதிலாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை களமிறங்குவோம்!!

அந்தரங்கப்படத்தை வைத்து பேஸ்புக்கில் காதலியை மிரட்டிய மன்மதராசா

மனைவியுடன் பிடிபட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்; விசாரணைகளை ஆரம்பித்த திணைக்களம்

பிரான்சை தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடி! யாழ்ப்பாணீஸ் அதிர்ச்சி!

தமிழ் மொழி பயிற்சிக்கு சென்ற இராணுவ அதிகாரி திடீர் உயிரிழப்பு

21, 22 ஆம் திகதிகளில் பாடசாலைக்கு ஆசிரியர்கள் வருகை தரமாட்டார்கள். முடிந்தால் பாடசாலைகளைத் திறந்து காட்டுங்கள்

நாட்டை நினைத்து நிம்மதி இழந்த கோட்டபாய! மனிக்கே மகே கித்தே பாடி தூங்க வைத்த யொகானி!

டிசம்பர் இறுதி வரை பயணங்கள் தடை செய்யப்பட வேண்டும் – வைத்தியர் எச்சரிக்கை

யாழ் மத்திய பகுதியில் எண்ணெய் வளம் வெளிநாட்டுக்கு விற்பனை

கோட்டா மகிந்த அதிரடி இலங்கையில் அதிரடி மாற்றம்

யாழ்.வட்டுக்கோட்டையில் தாய்ப்பால் குடித்து சில நிமிடங்களில் மயங்கிய குழந்தை உயிரிழந்த சோகம்!

கனடாவில் நடைபெற்ற தமிழ் பெண் ஜோடிகளின் பிரமாண்ட ரிசப்சன்!! (காணொளி)

தனது நண்பனை அடித்துக் கொலை செய்த நபர்!! மட்டக்களப்பில் சம்பவம்!!

மஹிந்தவை அடித்து விரட்டிய மக்கள் வேடமிட்டவருக்கு நேர்ந்த கதி

ஈழத்து ஜேர்மன் பெண்ணின் அட்டகாசம்! தாங்க முடியாத பிக்பாஸ் அதிர்ச்சி!

யாழ் கடலில் கடற் சமர்! தமிழக மீனவர் பலி! இருவர் உயிருடன் மீட்பு!

பாடசாலை ஆரம்பிக்கப்படாததால் ஏற்படப்போகும் பாதிப்புக்கள்! உலக வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

கிணற்றில் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்த ஒரு வயது குழந்தை!!

சீன தடுப்பூசியை செலுத்திக்கொண்டு வெளிநாடு செல்லவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு

சதுரங்க போட்டியில் சாதனை படைத்த யாழ்.மாணவர்கள்!

யாழில் காதலனுடன் களவாக சென்ற மாணவியை நடு வீதியில் பிடித்து அடித்த அண்ணன்!!Related Posts

%d bloggers like this: