கொரோனாவுக்கு இலக்காக உயிர் பிரியும் ஆபத்தில் இருந்து தப்பிப் பிழைத்த கலைவர்ஜினி கூறும் அதிர்ச்சித் தகவல்கள் இதோ!!

சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சுவாசம் கிடைக்காமல், சிறிது சிறிதாக உயிர் போவதாக உணரும் அந்த தருணம் அனுபவித்தவர்களுக்கு புரியும்.
அந்த தருணத்திற்குச் சென்று மீண்டுவந்து கூறுகின்றேன் கேளுங்கள்.
கொரோனாவை ஏன் தாங்கிகொள்ள முடியவில்லை? கடுமையான காய்ச்சல், உடம்பு வலி, முழங்கை, முழங்கால் என்பன கடுமையான வலி, தொண்டை வலி, இருமல் ஆனால் நெஞ்சில் உள்ள சளி வெளியில் வராமல் எம்மை கொல்கின்றமை, தடிமன், மூச்சுத்திணறல், வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று வலி, மயக்கம், கடுமையான தலைவலி, சாப்பிட முடியாமை, இலேசாக இருமினால் சிறுநீர் கசிவு, ஒருகட்டத்தில் மூச்செடுக்கும்போதே சிறுநீர் கசிவு என உங்களால் எதனையும் கட்டுப்படுத்த முடியாமல் அவதிப்படுவீர்கள். இதுதான் கொரோனா. ஒரு வருத்தத்திற்கே துவண்டுபோகும் எமக்கு இவை அத்தனையும் ஒருசேர வரும்போது அந்த வலியும் வேதனையும் எழுத்துக்களால் வடிக்க முடியாதவை. இந்த வேதனையுடன் சேர்த்து 24 மணித்தியாலமும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம். தூங்கும்போதும்கூட… (இதன் கொடூரத்தை நீங்கள் அனைவரும் உணரவேண்டும் என்பதால் உண்மையை மறைக்காமல் எழுதியுள்ளேன்)
சாதாரண இருமல், தடிமன் தானே என ஒருவாரம் நான் தாமதித்ததால் இறுதியில் மூச்சுத்திணறல் வரை கொண்டுசென்றுவிட்டது. ஆகவே, சாதாரண தடிமன் வரும்போதே பரிசோதித்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் தாங்க முடியாத வேதனை. சுமார் ஒருமாத காலமாக இந்நோயால் பீடிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று, இப்போது வீட்டில் தனிமையில் உள்ளேன்.
குணமடைந்து வீடு வந்த போதும் எனது சிறிய வேலைகளைக்கூட செய்ய முடியவில்லை. முகம் கழுவிவிட்டு வந்தால்கூட ஒரு பெரிய மரத்தை வெட்டி சாய்த்ததைப் போல களைப்பு. இரண்டு வார்த்தைகள் பேசினால் சுவாசம் இயல்பு நிலைக்கு திரும்ப ஒரு 10,15 நிமிடங்கள் எடுக்கின்றன. இயல்பு நிலையென கூற முடியாது. இன்னும் மூச்செடுப்பதில் சிரமம்.
வீட்டிற்குள்ளேயே நடக்க முடிக்க முடியவில்லை.
🥊 சாதாரண தடிமன் வந்தாலே சென்று பரிசோதித்துக்கொள்ளுங்கள். மேற்சொன்ன கட்டத்திலிருந்து தப்பிவிடலாம்.
🥊 தனியார் வைத்தியசாலைக்குச் செல்லாதீர்கள். பணம் தின்னி பேய்களிடம் மனிதாபிமானம் இல்லை.
🥊 அரச வைத்தியசாலைக்குச் செல்லுங்கள். ஓரிரு குறைபாடுகள் இருந்தாலும் அன்பான, அக்கறையான கவனிப்பு. அங்கு கட்டில் இல்லை, இடமில்லை என வெளியில் நின்று கூச்சல் போடுவோரின் பேச்சை நம்பாதீர்கள். உங்களுக்கான இடம் அங்குள்ளது.
இந்நாட்களில் வைத்தியசாலையில் இருக்கும்போது எனக்கு ஆறுதலாக பேசியும் தேவையான உதவியை செய்தவருமான வைத்தியர் அனுஷ்யந்தன் Anushyanthan Sivappiragasam அப்போது நீங்கள்தான் எனக்கு கடவுளாக தெரிந்தீர்கள்.
வீட்டிற்கு வந்தபின்னர், அதுவும் தனிமையில் இருக்கும்போது எமக்கான விடயங்களை செய்ய யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில் நிச்சயம் நாம் மனதளவில் பாதிக்கப்படுவோம். அந்த நிலைக்கு செல்லவிடாமல் எனக்காக ஒரு நட்பு வட்டத்தையே உருவாக்கி இன்று படுக்கையில் இருந்து எழுந்து உட்காரும் அளவிற்கு உதவியவர் டன்ஸ்டன் அண்ணா Dunstan Mani. அவரது உறவினர் ஷிரானி அன்டி உணவை மட்டுமன்றி, பாசத்தையும் சேர்த்தே அனுப்பினார்.
அடிக்கடி பேசும் நண்பர்களுக்கு மாத்திரமே இவ்விடயம் தெரியும். அவர்கள்மூலம் தகவல் அறிந்த பல நண்பர்கள் குறுஞ்செய்தி மூலம் மிகவும் ஆறுதல் கூறினார்கள். உதவி வேண்டுமா என கேட்டார்கள். கொரோனா நேரத்தில் ஒரு மனிதனுக்கு தேவை ஆறுதல், ஆகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிந்தளவு அன்பு செலுத்துங்கள். காரணம், கவலையடையும்போது சுவாசத்தில் மாறுதல் ஏற்படுவதை நான் உணர்ந்தேன்.
பணம், அந்தஸ்து, பெயர், புகழ், வீண் தம்பட்டம் இதெல்லாம் கால் தூசுக்கு சமன் என்பதை மனிதனுக்கு மண்டையில் உரைக்கும்படி உணர்த்துகிறது கொரோனா. ஆகவே, இன்று நாம் வாழும் வாழ்க்கை மட்டுமே நிச்சயமானது, சந்தோசமானது. முடிந்தளவு அன்பாக இருங்கள், ஆறுதலாக இருங்கள், யாரிடமும் கடிந்துகொள்ளாதீர்கள், விரோதம், போட்டி, பொறாமை என எதுவும் வேண்டாம், பணத்திற்காக எதையும் செய்யாதீர்கள், பணம்தான் வாழ்க்கை என்பதெல்லாம் பொய். காரணம், பணத்தால் இந்த கொரோனா காலத்தில் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை, ஆகவே பணத்திற்கு பின்னால் ஓடாதீர்கள்.
முகப்புத்தகத்தில் எதையும் பதிவிடாததால், சந்தேகப்பட்டு பலர் குறுஞ்செய்தி அனுப்பி விசாரித்தனர். உங்கள் அன்பை பார்த்து நெகிழ்ந்துவிட்டேன். நம்மை சுற்றி உள்ளோரிடம் அன்பாக இருப்போம்.
கொரோனா காலத்தில் அனுபவித்த துன்பங்கள், துயரங்கள், வேதனைகள் அனைத்தையும் ஒரு ஊடக நண்பரிடம் பகிர்ந்தபோது, இதனை ஒரு ஆவணமாக பதிவுசெய்வோம் என்றார். அதனால், இப்போதைக்கு இதனை எழுதியுள்ளேன்.
குறிப்பு – யாரும் தயவுசெய்து அழைப்பெடுக்காதீர்கள். கதைப்பதற்கு சிரமம்.
Latest Posts

கொவிட் தொற்று குணமடைந்த இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!!

இன்றைய ராசிபலன் (28.09.2021)

கனடாவில் புலம்பெயர் பெண்கள் இருவர் கலியாணம் கட்டிய காட்சிகள்!! (Photos)

யாழில் இரட்டைக் கொலை வழக்கில் பிணையில் வந்தவர் ஆட்டோவை விட்டுவிட்டு தலைதெறிக்க ஓடியது ஏன்???

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்! – இருவர் பலி

பிரித்தானியாவில் இலங்கையரின் மோசமான செயல் – காதலிக்கு நேர்ந்த பரிதாபம்

வாளுடன் டிக் டொக் காணொளி பதிவு; யாழில் 19 வயது ரவுடி கைது!

இந்த விஷயங்களுக்காக தம்பதிகள் சண்டை போட்டுக்கொள்ள வேண்டுமாம்! காரணம் என்ன தெரியுமா?

நாட்டில் அரிசி தேடி வரிசையில் நிற்க வேண்டிய நிலை உருவாகும் என எச்சரிக்கை

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக கல்வி அமைச்சு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

தினம் வாழைப்பழம் சாபிட்டால் போதும்! எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

சடங்கு செய்யச் சென்ற யுவதிக்கு பூசாரியால் நேர்ந்த துயரம்!

பிணையில் வந்தவர் செய்த கொடூரம்; பரிதாபமாக உயிரிழந்த பெண்!

தாடியில் கைவைக்க வேண்டாம்; தலிபான்கள் விடுத்த கடும் உத்தரவு!

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டால் விடுமுறை வழங்கப்படமாட்டாது; கல்வி அமைச்சு!!

ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் மீட்கப்பட்ட பிரித்தானியர் சடலம்.

லண்டனை உலுக்கிய ஆரம்பப்பள்ளி ஆசிரியை மரணம்; வெளியான அதிர்ச்சி தகவல்!!

நால்வரை கொலை செய்து சடலங்களை கிரேனில் தொங்கவிட்ட தலிபான்கள்!! (Video)

யாழ் அல்வாயில் அலங்கோலம் செய்து திரிந்த காவாலி வெட்டுகுமாருக்கு நடந்த கதி இது!

இலங்கையில் எரிபொருள் தட்டுபாடா?….வெளியான தகவல்

நாட்டை திறப்பது தொடர்பில் அரசாங்கம் விடுத்த அறிவிப்பு!

கொவிட் தடுப்பூசியால் பாலியல் பாதிப்புகளா? விசேட வைத்தியர் விளக்கம்

தனது நாக்கை விசித்திரமான முறையில் 2 துண்டுகளாக அறுத்து வைத்திருக்கும் யாழ் இளைஞன்!! பொலிசார் விசாரணை!!(Photos)

நாட்டை திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகள் தயார்! இராணுவ தளபதி அறிவிப்பு

யாழில் தீவிரமடைந்துள்ள வாள் வெட்டுக்குழுக்களின் அட்டகாசம்

இன்றைய இராசிபலன்கள் (27.09.2021)

திடீரென பற்றி எரிந்த முச்சக்கரவண்டி – ஒருவர் பலி

கோட்டாவை கோமாளியாக்கிய வஜிர அபேவர்தன மஹிந்த கொடுக்கும் அதிர்ச்சி வைத்தியம்

பளையில் 800 மிளகாய் செடிகளை பிடிடுங்கி எறிந்தது ஏன்?? யுத்தம் முடிவடைந்த பின்னர் நாம் தமிழனின் மனநிலை மாறிவிட்டதா??

தடுப்பூசியைப் பெற்ற இளம் வயதினருக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

தடுப்பூசி தொடர்பில் மீண்டும் வலியுறுத்திய இராணுவத் தளபதி!Related Posts

%d bloggers like this: