கொழும்பில் அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு; பொலிசாருடன் புலனாய்வாளர்களும் கடமையில்!

  புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் பெருமளவான பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று மற்றும் நாளை இரவு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு கடமையில், சீருடை அணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். அத்துடன், இந்தக் கடமைகளுக்காக கொழும்பில் அதிகளவான புலனாய்வுப் பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கைது செய்தல், பொது இடங்களில் திரியும் திருடர்களை கைது செய்தல், மக்களை துன்புறுத்துபவர்கள், சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்களை இனங்கண்டல், போக்குவரத்து நெரிசலை குறைத்தல் ஆகியன இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கையில் உள்ளடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை , மக்கள் அதிகம் கூடும் காலி முகத்திடலில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், வாகனங்களை நிறுத்த விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

Latest Posts

மஹிந்தவிற்கு சத்திர சிகிச்சை நடந்தது உண்மையே!

இலஞ்சம் வாங்கிய போது பாடசாலை அதிபர் வசமாக சிக்கினார்!

யாழில் ஆவா குழுக் காவாலிகளின் இராணுவப்பிரிவின் ஆயுதக் களஞ்சியம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது!!

கிளிநொச்சியில் கண் மாபியாக்களின் கொடூரம்!! 71 மாணவர்களின் கண்களுக்கு நடந்தது என்ன? பெண் வைத்திய அதிகாரி பிரியந்தினி மிரட்டப்பட்டது ஏன்?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற NCG பஸ் பாரிய விபத்துக்குள்ளானது!!

கிளிநொச்சியில் பெண் வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கத்தை அலங்கோலப்படுத்தியவர் யார்??

யாழில் நண்பர்களுடன் தேனீர் குடித்துக்கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட துயரம்!!

சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்து!! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்!! (Photos)

பிரதமர் மகிந்தவின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி மகிந்தவின் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த கில்லாடிக்கு நடந்த கதி!!

Related Posts