சீன தூதுவர் வடக்கிற்கு விஜயம்..

சீனத் தூதரகத்தின் அன்பளிப்பில் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்ட மீனவர்களிற்கு வியாழக் கிழமை நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சீனாவின் தூதுவர் நாளை மறுதினம் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்வதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீன தூதரகத்தால் வழங்கப்படவுள்ள இந்த நிவாரண விநியோகத்திற்காக 15 ம் திகதி மாலை சீனத் தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
சீன தூதுவருக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் 15ஆம் திகதி இரவு உணவு விருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 இதனையடுத்து 16ஆம் திகதி யாழில் 800 மீனவர்களிற்கு வலை வழங்கப்படுவதோடு 2 ஆயிரம் மீனவர்களிற்கு நிவாரணப் பொதியும் வழங்கப்படவுள்ளதாகவும், இதேநேரம் மன்னார் மாவட்ட மீனவர்களில் 700 பேருக்கு நிவாரணப் பொதிகளும் 150 பேருக்கு வலைகளும் வழங்கப்படவுள்ளதாகவும், இதற்கான ஏற்பாடுகளை மீன்பிடி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு வழங்கப்படும் நிவாரண வலைகள் தலா 8 ஆயிரம் ரூபா பெறுமதியாகவும் நிவாரணப் பொதிகள் 5 ஆயிரம் ரூபா பெறுமதியும் உடையவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கான சீன மக்கள் குடியரசன் தூதுவர் கீ சென்ஹொங் வடமாகாணத்திற்கு இரு நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குறித்த விஜயமானது எதிர்வரும் புதன் மற்றும் வியாழக்கிமைகளில் இடம்பெறும் என சீன தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
விஜயத்தின் போது, கடற்றொழிலாளர்களுக்கான ஒருதொகுதி உபகரணங்களை வழங்கும் நிகழ்வொன்றில் கலந்துகொள்ளவுள்ளதாகவும், வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளதாகவும் சீன தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. 
வடக்கில் மூன்று தீவுகளில் முன்னெடுக்கப்படவிருந்த மின் திட்டத்தை சீனா கைவிட்டுள்ள நிலையிலேயே அந்நாட்டு தூதுவர், வடக்குக்கான பயணத்தை மேற்கொள்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Latest Posts

கொழும்பில் இருந்து யாழ்.சென்ற ரயிலில் மோதி மாணவன் பலி (PHOTO)

முன்னாள் காதலனுடன் உடல் உறவு கொண்ட சிங்களச் சிறுமி!! நேரில் பார்த்த தற்போதய காதலன் செய்த கொடூரம்!! !! (Photo)

புலமை பரிசில் பரீட்சையில் எழுந்துள்ள ச ர் ச் சை ! வி சா ர ணை ந ட த் த பரீட்சைகள் திணைக்களம் தீர்மா ன ம்

யாழில் 12 வயதுச் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்க முற்பட்ட 42 வயது இரண்டு பொண்டாட்டிக்கார மன்மதனை புரட்டி எடுத்த பொதுமக்கள்!!

சுழற்சி முறையில் மின்வெட்டு! சற்றுமுன்னர் வெளியான அட்டவணை

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

கடலில் நீராடச் சென்ற மூன்று சிறுமிகள் உட்பட நால்வருக்கு நேர்ந்த நிலை!

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்!! உத்தியோக பூர்வ அறிவிப்பு!!

யாழில் மாணவர்களை மோதித் தள்ளி வாகனம் – தப்பியோடிய சாரதி
Related Posts