சுற்றுச்சுவர் இடிந்து மாணவர்கள் பலி!!

தமிழகத்தின் நெல்லையில் அரசு உதவி பெறும் பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் மாணவர்களின் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. டவுன் திருநகர் பகுதியில், 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரசு உதவி பெறும் டவுன் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் இந்தப் பள்ளியில் இன்று காலை விளையாட்டு பாடவேளையில் மாணவர்கள் மைதானத்தில் உள்ள பள்ளியின் கழிவறைக்கு சென்ற போது கழிவறை சுற்று சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய மாணவர்கள் பலத்த காயமடைந்திருக்கின்றனர்.

காயமடைந்து உயிருக்கு போராடிய மாணவர்கள் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசுக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் ஏற்கனவே இரண்டு மாணவர்கள் உயிரிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு மாணவர் உயிரிழந்த நிலையில், பலியான மாணவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்திருக்கிறது.

சம்பவத்தில் 8ம் வகுப்பு படித்து வந்த மாணவர்கள் விஷ்வரஞ்சன், சஞ்சய் மற்றும் 9ம் வகுப்பு மாணவர் அன்பழகன் ஆகிய 3 மாணவர்கள் இந்த விபத்தில் பலியானதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பவம் அறிந்து பதற்றமடைந்த பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை உயிரிழந்த மாணவர்கள் யார் என்பதும், காயமடைந்த மாணவர்கள் யார் என்பதையும் சொல்லாமல் பள்ளி நிர்வாகத்தினர் அலட்சியமாக இருப்பதால் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து பெற்றோரை சமாதானம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் நிலையில், பாடசாலை மூடப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் கட்டிட ஸ்திரத் தன்மை பாதிப்புக்குள்ளானதாகவும், அதனை உரிய நேரத்தில் ஆய்வு செய்திருந்தால் இந்த உயிரிழப்பை தவிர்த்திருக்க முடியும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இடிந்து விழுந்த கழிவறை சுற்றுச்சுவர் 10 ஆண்டுகளுக்கு முன் தான் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகின்ற்து. இந்நிலையில் நெல்லை நகரின் பிரபல பள்ளியில் நடைபெற்ற விபத்தில் 3 மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Latest Posts

அடுத்த மாதம் ஊர் திரும்பவிருந்த நிலையில் மட்டக்களப்பு நபருக்கு நேர்ந்த பெரும் சோகம்!

யாழில் வெளிநாட்டில் இருந்துவந்த மகள் பூட்டிய வீட்டில் சடலமாக…தாய் வைத்தியசாலையில்

முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகள் மீது சேட்டைவிட்ட ஆசிரியர் மீது நீதிமன்றம் விடுவித்துள்ள உத்தரவு!

இன்று பிற்பகல் முதல் மின் துண்டிப்பு!! விசேட அறிவிப்பு வெளியானது!!

சமந்தாதான் எனக்கு ஏற்ற ஜோடி – நாக சைதன்யா

யாழ்.போதனா வைத்தியசாலையில் நடக்கும் அலங்கோலம்!! அதிகாரிகள் கவனிப்பார்களா??

யாழில் பிரான்ஸ் மாப்பிளையின் காலைப் பிறாண்டிய பூனையின் வாலைப் பிடித்து தலைகீழாக அடித்த மாப்பிளை!! கலியாணம் குழம்பியது!!

யாழ்ப்பாணத்தில் ‘அலிகள்‘ நடாத்திய பொங்கல் விழா!! (புகைப்படங்கள்)

வவுனியா வைத்தியசாலைக்குள் இப்படி ஒரு சம்பவம்; பலரும் அதிருப்தி

இலங்கை மக்களுக்கான பேரிடியான செய்தி! ஒவ்வொருவர் மீதும் இவ்வளவு கடனா?

இரு மின் ஆலைகளுக்குப் பூட்டு; இருளில் மூழ்குமா இலங்கை?

போர்ட் சிட்டிக்கு விசா தேவையில்லை! நேற்றைய தினம் 50,000 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள்

தனுஷ்.. ஐஸ்வர்யா.. 18 வருட திருமண பந்தம் முறிவு! பரபரப்பை ஏற்படுத்திய திடீர் பிரிவு! என்ன காரணம்?

திடீரென மயங்கி சரிந்த பாடசாலை மாணவர்கள்!

திருமண வைபவத்தில் கொடூர சம்பவம்: மாமனாரை கொலை செய்த மருமகன்

கனடாவில் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் 1400 கோடி ரூபா பரிசு வென்ற யாழ் தமிழர்..! வெளியான தகவல்!

இம்முறை சீனாவில் இருந்து அரிசி

யாழ் வேலணை வைத்தியசாலை டொக்டர் கோபிகிருஸ்ணனின் கிருஸ்ணலீலை!! குடும்பப் பெண் பரிதாபகரமாகப் பலி!!

விடுமுறை வழங்கவில்லை!! யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் விபரீத முடிவு!!




Related Posts