சுவீடன் அண்ணனின் 6 கோடி ரூபா பெறுமதியான யாழ்ப்பாண வீட்டை விற்று பணத்தை ஆட்டையைப் போட்ட தம்பி!! அண்ணன் தற்கொலை முயற்சி

யாழ் வடமராட்சிப் பகுதியை சொந்த இடமாகக் கொண்டவரும் 30 வருடங்களுக்கு முன் சுவீடனில் நிரந்தரமாக குடும்பத்துடன் வசித்து வரும் குடும்பஸ்தர் ஒருவர் சுவீடனில் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த குடும்பஸ்தர், யாழ் நெல்லியடி நகரப்பகுதிக்கு அண்மையில் பருத்தித்துறை வீதி ஓரத்தில் அமைந்துள்ள தனது மனைவியின் 16 பரப்பு காணி மற்றும் வீட்டை விற்பதற்கு தனது தம்பிக்கு கடந்த வருடம் ”அற்றோனிக் பவர்” முடித்து அனுப்பியுள்ளார். குறித்த குடும்பஸ்தர் சுவீடனில் தனது மகளுக்கு மாப்பிளை பார்த்திருந்ததாகவும் அதற்கான சீதனமான அங்கு கடன்பட்டு வீடு வாங்கியதாகவும் அந்த கடனை அடைப்பதற்காகவே தனது சீதன வீட்டை விற்க முயன்றதாகவும் தெரியவருகின்றது.

இந் நிலையில் குடும்பஸ்தரின் தம்பியும் திருமணமானவர் என்றும் அவருக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளதாகவும் வீட்டை விற்று வரும் பணத்தில் தம்பியின் ஒவ்வொரு பெண் பிள்ளைக்கும் தலா 15 லட்சம் வங்கியில் போடுவதாகவும் அண்ணன் ஏற்கனவே தனது தம்பிக்கு உத்தரவாதம் அளித்திருந்தார். தம்பியின் கைக்கு “அற்றோனிக் பவர்“ வந்து சேர்ந்ததும் தம்பி அந்த காணியையும் வீட்டையும் பருத்தித்துறையில் வசிக்கும் பிரபல வர்த்தகர் ஒருவருக்கு 6 கோடிரூபாவுக்கு விற்று முழுப்பணத்தையும் ஆட்டையைப் போட்டுள்ளார். அண்ணனுக்கு பணம் அனுப்பவேயில்லை எனத் தெரியவருகின்றது. வீடு விற்பனையாகி வீட்டில் பருத்தித்துறை வர்த்தகர் தனது செயற்பாடுகளை ஆரம்பித்து 2 மாதங்களின் பின்னரே அயலவர்கள் ஊடாக சுவீடன் குடும்பஸ்தருக்கு வீடு விலைப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக தம்பியைத் தொடர்பு கொண்ட போது அவர் தொலைபேசித் தொடர்பை துண்டித்து வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பஸ்தர் தனது உறவினர்கள் ஊடாக தம்பியை தொடர்பு கொண்ட போது தம்பி உறவினர்களையும் அச்சுறுத்தியுள்ளார். இதன் காரணமாக சுவீடன் குடும்பஸ்தர் தற்கொலைக்கு முயன்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
Latest Posts

யாழில் கும்பிட்டுக் கொண்டிருந்த பெண் உயிரிழப்பு!கொரோனா தொற்று உறுதி

நள்ளிரவு கடந்தும் செல்போனில் பேச்சு: தட்டிக்கேட்ட கணவனை கத்தியால் குத்திய மனைவி!

வவுனியாவில் பசுவை வெட்டி குளத்தில் வீசிய விசமிகள்!

மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்: வெளியான அதிர்ச்சி பின்னணி!

புலம்பெயர் தமிழ்ச் சிறுமியாக தமிழ்க் கலாச்சாரத்துடன் ‘சுப்பர் சிங்கர்’ சென்ற கனடா குயில் ஜெசிக்காகவர்ச்சி உடையில்!! (Photos)

கொவிட் தொற்று குணமடைந்த இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!!

இன்றைய ராசிபலன் (28.09.2021)

கனடாவில் புலம்பெயர் பெண்கள் இருவர் கலியாணம் கட்டிய காட்சிகள்!! (Photos)

யாழில் இரட்டைக் கொலை வழக்கில் பிணையில் வந்தவர் ஆட்டோவை விட்டுவிட்டு தலைதெறிக்க ஓடியது ஏன்???

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்! – இருவர் பலி

பிரித்தானியாவில் இலங்கையரின் மோசமான செயல் – காதலிக்கு நேர்ந்த பரிதாபம்

வாளுடன் டிக் டொக் காணொளி பதிவு; யாழில் 19 வயது ரவுடி கைது!

இந்த விஷயங்களுக்காக தம்பதிகள் சண்டை போட்டுக்கொள்ள வேண்டுமாம்! காரணம் என்ன தெரியுமா?

நாட்டில் அரிசி தேடி வரிசையில் நிற்க வேண்டிய நிலை உருவாகும் என எச்சரிக்கை

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக கல்வி அமைச்சு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

தினம் வாழைப்பழம் சாபிட்டால் போதும்! எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

சடங்கு செய்யச் சென்ற யுவதிக்கு பூசாரியால் நேர்ந்த துயரம்!

பிணையில் வந்தவர் செய்த கொடூரம்; பரிதாபமாக உயிரிழந்த பெண்!

தாடியில் கைவைக்க வேண்டாம்; தலிபான்கள் விடுத்த கடும் உத்தரவு!

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டால் விடுமுறை வழங்கப்படமாட்டாது; கல்வி அமைச்சு!!

ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் மீட்கப்பட்ட பிரித்தானியர் சடலம்.

லண்டனை உலுக்கிய ஆரம்பப்பள்ளி ஆசிரியை மரணம்; வெளியான அதிர்ச்சி தகவல்!!

நால்வரை கொலை செய்து சடலங்களை கிரேனில் தொங்கவிட்ட தலிபான்கள்!! (Video)

யாழ் அல்வாயில் அலங்கோலம் செய்து திரிந்த காவாலி வெட்டுகுமாருக்கு நடந்த கதி இது!

இலங்கையில் எரிபொருள் தட்டுபாடா?….வெளியான தகவல்

நாட்டை திறப்பது தொடர்பில் அரசாங்கம் விடுத்த அறிவிப்பு!

கொவிட் தடுப்பூசியால் பாலியல் பாதிப்புகளா? விசேட வைத்தியர் விளக்கம்

தனது நாக்கை விசித்திரமான முறையில் 2 துண்டுகளாக அறுத்து வைத்திருக்கும் யாழ் இளைஞன்!! பொலிசார் விசாரணை!!(Photos)

நாட்டை திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகள் தயார்! இராணுவ தளபதி அறிவிப்பு

யாழில் தீவிரமடைந்துள்ள வாள் வெட்டுக்குழுக்களின் அட்டகாசம்

இன்றைய இராசிபலன்கள் (27.09.2021)

திடீரென பற்றி எரிந்த முச்சக்கரவண்டி – ஒருவர் பலி

கோட்டாவை கோமாளியாக்கிய வஜிர அபேவர்தன மஹிந்த கொடுக்கும் அதிர்ச்சி வைத்தியம்

பளையில் 800 மிளகாய் செடிகளை பிடிடுங்கி எறிந்தது ஏன்?? யுத்தம் முடிவடைந்த பின்னர் நாம் தமிழனின் மனநிலை மாறிவிட்டதா??

தடுப்பூசியைப் பெற்ற இளம் வயதினருக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

தடுப்பூசி தொடர்பில் மீண்டும் வலியுறுத்திய இராணுவத் தளபதி!Related Posts

%d bloggers like this: