சென்னையை அதிரவைக்கும் கொரோனா!

  சென்னையில் முதல் முறையாக சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக காணப்பட்ட ஒமைக்ரான் கொரோனா வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அதேசமயம் மிதமான பாதிப்புகளையே இந்த வகை கொரோனா பெரும்பாலும் ஏற்படுத்தினாலும் அதன் பரவும் வேகம் மிக அதிகமாக உள்ளது.

இதன் காரணமாக இந்தியாவில் தினசரி பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியுள்ளது. தமிழகத்திலும் தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மும்பை, டெல்லி, சென்னை போன்ற பெருநகரங்களிலும் தொற்று பரவல் மிக அதிகமாக உள்ளது. 

இந்நிலையில் சென்னையில் நேற்று மட்டும் 8,963- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 2019- ஆம் ஆண்டு கொரோனா பரவிய காலத்தில் இருந்து தற்போதுதான் சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக கூறப்படுகின்றது. 

கொரோனா 2-வது அலையின் போது சென்னையில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியது. இதுதான் சென்னையில் அதிகபட்சமாக இருந்த நிலையில், 3-வது அலையில் 50 ஆயிரத்தை கடந்து அதிரவைத்துள்ளது. 

எனினும் தீவிர பாதிப்புகள் இல்லாமல் பெரும்பாலும் மிதமான பாதிப்புகளே உள்ளதாக சுகாதரத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

மஹிந்தவிற்கு சத்திர சிகிச்சை நடந்தது உண்மையே!

இலஞ்சம் வாங்கிய போது பாடசாலை அதிபர் வசமாக சிக்கினார்!

யாழில் ஆவா குழுக் காவாலிகளின் இராணுவப்பிரிவின் ஆயுதக் களஞ்சியம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது!!

கிளிநொச்சியில் கண் மாபியாக்களின் கொடூரம்!! 71 மாணவர்களின் கண்களுக்கு நடந்தது என்ன? பெண் வைத்திய அதிகாரி பிரியந்தினி மிரட்டப்பட்டது ஏன்?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற NCG பஸ் பாரிய விபத்துக்குள்ளானது!!

கிளிநொச்சியில் பெண் வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கத்தை அலங்கோலப்படுத்தியவர் யார்??

யாழில் நண்பர்களுடன் தேனீர் குடித்துக்கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட துயரம்!!

சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்து!! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்!! (Photos)

பிரதமர் மகிந்தவின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி மகிந்தவின் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த கில்லாடிக்கு நடந்த கதி!!

Related Posts