டயர்களில் உள்ள V, W, Y போன்ற எழுத்துக்கள் எதை குறிக்கிறது தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க…

தொலை தூர பயணங்களின்போது உங்கள் காரை அதிவேகத்தில் ஓட்டி செல்ல விரும்புகிறீர்களா? ஆம் என்றால், உங்களின் கார் அதிகபட்சமாக எவ்வளவு வேகத்தில் பயணிக்கும் என்பதை நீங்கள் அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமானது. கார்களை போலவே, டயருக்கும் என தனியாக டாப் ஸ்பீடு வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் பலருக்கும் தெரிவதில்லை.

உங்கள் வாகனத்துடைய டயரின் பக்கவாட்டில் பல்வேறு குறியீடுகள் இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அவை அந்த டயரை பற்றிய விபரங்களை நமக்கு வழங்குகிறது. இந்த விஷயம் நம்மில் பலருக்கும் நிச்சயம் தெரியும். உதாரணத்திற்கு ‘195/55 R16 87V’ என்ற குறியீடு வழங்கப்பட்டுள்ளது என வைத்து கொள்வோம். இதற்கான முழுமையான அர்த்தத்தை வாகன உரிமையாளர்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

ஆனால் இந்தியாவில் பெரும்பாலானவர்களுக்கு, இந்த குறியீடுகள் டயரின் அகலம், உயரம், ரிம் டயாமீட்டர் மற்றும் எவ்வளவு எடையை தாங்கும்? ஆகியவற்றை குறிக்கின்றன என்பது தெரியும். எனினும் கடைசியில் உள்ள ‘V’ என்ற ஆங்கில எழுத்து எதை குறிக்கிறது? என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. அதைதான் நாம் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

இது டயரின் அதிகபட்ச வேகம் ஆகும். இதனை ‘டயர் ஸ்பீடு ரேட்டிங்’ என்கின்றனர். ‘V’ மட்டுமல்லாது, ‘W’ ‘Y’ என ஸ்பீடு ரேட்டிங்கை குறிப்பதற்கு பல்வேறு குறியீடுகளை பயன்படுத்துகின்றனர். இந்த எழுத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் அதிகபட்ச வேகம் வரையறுக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு இங்கே ‘V’ என்பது, இந்த டயரில் அதிகபட்சமாக மணிக்கு 240 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம் என்பதை குறிக்கிறது.

பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னர்தான், டயர் ஸ்பீடு ரேட்டிங் வரையறை செய்யப்படுகிறது. எனவே இதனை சரியாக பின்பற்றுவது சிறந்தது. ஆனால் டயர்கள் சேதம் அடையாமல் இருக்கும்போது மட்டும்தான் இந்த அதிகபட்ச வேகம் பொருந்தும். அதாவது ‘V’ குறியீடு கொண்ட டயர் சேதம் அடைந்துள்ளது என்றால், அதன் அதிபட்ச வேகமான மணிக்கு 240 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் பயணிக்க கூடாது.

அதேபோல் காரில் ஓவர்லோடு இருந்தாலும், அதிகபட்ச வேகம் பொருந்தாது என்பதை மனதில் கொள்ளுங்கள். இதுதவிர டயர் எப்போதாவது பஞ்சராகி, அது சரி செய்யப்பட்டிருந்தாலும் கூட, உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ள அதிகபட்ச வேகத்தில் பயணம் செய்ய கூடாது என்கின்றனர். டயர் ஸ்பீடு ரேட்டிங்கிற்கான குறியீடுகள் மற்றும் அவற்றின் அதிகபட்ச வேகத்தை கீழே உள்ள பட்டியலில் காணலாம்.Tyre Speed Rating TableSpeed In KM/HourA15A210A315A420A525A630A735A840B50C60D65E70F80G90J100K110L120M130N140P150Q160R170S180T190U200H210V240W270Y300VR>210ZR

உங்கள் காரின் டயர் தேய்ந்து விட்டது எனும் சூழலில், நீங்கள் புதிய டயர்களை வாங்க செல்கிறீர்கள் என்றால், உற்பத்தியாளர் தெரிவித்துள்ள வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். குறிப்பாக உங்கள் காரின் அதிகபட்ச வேகம் என்னவோ, அதைக்காட்டிலும் அதிக ஸ்பீடு ரேட்டிங் கொண்ட டயர்களைதான் தேர்வு செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.

தற்போது உங்களுக்கு சில சந்தேகங்கள் இருக்கலாம். அதற்கான விடைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம். அதாவது உற்பத்தி நிறுவனம் பரிந்துரைத்ததை விட அதிக ஸ்பீடு ரேட்டிங் கொண்ட டயரை பயன்படுத்தலாமா? என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கலாம். இந்த கேள்விக்கு நிச்சயமாக பயன்படுத்தலாம் என்பதுதான் பதில்.

அதிக ஸ்பீடு ரேட்டிங் கொண்ட டயர்களுக்கு மாறுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. ஏனெனில் நீங்கள் என்ன வேகத்தில் பயணம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளீர்களோ? அதைக்காட்டிலும் அதிக வேகத்தில் பயணம் செய்யக்கூடிய திறனை பெற்றுள்ள டயர்களை பயன்படுத்துவது என்பது மிகவும் பாதுகாப்பான ஒரு நடைமுறைதான்.

அதே சமயம் உற்பத்தி நிறுவனம் பரிந்துரைத்ததை விட குறைவான ஸ்பீடு ரேட்டிங் கொண்ட டயரை பயன்படுத்தலாமா? என்ற சந்தேகமும் சிலருக்கு இருக்கும். இந்த கேள்விக்கு நிச்சயமாக இல்லை என்பதுதான் பதில். பரிந்துரைத்ததை விட குறைவான ஸ்பீடு ரேட்டிங் கொண்ட டயரை பயன்படுத்துவது ஆபத்தானது என்பதுடன், சட்டத்திற்கு புறம்பானது என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.

நீங்கள் இப்படி தவறான டயர்களை பயன்படுத்தினால், காப்பீடு பெறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் வெவ்வேறு ஸ்பீடு ரேட்டிங் கொண்ட டயர்களை கார்களில் பயன்படுத்தலாமா? என்ற சந்தேகமும் சிலருக்கு இருக்கும். சிறப்பான செயல்திறன் கிடைக்க வேண்டுமென்றால், ஒரே ஸ்பீடு ரேட்டிங் கொண்ட டயர்களைதான் 4 சக்கரங்களிலும் பயன்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.




Latest Posts

அரச நிறுவனங்கள், பொது இடங்களுக்குச் செல்வோருக்கு கோவிட்-19 தடுப்பூசி அட்டை அவசியம் – எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தத் தீர்மானம்

ஆகஸ்ட் 2 முதல் அனைத்து அரசாங்க ஊழியர்களையும் மீண்டும் கடமைக்கு அழைக்க ஜனாதிபதி செயலாளர் உத்தரவு

புற்று நோயால் திடீரென இறந்த ஒரு பிள்ளையின் தந்தையான இள வயது ஆசிரியர்

ஹிஷாலினியின் சரீரத்தை தோண்டி எடுக்கும் நடவடிக்கை ஆரம்பம்! (படங்கள்)

15 வயதுச் சிங்களச்சிறுமியின் உடல் உறவுக் காட்சியை இணையத்தளத்தில் பார்வையிட 5 நிமிடத்திற்கு 5 ஆயிரம் ரூபா!! நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு இது!!

வடமாகாண அமைச்சு வாகனத்தை கொழும்பிலிருந்து உறவினர்களை அழைத்துவர பயன்படுத்திய அதிகாரி!

10 பேருக்கு கொரோனா! இரு வர்த்தக நிலையங்களுக்கு சீல் வைப்பு

வெள்ளவத்தையில் தொடர்மாடி குடியிருப்பில் வெளிநாட்டு பெண் தற்கொலை!

யாழில் பெண்கள் சிலரின் மோசமான செயல்; பிறந்த நாளில் இளைஞர் விபரீத முடிவு!

மீண்டும் நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு? வெளியான தகவல்

புறா சண்டை!! கொரோனா தொற்றுடன் பெண்கள் ஆடிய பேயாட்டம்!!

விவாகரத்தான பெண் மீது காதல்; ஏற்க மறுத்ததால் யாழ் இளைஞன் செய்த செயல்

உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் சீனாவுக்கு விற்பனை? வெளியானது மற்றுமொரு தகவல்

வடக்கில் நாளை முதல் 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி

‘சீனாவில் ஏலத்துக்கு செல்லும் உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல்’

அரச ஊழியர்கள் இனி சீதனம் வாங்க முடியாது: புதிய சட்டம்!

சுகாதாரப் பரிசோதகரின் விளையாட்டு கண்ணீருடன் யுவதி!

விவாகரத்து செய்த மனைவியை பார்க்க வந்த முன்னாள் கணவர்: பூட்டிய வீட்டில் நடந்த விபரீதம்!!

அடுப்படியில் பெற்றோலை வைத்த கணவன்; அறியாமல் அடுப்பை மூட்டிய இளம் பெண் எரிந்து மரணம்: யாழில் துயரம்!

யாழிலிருந்து தொழில் தேடி கொழும்பிற்கு சென்ற சிறுவனிற்கு ஏற்பட்ட கதி: வீதியோரங்களில் தூங்கும் அவலம்!

வடக்கிற்கு இன்று கிடைத்த தடுப்பூசிகள் 29ம் திகதி முதல் செலுத்தல்!

போலி நோட்டுகளுடன் கடைக்குச் சென்றவரின் பையில் போலி நோட்டுக்களை அச்சிட பயன்படுத்திய இயந்திரம்! வெல்லம்பிட்டி நபர் கைது!

ஹிஷாலினிக்கு பதிலான சிங்கள பெயரை வழங்கிய ரிஷாட்டின் மாமனார் – செயலிழந்த CCTV கமராக்கள் – நீதிமன்றில் வெளியாகிய பரபரப்பு மிக்க தகவல்கள்

சம்பவம் நடக்க முதல் செயலிழந்த சிசிடீவிகள்; பல மர்மங்கள் நீதிமன்றில் வெளிப்படுத்தல்!

மருத்துவத்துறைக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு சவால்! மஞ்சள் நிறமாக மாறிய சிறுவனின் நாக்கு

திருமணமான 10 மாதத்தில் கிணற்றிற்குள் சடலங்களாக மிதக்கும் இளம் ஜோடி

இன்றைய ராசிபலன் – 27/07/2021

மாணவியை ஏமாற்றி அழைத்துச்சென்று துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது!

இலங்கை சாதனையை பாராட்டிய உலக சுகாதார அமைப்பு.

காதலியை திருமணம் செய்ய முயற்சித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி! பெண் வீட்டார் செய்த திட்டமிட்ட சம்பவம்..!!!

கொவிஷீல்ட் செலுத்திக் கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு

தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் குறித்து ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

இலங்கையில் அனைத்து பாலியல் இணையத்தளங்களுக்கும் தடை! – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

யாழ்.தாதியர் பயிற்சி கல்லுாரியில் தனிமைப்படுத்தப்பட்ட 64 பேர் ; அனைவருமே 2 டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றவர்களாம்

யாழில் மதுபோதையில் பொலிஸார் அட்டகாசம்; இளைஞனை கடத்தி சித்திரவதை!

தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு 100 டொலர்கள் பரிசு:எங்கு தெரியுமா?

தீராத பண கஷ்டங்களை நீக்க இதை செய்யுங்கள் !

பிரபல நடிகரால் 3 முறை கர்ப்பமான முன்னணி நடிகை ? யார் தெரியுமா? அதிர்ச்சியில் திரையுலகம்!

நயன்தாரா செய்தது நியாயமா, கேட்க தைரியம் இருக்கா?- மீண்டும் வம்பிழுக்கும் வனிதா







Related Posts

%d bloggers like this: