தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஆபத்தான பொருள்; சிக்கலில் பிரபல யூடியூபர் !

பிரபல தமிழ் யூடியூப் சேனல் நடத்துபவரின் குடும்பத்திற்கு சொந்தமான படகில் இருந்து இலங்கைக்கு கடந்தப்படவிருந்த பெரும் தொகை போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு, படகு மூலம் கஞ்சா கடத்தவுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து சுங்கத் துறை உதவி ஆணையர் 15 பேர் கொண்ட குழு, நேற்றிரவு கடலோர பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டது.

இதன்போது நாகப்பட்டினம் துறைமுகம் நோக்கி வந்தபோது, சிலர் படகு ஒன்றில் மூட்டைகளை ஏற்றியுள்ளனர். இந்நிலையில் அங்கு சென்ற அதிகாரிகளை பார்த்ததும், அவர்கள் மூட்டைகள், 4 இருசக்கர வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அந்த மூட்டைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அ சுமார் 280 கிலோ எடையிலான கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதன் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் இருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு, பிரபல ‘நாகை மீனவன்’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வருபவரின் குடும்பத்திற்கு சொந்தமான படகு என கூறப்பட்சுகின்றது.

அத்துடன் குறித்த கஞ்சா பொட்டலங்கள் இலங்கைக்கு கடத்த இருந்ததாகவும் கூறப்படும் நிலையில், விசாரணையை முடுக்கிவிட்டுள்ள பொலிசார், கஞ்சாவை கடத்த முயன்றது யார், இலங்கையில் யாருக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

2இதேவேளை கடல் உணவுகள், கடல்சார் மீனவர்கள் வாழ்வு உள்ளிட்டவைகள் குறித்து யூ டியூபில் வீடியோ பகிர்ந்து வரும் நாகை மீனவன் யூ டியூப் சேனலை சுமார் 68 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

அடுத்த மாதம் ஊர் திரும்பவிருந்த நிலையில் மட்டக்களப்பு நபருக்கு நேர்ந்த பெரும் சோகம்!

யாழில் வெளிநாட்டில் இருந்துவந்த மகள் பூட்டிய வீட்டில் சடலமாக…தாய் வைத்தியசாலையில்

முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகள் மீது சேட்டைவிட்ட ஆசிரியர் மீது நீதிமன்றம் விடுவித்துள்ள உத்தரவு!

இன்று பிற்பகல் முதல் மின் துண்டிப்பு!! விசேட அறிவிப்பு வெளியானது!!

சமந்தாதான் எனக்கு ஏற்ற ஜோடி – நாக சைதன்யா

யாழ்.போதனா வைத்தியசாலையில் நடக்கும் அலங்கோலம்!! அதிகாரிகள் கவனிப்பார்களா??

யாழில் பிரான்ஸ் மாப்பிளையின் காலைப் பிறாண்டிய பூனையின் வாலைப் பிடித்து தலைகீழாக அடித்த மாப்பிளை!! கலியாணம் குழம்பியது!!

யாழ்ப்பாணத்தில் ‘அலிகள்‘ நடாத்திய பொங்கல் விழா!! (புகைப்படங்கள்)

வவுனியா வைத்தியசாலைக்குள் இப்படி ஒரு சம்பவம்; பலரும் அதிருப்தி

இலங்கை மக்களுக்கான பேரிடியான செய்தி! ஒவ்வொருவர் மீதும் இவ்வளவு கடனா?

இரு மின் ஆலைகளுக்குப் பூட்டு; இருளில் மூழ்குமா இலங்கை?

போர்ட் சிட்டிக்கு விசா தேவையில்லை! நேற்றைய தினம் 50,000 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள்

தனுஷ்.. ஐஸ்வர்யா.. 18 வருட திருமண பந்தம் முறிவு! பரபரப்பை ஏற்படுத்திய திடீர் பிரிவு! என்ன காரணம்?

திடீரென மயங்கி சரிந்த பாடசாலை மாணவர்கள்!

திருமண வைபவத்தில் கொடூர சம்பவம்: மாமனாரை கொலை செய்த மருமகன்

கனடாவில் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் 1400 கோடி ரூபா பரிசு வென்ற யாழ் தமிழர்..! வெளியான தகவல்!

இம்முறை சீனாவில் இருந்து அரிசி

யாழ் வேலணை வைத்தியசாலை டொக்டர் கோபிகிருஸ்ணனின் கிருஸ்ணலீலை!! குடும்பப் பெண் பரிதாபகரமாகப் பலி!!

விடுமுறை வழங்கவில்லை!! யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் விபரீத முடிவு!!
Related Posts