தேன் நிலவிற்காக இலங்கை வந்த வெளிநாட்டு தம்பதி விமான விபத்தில் படுகாயம்

சிக்குராய் எவியேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று இரத்மலானையில் இருந்து சீகிரிய நோக்கி சென்ற நிலையில் நேற்று பிற்பகல் விபத்துக்குள்ளானது.

குறித்த விமானத்தில் தேன் நிலவிற்காக இலங்கை வந்த லெபனான் நாட்டு தம்பதியே விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

அந்த விமானத்தின் பிரதான விமானியாக பண்டாரவளை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய இளைஞரான திமுது ருவன்பத்திரன செயற்பட்டுள்ளார். அத்துடன் பெண் விமானியான 27 வயதுடைய பத்தரமுல்லையை சேர்ந்த தமாஷா அபேநாயக்க என்பவர் செயற்பட்டுள்ளார்.

சீகிரியாவில் தரையிறங்குவதற்காக இந்த விமானம் பயணத்தை மேற்கொண்டுள்ளது. எனினும் விமானம் பயணித்து சில நிமிடங்களில் அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதனை அவதானிக்க விமானி உடனடியாக அதனை தரையிறக்க தீர்மானித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான ஓடுபாதையில் பயணத்தை ஆரம்பித்து சில நிமிடங்கள் என்பதனால் அவசரமாக தரையிறக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. எனினும் விமானம் கட்டுப்பாட்டை இழந்து வயல் பகுதி ஒன்றில் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் போது விமானத்தின் முன் பகுதி பாரிய சோதமடைந்துள்ளது.

இந்த விமானத்தில் 40 வயதுடைய கணவரும், 29 வயதுடைய மனைவியும் தேன் நிலவிற்காக சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் லொபனான் நாட்டு பெண்ணிற்கு மாத்திரமே பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் அவர்கள் உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படப்டுள்ளனர்.

ஆபத்தின்றி உயிர் தப்பிய குடும்பத்தினர், தங்களுக்கு இது மறக்க முடியாத ஒரு அனுபவம் என குறிப்பிட்டுள்ளனர்.

Latest Posts

மஹிந்தவிற்கு சத்திர சிகிச்சை நடந்தது உண்மையே!

இலஞ்சம் வாங்கிய போது பாடசாலை அதிபர் வசமாக சிக்கினார்!

யாழில் ஆவா குழுக் காவாலிகளின் இராணுவப்பிரிவின் ஆயுதக் களஞ்சியம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது!!

கிளிநொச்சியில் கண் மாபியாக்களின் கொடூரம்!! 71 மாணவர்களின் கண்களுக்கு நடந்தது என்ன? பெண் வைத்திய அதிகாரி பிரியந்தினி மிரட்டப்பட்டது ஏன்?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற NCG பஸ் பாரிய விபத்துக்குள்ளானது!!

கிளிநொச்சியில் பெண் வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கத்தை அலங்கோலப்படுத்தியவர் யார்??

யாழில் நண்பர்களுடன் தேனீர் குடித்துக்கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட துயரம்!!

சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்து!! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்!! (Photos)

பிரதமர் மகிந்தவின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி மகிந்தவின் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த கில்லாடிக்கு நடந்த கதி!!

Related Posts