நயன்தாராவுடன் இணையும் யூடியூப் புகழ்.. ஓவர் நைட்ல பேமஸ் ஆனவர் ஆச்சே!

கோயம்புத்தூரை சேர்ந்த ரித்விக் ரித்து ராக்ஸ் என்ற சிறுவன் யூடியூப் சேனலில் பல கெட்டப்புகளில் நடித்து அசத்தி வருகிறான். 7 வயதாகும் இந்த சிறுவன் 10 நிமிடங்களுக்குக் குறைவாக உள்ள சில நகைச்சுவை விடியோக்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வெளியிட்டு வருகிறார்.

ரித்விக் பெண் வேடமிட்டு நடிப்பது, பல நடிகர்கள் போல் இமிடேட் செய்வது என பல கை தேர்ந்த நடிகர்கள் கூட செய்ய கடினமாக உணரும் நடிப்பு நுட்பங்களை அசால்டாக செய்து முடிப்பார். சமீபத்தில் அந்த சிறுவர் செய்தி வாசிப்பாளராக கலக்கிய வேல்ராஜ் வீடியோ மூலம் தான் சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் ஆனார்.

அதன்பிறகு ரித்விக் வீடியோஸ் பல லட்சம் பார்வையாளர்களைத் தாண்டி ஓவர் நைட்டில் ஃபேமஸ் ஆனார். அதன்பிறகு இவருடைய நடிப்பு திறமையை பார்த்து ஒரு துணிக்கடை விளம்பரத்தில் நடித்திருந்தார். நாட்டாமை படத்தின் காட்சிகளை கொண்டு, அதில் உள்ள அனைத்து கேரக்டரையும் ரித்விக்கே நடித்து அசத்தி இருந்தார். இவரின் நடிப்பைப் பார்த்து பலரும் திரைத்துறையில் ரித்விக்கு வாய்ப்பு கிடைக்கும் என கூறிவந்தனர்.

அது இப்போது நிஜமாகி உள்ளது. ஆம் திரைத்துறையில் நடிக்க ரித்வக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் முதல் படமே நயன்தாராவுடன் நடிக்க உள்ளார். தற்போது ரித்விக் நயன்தாரா நடித்து வரும் ஓ2 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.

இப்படத்தில் ரித்விக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். ஓ2 படத்தை வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக இருந்த ஜிகே விஷ்ணு என்பவர் இயக்குகிறார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ் ஆர் பிரபு தயாரிக்கிறார்.

வெள்ளித்திரையில் ரித்விக்கின் நடிப்பை பார்ப்பதற்காக அவரது யூடியூப் சப்ஸ்கிரைபர்ஸ் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். இந்த சின்ன வயசில் நகைச்சுவை கலந்த நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தும் ரித்விக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றனர்.

Latest Posts

மஹிந்தவிற்கு சத்திர சிகிச்சை நடந்தது உண்மையே!

இலஞ்சம் வாங்கிய போது பாடசாலை அதிபர் வசமாக சிக்கினார்!

யாழில் ஆவா குழுக் காவாலிகளின் இராணுவப்பிரிவின் ஆயுதக் களஞ்சியம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது!!

கிளிநொச்சியில் கண் மாபியாக்களின் கொடூரம்!! 71 மாணவர்களின் கண்களுக்கு நடந்தது என்ன? பெண் வைத்திய அதிகாரி பிரியந்தினி மிரட்டப்பட்டது ஏன்?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற NCG பஸ் பாரிய விபத்துக்குள்ளானது!!

கிளிநொச்சியில் பெண் வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கத்தை அலங்கோலப்படுத்தியவர் யார்??

யாழில் நண்பர்களுடன் தேனீர் குடித்துக்கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட துயரம்!!

சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்து!! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்!! (Photos)

பிரதமர் மகிந்தவின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி மகிந்தவின் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த கில்லாடிக்கு நடந்த கதி!!

Related Posts