நள்ளிரவு கடந்தும் செல்போனில் பேச்சு: தட்டிக்கேட்ட கணவனை கத்தியால் குத்திய மனைவி!

ஆத்திரம் அடைந்த இலக்கியா , கத்தியை எடுத்து பாலமுருகனின் மார்பில் குத்தியுள்ளார் . இதனால் அவரின் அலறல் சத்தம் கேட்டு , அவருடைய தாய் ஜோதி ஓடி வந்து இலக்கியாவை தடுத்துள்ளார் . அவரை இலக்கியா தள்ளி விட்டதில் கீழே விழுந்து லேசான காயம் அடைந்தார் .

கத்திக் குத்து

சேலம் அருகே செல்போனில் பேசுவதை தட்டிக்கொண்ட கணவனை கத்தியால் மார்பில் குத்திய இலக்கிய என்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். மனைவியின் புகாரின் பேரில் கணவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பெற்றோரின் செயலால் ஏழு மாத  குழந்தையின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த மசையன் தெரு காட்டூர் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் மகன் பாலமுருகன் ( வயது 32 ) , விசைத்தறி தொழிலாளி . கிருஷ்ணகிரி மாவட்டம் பாரீஸ் நகரைச் சேர்ந்தவர் இலக்கியா ( வயது 26 ) , இவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்க பேருந்தில் அடிக்கடி சென்று வந்த போது , அப்போது தனியார் பேருந்தில் கண்டக்டராக பணியாற்றிய பாலமுருகனுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது .

பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டுள்ளனர் . இவர்களுக்கு 7 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது .  கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது . இதனால் இலக்கியா கடந்த சில மாதங்களுக்கு முன் கணவரை பிரிந்து குழந்தையுடன் கிருஷ்ணகிரியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார் .

மேலும் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் , கணவர் கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்துள்ளார் . அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர் . சிறையில் அடைக்கப் பட்ட அவர் கடந்த சில வாரங்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார் .

இதனை அடுத்து கடந்த 3 நாட்களுக்கு முன் இலக்கியா குழந்தையுடன் கணவர் வீட்டிற்கு வந்து , வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டு நாம் மீண்டும் சேர்ந்து வாழலாம் என தெரிவித்துள்ளார் . பாலமுருகனும் சமாதானமாகி ஏற்றுக்கொண்டார் .

இதனிடையே வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இலக்கியா செல் போனில் நீண்ட நேரம் சிரித்து பேசிக்கொண்டிருந்துள்ளார் . இதைப்பார்த்த பாலமுருகன் , இந்த நேரத்தில் யாரிடம் செல்போனில் பேசிக் கொண்டிருக்கிறாய் என கண்டித்துள்ளார் . இதில் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது .

அப்போது ஆத்திரம் அடைந்த இலக்கியா , கத்தியை எடுத்து பாலமுருகனின் மார்பில் குத்தியுள்ளார் . இதனால் அவரின் அலறல் சத்தம் கேட்டு , அவருடைய தாய் ஜோதி ஓடி வந்து இலக்கியாவை தடுத்துள்ளார் . அவரை இலக்கியா தள்ளி விட்டதில் கீழே விழுந்து லேசான காயம் அடைந்தார் . இதனிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து காயமடைந்த பால முருகனை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் . பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் . அங்கு அவருக்கு சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது .

இது பற்றிய புகாரின் பேரில் எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இலக்கியாவை கைது செய்தனர் . விசாரணைக்கு பின் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மகளிர் சிறையில் அடைத்தனர் . இதே போல் இலக்கியா , தன்னை கணவர் பாலமுருகன் குடிபோதையில் வந்து அடித்ததாக எடப்பாடி போலீசில் புகார் அளித்துள்ளார் . இது தொடர்பாக பாலமுருகன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது .

பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துக்கொண்ட ஒன்றறை ஆண்டுக்குள்ளேயே கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு நிலவி வழக்கு தொடர்ந்து பின்னர் கொலை செய்யும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த சம்பவத்தில் கணவன் கவலை கிடமாக மருத்துவமனையிலும் , மனைவி கைது செய்யப்பட்டு சிறைவாசம் சென்றதால் இவர்களுக்கு பிறந்த 7 மாத பெண் குழந்தையின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகியுள்ளது.

Latest Posts

மஹிந்தவிற்கு சத்திர சிகிச்சை நடந்தது உண்மையே!

இலஞ்சம் வாங்கிய போது பாடசாலை அதிபர் வசமாக சிக்கினார்!

யாழில் ஆவா குழுக் காவாலிகளின் இராணுவப்பிரிவின் ஆயுதக் களஞ்சியம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது!!

கிளிநொச்சியில் கண் மாபியாக்களின் கொடூரம்!! 71 மாணவர்களின் கண்களுக்கு நடந்தது என்ன? பெண் வைத்திய அதிகாரி பிரியந்தினி மிரட்டப்பட்டது ஏன்?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற NCG பஸ் பாரிய விபத்துக்குள்ளானது!!

கிளிநொச்சியில் பெண் வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கத்தை அலங்கோலப்படுத்தியவர் யார்??

யாழில் நண்பர்களுடன் தேனீர் குடித்துக்கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட துயரம்!!

சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்து!! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்!! (Photos)

பிரதமர் மகிந்தவின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி மகிந்தவின் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த கில்லாடிக்கு நடந்த கதி!!

Related Posts