நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட வீதி விபத்துக்கள்!!

வவுனியா

வவுனியா ஏ9 வீதி பூனாவை பகுதியில் அதிசொகுசு பேருந்து உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 12 பயணிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து சம்பவம் இன்று (14) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

பூனாவை பகுதியில் வீதியின் அருகே விபத்துக்குள்ளான டிப்பர் வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன்போது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானதுடன், குறித்த விபத்துக்குள்ளான பேருந்துடன் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பிறிதொரு அதிசொகுசு பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்து சம்பவத்தில் பேருந்தில் பயணித்த 12 பயணிகள் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து காரணமாக ஏ9 வீதியூடான போக்குவரத்து சுமார் 1 மணிநேரம் வரை ஸ்தம்பித்ததுடன் விபத்துச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார்

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பிரதான வீதி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து சம்பவம் நேற்று (13) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மன்னார் பேசாலை பகுதியில் இருந்து மீன்களை ஏற்றிக் கொண்டு வந்த கூலர் ரக வாகனம் ஒன்றும் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. மன்னார் பொது விளையாட்டு மைதான வீதி ஊடாக வைத்தியசாலை சந்தியை நோக்கி பயணித்த குறித்த வாகனம் வைத்திய சாலை சுற்றுவட்ட பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள கடைகளில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் சாரதி மற்றும் நடத்துனர் பலத்த காயங்களுடன் இப்பகுதியில் ஒன்று கூடியவர்களினால் மீட்கப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

திருகோணமலை

திருகோணமலை கிண்ணியா தள வைத்தியசாலைக்கு முன்னால் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ் விபத்து நேற்று (13 ) பிற்பகல் 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த வயோதிபர் படுகாயம் அடைந்த நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த வயோதிபருடன் பயணித்த 24 வயதுடைய மற்றுமொருவரும், விபத்துக்குள்ளான காரின் சாரதியான பிரபல சட்டத்தரணியும் படுகாயமடைந்த நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Posts

மஹிந்தவிற்கு சத்திர சிகிச்சை நடந்தது உண்மையே!

இலஞ்சம் வாங்கிய போது பாடசாலை அதிபர் வசமாக சிக்கினார்!

யாழில் ஆவா குழுக் காவாலிகளின் இராணுவப்பிரிவின் ஆயுதக் களஞ்சியம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது!!

கிளிநொச்சியில் கண் மாபியாக்களின் கொடூரம்!! 71 மாணவர்களின் கண்களுக்கு நடந்தது என்ன? பெண் வைத்திய அதிகாரி பிரியந்தினி மிரட்டப்பட்டது ஏன்?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற NCG பஸ் பாரிய விபத்துக்குள்ளானது!!

கிளிநொச்சியில் பெண் வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கத்தை அலங்கோலப்படுத்தியவர் யார்??

யாழில் நண்பர்களுடன் தேனீர் குடித்துக்கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட துயரம்!!

சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்து!! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்!! (Photos)

பிரதமர் மகிந்தவின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி மகிந்தவின் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த கில்லாடிக்கு நடந்த கதி!!

Related Posts