நாட்டில் எரிவாயு விநியோகத் தில் மீண்டும் நெருக்கடி

நாட்டில் எரிவாயு விநியோகத் தில் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளதுடன் பல பகுதிகளில் லாஃப்ஸ் எரிவாயு கிடைக்கவில்லை என நுகர்வோர் கூறுகின்றனர்.

லிட்ரோ நிறுவனம் புதிய நியமங்களின் கீழ் சந்தைக்கு எரிவாயுவை விநியோகித்தாலும், நுகர்வோர் பழைய கையிருப் பில் கொள்வனவு செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை கொண்டு வருவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதேவேளை டிசம்பர் 4 ஆம் திகதிக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டர்களுக்குப் பதிலாக புதிய சிலிண்டர்களை வழங்குமாறு சில நாட்களுக்கு முன்னர் நுகர்வோர் விவகார அதிகார சபை லிட்ரோ நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

எனினும், சந்தைக்கு லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக சீல் வைக்கப்படாத பிரச்சினைக் குரிய எரிவாயு சிலிண்டர்களை மாற்றுவதற்காக வாடிக்கையா ளர்கள் கொண்டு வந்த போது புதிய சிலிண்டரை வழங்க வாடிக்கையாளர்களிடம் கால அவகாசம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் எரிவாயு தொடர்பான சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகி வருகின்றன.

அந்தவகையில் ஹட்டன் கொட்டலகல தோட்டத் திலுள்ள வீடொன்றில் இன்று (12) காலை எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாங்கப்பட்ட எரிவாயு சிலிண்டரே இவ்வாறு வெடித்துச் சிதறியுள்ளதாக கூறப்படுகின்றது.

Latest Posts

மஹிந்தவிற்கு சத்திர சிகிச்சை நடந்தது உண்மையே!

இலஞ்சம் வாங்கிய போது பாடசாலை அதிபர் வசமாக சிக்கினார்!

யாழில் ஆவா குழுக் காவாலிகளின் இராணுவப்பிரிவின் ஆயுதக் களஞ்சியம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது!!

கிளிநொச்சியில் கண் மாபியாக்களின் கொடூரம்!! 71 மாணவர்களின் கண்களுக்கு நடந்தது என்ன? பெண் வைத்திய அதிகாரி பிரியந்தினி மிரட்டப்பட்டது ஏன்?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற NCG பஸ் பாரிய விபத்துக்குள்ளானது!!

கிளிநொச்சியில் பெண் வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கத்தை அலங்கோலப்படுத்தியவர் யார்??

யாழில் நண்பர்களுடன் தேனீர் குடித்துக்கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட துயரம்!!

சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்து!! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்!! (Photos)

பிரதமர் மகிந்தவின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி மகிந்தவின் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த கில்லாடிக்கு நடந்த கதி!!

Related Posts