நாட்டில் மூடப்படும் நிலையில் பேக்கரிகள்!

கோதுமை மா நிறுவனங்களால் பேக்கரிகளுக்கு வழங்கப்படும் கோதுமை மாவின் அளவு 50 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நிறுவனங்கள் பெரிய அளவிலான பேக்கரிகளுக்கு கோதுமை மாவை விநியோகம் செய்தாலும், சிறிய மற்றும் நடுத்தர பேக்கரிகளுக்கு கோதுமை மாவு இல்லாததால் பல பேக்கரிகள் மூடப்பட்டு விட்டன.

இந்நிலையில் கோதுமை மாவின் தரத்தில் பிரச்சினைகள் இருப்பதா கவும் இதனால் பாண் விற்பனை வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதோடு தரமற்ற கோதுமை மாவைப் பயன்படுத்துவதால், பாண் உள்ளிட்ட பேக்கரிப் பொருட்களை பதப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரிப் பொருட்களின் விலையை ரூபா 5 முதல் 10 ரூபா வரை அதிகரிக்குமாறு பேக்கரி உரிமையாளர்களிடம் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

முட்டை ஒன்றின் விலை 25 முதல் 30 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளமை மற்றும் மரக்கறிகள், மீன், இறைச்சி மற்றும் பேக்கரி மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையால் பேக்கரித் தொழில் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அச் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கோதுமை மாவு தட்டுப்பாடு காரணமாக பேக்கரி உரிமையாளர்களும் பிஸ்கட் தூள் தயாரிப்பதைக் கைவிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Latest Posts

கொழும்பில் இருந்து யாழ்.சென்ற ரயிலில் மோதி மாணவன் பலி (PHOTO)

முன்னாள் காதலனுடன் உடல் உறவு கொண்ட சிங்களச் சிறுமி!! நேரில் பார்த்த தற்போதய காதலன் செய்த கொடூரம்!! !! (Photo)

புலமை பரிசில் பரீட்சையில் எழுந்துள்ள ச ர் ச் சை ! வி சா ர ணை ந ட த் த பரீட்சைகள் திணைக்களம் தீர்மா ன ம்

யாழில் 12 வயதுச் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்க முற்பட்ட 42 வயது இரண்டு பொண்டாட்டிக்கார மன்மதனை புரட்டி எடுத்த பொதுமக்கள்!!

சுழற்சி முறையில் மின்வெட்டு! சற்றுமுன்னர் வெளியான அட்டவணை

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

கடலில் நீராடச் சென்ற மூன்று சிறுமிகள் உட்பட நால்வருக்கு நேர்ந்த நிலை!

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்!! உத்தியோக பூர்வ அறிவிப்பு!!

யாழில் மாணவர்களை மோதித் தள்ளி வாகனம் – தப்பியோடிய சாரதி
Related Posts