பங்களாதேஷ் கப்பலில் தீவிபத்து: 41 பேர் பலி!

பங்களாதேஷின் தென் பகுதியில் கப்பல் விபத்தில் 41 பேர் உடல் கருகி பலியாகினர். 70க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர். பலர் காணாமல் போயுள்ளனர்.

மூன்றடுக்க கொண்ட கப்பல் ஒன்று சுமார் 800-1,000 பயணிகளுடன் சுகந்தா நதியில் பயணித்துக் கொண்டிருந்தது.

எம்வி அபிஜான் என்ற அந்தக் கப்பல் தலைநகர் டாக்காவில் இருந்து பர்குனா என்ற இடத்திற்குச் சென்று கொண்டிருந்தது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணியளவில், கப்பலின் இன்ஜின் அறையில் தீப்பிடித்தது.

கப்பல் முழுவதும் தீ மளமளவென வேகமாகப் பரவ பயணிகள் பலர் கப்பலில் இருந்து தண்ணீரில் குதித்தனர். சிலர் மூழ்கி இறந்தனர். சிலர் கப்பலுக்குள்ளேயே சிக்கி தீயில் கருகி இறந்தனர்.

இந்தப் படகில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றியதாலேயே விபத்து நடந்துள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றது. விடுமுறையைக் கழிப்பதற்காக குடும்பம், குடும்பமாக இந்தப் படகில் பலரும் பயணித்துள்ளனர்.

தீவிபத்து எற்பட்டதும், கப்பலில் இருந்து குதிக்க முடியாத குழந்தைகளும், முதியவர்களுமே அதிகளவில் கருகி இறந்துள்ளனர்.

விசாரணைக் குழு அமைப்பு: இந்நிலையில் இந்த விபத்து குறித்து விசாரிக்க 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு படகு விபத்துக்கான காரணத்தை அறிந்து மூன்று நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் இந்த விபத்தில் இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

3 மணி நேரம் எரிந்த தீ: தீ விபத்து குறித்து பரிஷால் பிரிவு தீயணைப்புத் துறை இணை இயக்குநர் கமல் உத்தீ புய்யான் கூறுகையில், “விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 15 தீயணைப்பு வாகனங்களுடன் சென்றோம். சரியாக 3.50 மணிக்கு பணி ஆரம்பித்தது. 5.20 மணிக்கு தான் தீயைக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால் 3 மணிக்கே தீ இன்ஜின் அறையில் பிடித்துள்ளது” என்றார்.

தீவிபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனால் கப்பல் பணியாளர் ஒருவர், உணவகத்தின் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறினார். எனினும், தீயணைப்பு சேவையின் பிரிவுத் தலைவர் எம்.டி கமல் ஹொசைன், சிலிண்டர்கள் பாதிப்பில்லாமல் இருப்பதைக் கண்டதாகக் கூறி அதை நிராகரித்தார்.

420 பயணிகள் செல்லவே அனுமதிக்கப்படும் இந்த கப்பலில் இரண்டு மடங்கு பணிகள் ஏற்றப்பட்டுள்ளனர்.

தீ எப்படி தொடங்கியது?

பல்வேறு ஆதாரங்களின்படி, ஏவுகணை வியாழன் மாலை 6 மணிக்கு சதர்காட் முனையத்திலிருந்து புறப்பட்டதிலிருந்து பொறுப்பற்ற வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. ஏற்கனவே இருந்த என்ஜின்கள் மோசமாக செயல்பட்டதால் சமீபத்தில் நிறுவப்பட்ட இரண்டு ரீகண்டிஷன் என்ஜின்களை சரிசெய்ய நான்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியாற்றினர்.

டிசம்பர் 7 ஆம் திகதி மறுசீரமைக்கப்பட்ட என்ஜின்களை நிறுவிய பிறகு, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. புதிதாக நிறுவப்பட்ட என்ஜின்களில் இன்னும் சில சிக்கல்கள் இருந்தபோதிலும், டிசம்பர் 19 அன்று அதன் பயணத்தை மீண்டும் தொடங்கியது.

Latest Posts

மஹிந்தவிற்கு சத்திர சிகிச்சை நடந்தது உண்மையே!

இலஞ்சம் வாங்கிய போது பாடசாலை அதிபர் வசமாக சிக்கினார்!

யாழில் ஆவா குழுக் காவாலிகளின் இராணுவப்பிரிவின் ஆயுதக் களஞ்சியம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது!!

கிளிநொச்சியில் கண் மாபியாக்களின் கொடூரம்!! 71 மாணவர்களின் கண்களுக்கு நடந்தது என்ன? பெண் வைத்திய அதிகாரி பிரியந்தினி மிரட்டப்பட்டது ஏன்?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற NCG பஸ் பாரிய விபத்துக்குள்ளானது!!

கிளிநொச்சியில் பெண் வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கத்தை அலங்கோலப்படுத்தியவர் யார்??

யாழில் நண்பர்களுடன் தேனீர் குடித்துக்கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட துயரம்!!

சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்து!! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்!! (Photos)

பிரதமர் மகிந்தவின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி மகிந்தவின் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த கில்லாடிக்கு நடந்த கதி!!

Related Posts