பாடசாலை நேரத்தில் பாடசாலைக்கு வெளியே வீதியில் நின்ற மாணவர்கள்! என்னை ஏன் கேட்கிறீர்கள் என்கிறார் அதிபர், ஆராய்கிறேன் என்கிறார் கல்வியமைச்சின் செயலாளர்..

யாழ்.காரைநகரில் பாடசாலை நேரத்தில் மாணவர்கள் வீதியில் நின்ற சம்பவம் தொடர்பாக பாடசாலை அதிபரை தொடர்பு கொண்டு கேட்டபோது தனக்கு எதுவும் தொியாது. மேலிடத்தை கேளுங்கள். என அதிபர் பதிலளித்துள்ளார். 

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாணவர்கள் பாடசாலைக்கு வெளியே ஆங்காங்கே நிற்பதை அவதானித்த ஊடகவியலாளர் ஒருவர் ஆதாரத்துடன் அதிபரிடம் கேட்டபோது என்னிடம் எதையும் கேட்க வேண்டாம் மேலிடத்தில் கேளுங்கள் என பதிலளித்தார்.

சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமான நேரம் ஊடகவியலாளர்கள் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அந்த ஒரு மணித்தியாலமும்  பல மாணவர்கள் பாடசாலைக்கு வெளியே நின்றிருந்தனர். சிலர் கடைகளுக்கு செல்வதும் 

பாடசாலைக்கு உள்ளேயும் வெளியேயும் செல்வதுமாக காணப்பட்டனர். இதனை அவதானித்த ஊடகவியலாளர்கள் பாடசாலையின் அதிபரைச் சந்தித்து, “பாடசாலை நடைபெறும் நேரத்தில் மாணவர்கள் எதற்காக வெளியே நிற்கின்றார்கள்?

” என கேட்டபோது குறித்த பாடசாலை அதிபர் இவ்வாறு பதில் வழங்கினார். மேலிடத்தில் அனுமதி வாங்கிவிட்டு வந்தீர்களா?” என கேட்டார். அதற்கு ஊடகவியலாளர்கள், “மாணவர்கள் வெளியில் நிற்பது தொடர்பாக அதிபரிடம் எடுத்துரைப்பதற்கு 

மேலிடத்தில் அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை” என கூறினர். அதற்கு மீண்டும் பதிலளித்த அதிபர், ” மாணவர்கள் வெளியில் நின்றால் அதை ஏன் என்னிடம் வந்து கேட்கின்றீர்கள், போய் மேலிடத்தில் அனுமதி பெற்றுவிட்டு வாருங்கள் எனக்கூறி 

ஆசிரியர்கள் சிலரை அழைத்து ஊடகவியலாளர்களை மிரட்டுவது போல் செயற்பட்டிருந்தார். தற்போது வீதி விபத்துக்களும், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களும் நாளாந்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய அதிபர் இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவது ஒரு ஆரோக்கியமான விடயமா?அண்மையில் குறித்த அதிபர் மாணவன் ஒருவரை தாக்கி, 

அந்த மாணவனின் செவிப்பறை பாதிப்படையச் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விடயம் தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதாக தெரிவித்தார்.

Latest Posts

கொழும்பில் இருந்து யாழ்.சென்ற ரயிலில் மோதி மாணவன் பலி (PHOTO)

முன்னாள் காதலனுடன் உடல் உறவு கொண்ட சிங்களச் சிறுமி!! நேரில் பார்த்த தற்போதய காதலன் செய்த கொடூரம்!! !! (Photo)

புலமை பரிசில் பரீட்சையில் எழுந்துள்ள ச ர் ச் சை ! வி சா ர ணை ந ட த் த பரீட்சைகள் திணைக்களம் தீர்மா ன ம்

யாழில் 12 வயதுச் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்க முற்பட்ட 42 வயது இரண்டு பொண்டாட்டிக்கார மன்மதனை புரட்டி எடுத்த பொதுமக்கள்!!

சுழற்சி முறையில் மின்வெட்டு! சற்றுமுன்னர் வெளியான அட்டவணை

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

கடலில் நீராடச் சென்ற மூன்று சிறுமிகள் உட்பட நால்வருக்கு நேர்ந்த நிலை!

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்!! உத்தியோக பூர்வ அறிவிப்பு!!

யாழில் மாணவர்களை மோதித் தள்ளி வாகனம் – தப்பியோடிய சாரதி




Related Posts