பிரான்ஸ் ஜனாதிபதியின் கன்னத்தில் அறைந்த இளைஞனுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

  • குமாரதாஸன். பாரிஸ்.

பிரான்ஸின் அதிபர் எமானுவல் மக்ரோனின் முகத்தில் அறைந்த
இளைஞருக்கு, 14 மாதங்கள் ஒத்தி வைக்கப்பட்ட 18 மாதகால சிறைத்
தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

அதன் படி நான்கு மாதங்கள் அவர் முழுமையாகச் சிறையில் அடைக்கப்படுவார். ஏஞ்சிய 14 மாதங்கள் கட்டாய உளவியல் சிகிச்சை மற்றும் கண்காணிப் புகளுடன் பராமரிக்கப்படுவார்.ஆனால் அபராதத் தொகை எதுவும் விதிக்கப்படவில்லை.

  அத்துடன் இரண்டு ஆண்டுகள் கட்டாய வேலை மற்றும் தொழில் பயிற்சிகளில்
ஈடுபடவேண்டும். அவர் ஆயுதங்களை வைத்திருப்பதற்கு ஐந்து ஆண்டுகள்
தடை விதிக்கப்படுகிறது. அத்துடன் மூன்று ஆண்டுகளுக்கு அவரது சிவில்
உரிமைகளும் பறிக்கப்படுகின்றன.

தாமியன் தாரெல்(Damien Tarel) என்ற 28 வயதுடைய அந்த இளைஞர் கடந்த செவ்வாயன்று அதிபர் மக்ரோனை முகத்தில் அறைந்து தாக்கியமைக்காகக் கைது செய்யப்பட்டிருந்தார். 

சம்பவம் நடந்து 48 மணி நேரங்களில் விரைவாக ஆஜர் செய்கின்ற நடைமுறை
களின் கீழ் அவர் இன்று Valencia நகரில் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

அங்கு அவர் தனது குற்றத்தை ஏற்றுக் கொண்டார். ஆனால் தன்னைப் போன்று அநீதியை உணர்கின்ற பிரெஞ்சு மக்களி னதும் மஞ்சள் மேலங்கியினரதும் சார்பில் தனது செயலுக்கு விளக்கம் அளிப்பது போன்று அவரது பதில்கள் அமைந்தன.

  “அரசியல் விடயங்களில் அதிபருக்குச் சவால் விடும் விதமாக ஏதாவது செய்வதற்கு ஆலோசித்தோம்.

மக்ரோனுக்கு எதிராக முட்டையை அல்லது கிறீமை வீசுவது என்றே முதலில் 
தீர்மானித்திருந்தோம். ஆனால் அவரை முகத்தில் அறைந்த செயல் திட்டமிட்டுச் செய்தது அல்ல. அவர் என்னை நோக்கி மிக நெருக்கமாக வருவது எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.

  “என்னைத் தனது வாக்காளராக்குவதற்கு விரும்பும் அவரது அனுதாபத்தையும் பொய்யான பார்வையையும் கண்டபோது எனக்குள் வெறுப்பு ஏற்பட்டது.

” உள்ளுணர்வின் படி செயற்பட்டேன். இந்தச் செயல் வருந்தத்தக்கது. ஆனால் நான் என்ன செய்கிறேன் என்பதை எந்த வகையிலும் கருத்தில் கொள்ளவில்லை எங்கள் ஜனநாயகத்தை சோதனைக்கு உட்படுத்த நான் விரும்பவில்லை. ஆனால் அவர்(மக்ரோன்) முழு பிரெஞ்சு மக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்லர் என நான் எண்ணுகிறேன்.

எங்கள் நாட்டின் வீழ்ச்சியையே அவர் பிரதிபலிக்கிறார். “மக்களும் மஞ்சள் மேலங்கியினரும் குரல் எழுப்புகிறார்கள். ஆனால் அவர்களது குரல்கள் செவிமடுக்கப்படவில்லை என நம்புகிறேன். 

மஞ்சள் மேலங்கி அரசியல் இயக்கத்தின்( yellow vests) ஒரு பகுதியாகவே நானும் இருக்கின்றேன்.” -இவ்வாறு நீதிமன்றத்தில் கேள்விக ளுக்கு பதிலளிக்கையில் தாமியன் தெரிவித்திருக்கிறார்.

மக்ரோனின் முகத்தில் அறைவதைப் படமாக்கிக் கொண்டு நின்ற தாமியனின்
நண்பனும் கைது செய்யப்பட்டார். அவரது இல்லத்தில் பொலீஸார் நடத்திய
சோதனையின்போது அனுமதி இன்றி வைத்திருந்த பழைய ஆயுதங்கள் சிலவும் ஹிட்லரின் “மாயின் காம்ப் (“Hitler’s “Mein Kampf”) என்ற நூலின் பிரதிகளும் மீட்கப்பட்டிருந்தன. அவருக்கு எதிரான நீதி விசாரணைகள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளன.




Latest Posts

அரச நிறுவனங்கள், பொது இடங்களுக்குச் செல்வோருக்கு கோவிட்-19 தடுப்பூசி அட்டை அவசியம் – எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தத் தீர்மானம்

ஆகஸ்ட் 2 முதல் அனைத்து அரசாங்க ஊழியர்களையும் மீண்டும் கடமைக்கு அழைக்க ஜனாதிபதி செயலாளர் உத்தரவு

புற்று நோயால் திடீரென இறந்த ஒரு பிள்ளையின் தந்தையான இள வயது ஆசிரியர்

ஹிஷாலினியின் சரீரத்தை தோண்டி எடுக்கும் நடவடிக்கை ஆரம்பம்! (படங்கள்)

15 வயதுச் சிங்களச்சிறுமியின் உடல் உறவுக் காட்சியை இணையத்தளத்தில் பார்வையிட 5 நிமிடத்திற்கு 5 ஆயிரம் ரூபா!! நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு இது!!

வடமாகாண அமைச்சு வாகனத்தை கொழும்பிலிருந்து உறவினர்களை அழைத்துவர பயன்படுத்திய அதிகாரி!

10 பேருக்கு கொரோனா! இரு வர்த்தக நிலையங்களுக்கு சீல் வைப்பு

வெள்ளவத்தையில் தொடர்மாடி குடியிருப்பில் வெளிநாட்டு பெண் தற்கொலை!

யாழில் பெண்கள் சிலரின் மோசமான செயல்; பிறந்த நாளில் இளைஞர் விபரீத முடிவு!

மீண்டும் நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு? வெளியான தகவல்

புறா சண்டை!! கொரோனா தொற்றுடன் பெண்கள் ஆடிய பேயாட்டம்!!

விவாகரத்தான பெண் மீது காதல்; ஏற்க மறுத்ததால் யாழ் இளைஞன் செய்த செயல்

உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் சீனாவுக்கு விற்பனை? வெளியானது மற்றுமொரு தகவல்

வடக்கில் நாளை முதல் 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி

‘சீனாவில் ஏலத்துக்கு செல்லும் உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல்’

அரச ஊழியர்கள் இனி சீதனம் வாங்க முடியாது: புதிய சட்டம்!

சுகாதாரப் பரிசோதகரின் விளையாட்டு கண்ணீருடன் யுவதி!

விவாகரத்து செய்த மனைவியை பார்க்க வந்த முன்னாள் கணவர்: பூட்டிய வீட்டில் நடந்த விபரீதம்!!

அடுப்படியில் பெற்றோலை வைத்த கணவன்; அறியாமல் அடுப்பை மூட்டிய இளம் பெண் எரிந்து மரணம்: யாழில் துயரம்!

யாழிலிருந்து தொழில் தேடி கொழும்பிற்கு சென்ற சிறுவனிற்கு ஏற்பட்ட கதி: வீதியோரங்களில் தூங்கும் அவலம்!

வடக்கிற்கு இன்று கிடைத்த தடுப்பூசிகள் 29ம் திகதி முதல் செலுத்தல்!

போலி நோட்டுகளுடன் கடைக்குச் சென்றவரின் பையில் போலி நோட்டுக்களை அச்சிட பயன்படுத்திய இயந்திரம்! வெல்லம்பிட்டி நபர் கைது!

ஹிஷாலினிக்கு பதிலான சிங்கள பெயரை வழங்கிய ரிஷாட்டின் மாமனார் – செயலிழந்த CCTV கமராக்கள் – நீதிமன்றில் வெளியாகிய பரபரப்பு மிக்க தகவல்கள்

சம்பவம் நடக்க முதல் செயலிழந்த சிசிடீவிகள்; பல மர்மங்கள் நீதிமன்றில் வெளிப்படுத்தல்!

மருத்துவத்துறைக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு சவால்! மஞ்சள் நிறமாக மாறிய சிறுவனின் நாக்கு

திருமணமான 10 மாதத்தில் கிணற்றிற்குள் சடலங்களாக மிதக்கும் இளம் ஜோடி

இன்றைய ராசிபலன் – 27/07/2021

மாணவியை ஏமாற்றி அழைத்துச்சென்று துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது!

இலங்கை சாதனையை பாராட்டிய உலக சுகாதார அமைப்பு.

காதலியை திருமணம் செய்ய முயற்சித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி! பெண் வீட்டார் செய்த திட்டமிட்ட சம்பவம்..!!!

கொவிஷீல்ட் செலுத்திக் கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு

தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் குறித்து ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

இலங்கையில் அனைத்து பாலியல் இணையத்தளங்களுக்கும் தடை! – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

யாழ்.தாதியர் பயிற்சி கல்லுாரியில் தனிமைப்படுத்தப்பட்ட 64 பேர் ; அனைவருமே 2 டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றவர்களாம்

யாழில் மதுபோதையில் பொலிஸார் அட்டகாசம்; இளைஞனை கடத்தி சித்திரவதை!

தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு 100 டொலர்கள் பரிசு:எங்கு தெரியுமா?

தீராத பண கஷ்டங்களை நீக்க இதை செய்யுங்கள் !

பிரபல நடிகரால் 3 முறை கர்ப்பமான முன்னணி நடிகை ? யார் தெரியுமா? அதிர்ச்சியில் திரையுலகம்!

நயன்தாரா செய்தது நியாயமா, கேட்க தைரியம் இருக்கா?- மீண்டும் வம்பிழுக்கும் வனிதா







Related Posts

%d bloggers like this: