மட்டக்களப்பில் யாசகம் கேட்பது போல் வீடொன்றுக்கு வந்த, தந்தையும் மகளும் பட்டப்பகலில் கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த பரபரப்பு சம்பவம்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்டஅரசடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வர்த்தகர் ஒருவரின் மனைவியை கொலை செய்துவிட்டு அவரது நகைகளை கொள்ளையிட்டு சென்ற இருவர் பொதுமக்களினால் மட்டக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் மட்டக்களப்பு அரசடி, பார்வீதியில் உள்ள வீட்டிலேயே இந்த துயரச்சம்பவம் நடைபெற்றுள்ளது.குறித்த வீட்டுக்கு வழமையாக வருகைதந்து வேலைகள் செய்து விட்டுச்செல்லும் தகப்பனும் மகளுமே இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளது தொடர்பாக ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தகப்பனும் மகளும் பசிக்கிறது சாப்பாடு தாருங்கள் என்று கூறி குறித்த பெண்ணிடம் சாப்பாடு வாங்கி உண்ட பின்னரே இந்த கொலையினை செய்துள்ளனர்.இன்று வீட்டுக்கு வந்தவர்கள் குறித்த வீட்டில் வேலைகளை செய்துவிட்டு உணவு உண்டுகொண்டிருக்கும்போது திடிரென குறித்த வீட்டின் உரிமையாளர் பெண் மீது கத்தியால் சரமாரியாக வெட்டுள்ளதுடன் கழுத்தை வெட்டிய பின் தாலிக்கொடியை பிய்த்துள்ளதுடன் காதுகளில் உள்ளவற்றை கழட்ட முடியாத நிலையில் அதனை வெட்டி எடுத்துச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இருவரும் குறித்த பெண்னை கொலைசெய்துவிட்டு அங்கிருந்த தங்க நகைகளை களவாடிச் சென்றபோது வீதியில் நின்றவர்கள் அவர்களின் உடைகளில் இரத்தக்கறை உள்ளதை கண்டு சந்தேகம் கொண்டு துரத்திச்சென்று இருவரையும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தின்போது 50 வயதுடைய தயாவதி செல்வராஜா என்னும் பெண்ணே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதிக்கு வந்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்ட தடவியல் பிரிவு பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் காரணமாக குறித்த பகுதியில் பெருமளவு மக்கள் ஒன்றுகூடியதன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமையும் ஏ ற்ப ட்டுள்ளதை காணமுடிந்தது.

Latest Posts

கொழும்பில் இருந்து யாழ்.சென்ற ரயிலில் மோதி மாணவன் பலி (PHOTO)

முன்னாள் காதலனுடன் உடல் உறவு கொண்ட சிங்களச் சிறுமி!! நேரில் பார்த்த தற்போதய காதலன் செய்த கொடூரம்!! !! (Photo)

புலமை பரிசில் பரீட்சையில் எழுந்துள்ள ச ர் ச் சை ! வி சா ர ணை ந ட த் த பரீட்சைகள் திணைக்களம் தீர்மா ன ம்

யாழில் 12 வயதுச் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்க முற்பட்ட 42 வயது இரண்டு பொண்டாட்டிக்கார மன்மதனை புரட்டி எடுத்த பொதுமக்கள்!!

சுழற்சி முறையில் மின்வெட்டு! சற்றுமுன்னர் வெளியான அட்டவணை

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

கடலில் நீராடச் சென்ற மூன்று சிறுமிகள் உட்பட நால்வருக்கு நேர்ந்த நிலை!

தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி வந்த ஏழு பேர் கைது! வெளியான பகீர் காரணம்

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்!! உத்தியோக பூர்வ அறிவிப்பு!!

யாழில் மாணவர்களை மோதித் தள்ளி வாகனம் – தப்பியோடிய சாரதி
Related Posts