மீள முடியா பொறிக்குள் இலங்கை! மக்கள் மீது விழுந்த பேரடி – தேடிப் பெறப்போகும் ஆபத்து

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது பொதுமக்கள் மீது விழுந்த பெரும் அடியாக பொருளாதார நிபுர்ணகளும் எதிர் கட்சியினரும் கடுமையாக சாடி வருகின்றனர்.

நாட்டில் உள்நாட்டு உற்பத்தி நலிவடைந்து, ஏற்றுமதி குறைவடைந்து, சுற்றுலாத்துறை முடங்கிய நிலையில், டொலர் கையிருப்பு, நிதிக் கட்டமைப்பு என்பனை சிதைந்திருப்பதாக குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வது சிறந்தது என்று இப்போதைக்கு சிறந்த தீர்வு என்கிறார்கள் எதிர்கட்சியினர். இது தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அரசாங்கத்திற்கு அறிவுரை வழங்கியிருந்தார்.

எனினும் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வது என்பது நிபந்தனைகளுக்கு அடிபணிய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று அமைச்சர்கள் தெரிவிப்பதுடன், அதற்கு மறுப்பும் தெரிவித்துவருகிறார்கள். இதற்கிடையில், பல்வேறு நாடுகளிடம் கடன்களை அரசாங்கம் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறது.

டொலர் கையிருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக அரசாங்கம் தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறது. இந்த நிலையில் வெளிநாட்டுக்கடன்களில் மூலம் இலங்கையின் டொலர் கையிருப்பை தக்க வைப்பதற்கு முயற்சித்தால் அது பேராபத்தாக மாறும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த பேசுகையில்,

“நாட்டிற்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்ய டொலர்கள் இல்லை, குழந்தைகளுக்கான பால்மாவை இறக்குமதி செய்ய வெளிநாட்டு கையிருப்பு இல்லை, துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கொள்கலன்களை விடுவிக்க டொலர் இல்லை.

நாட்டில் பாரிய அளவில் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலையொன்று ஏற்பட்டுள்ளது. இவற்றை சமாளிக்கக்கூடிய வகையில் எமது வெளிநாட்டு கையிருப்பு இல்லை. எம்மிடம் உள்ள நிரை வெளிநாட்டு கையிருப்பு குறித்தே சிந்திக்க வேண்டும்.

கடன்களை பெற்று வெளிநாட்டு கையிருப்பை வெளிக்காட்ட முடியாது. எமது கையிருப்பில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களே உள்ளன. இப்போது சீனாவிடம் பெற்றுக்கொண்ட கடன்கள் மூலமாக இந்த எண்ணிக்கை 3.1 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளது.

எனினும் இவ்வாறு வேறு நாடுகளிடம் கடன்களை பெற்றுக்கொண்டு எமது கையிருப்பை தக்கவைக்க முடியாது. பெற்றுக்கொண்ட கடன்களை வட்டியுடன் மீளவும் செலுத்த வேண்டும். ஆகவே கடன்களில் வெளிநாட்டு கையிருப்பை தக்கவைக்க நினைப்பது பாதகமான செயற்பாடாகும். இதன்போது குறுகியகால சவால்களை எவ்வாறு கையாளப்போகின்றோம். நீண்டகால கடன் நெருக்கடிகளுக்கு எவ்வாறு முகங்கொடுக்க போகின்றோம் என்பன பாரதூரமான பிரச்சினையாகும்.

அடுத்த ஆண்டில் 6.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை சர்வதேச கடன்களாக செலுத்த வேண்டியுள்ளது. இவற்றில் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சர்வதேச பிணைமுறிகள் உள்ளடங்குகின்றன.

எனவே இவற்றை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதையோ அல்லது வேறு மாற்று வேலைத்திட்டங்களை கையாள்வதையோ சிந்திக்க வேண்டும். எந்த தீர்மானம் எடுத்தாலும் அவற்றை உடனடியாக எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது தொடர்பில் எதிர் கட்சிகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருக்கும் நிலையில் இராஜாங்க அமைச்சரும் இந்த யோசனையை முன்வைத்திருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

எவ்வாறாயினும் இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கு அரசாங்கம் தீர்வு காணும் என்று மற்றைய அமைச்சர்கள் திட்டவட்டமாக கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

மஹிந்தவிற்கு சத்திர சிகிச்சை நடந்தது உண்மையே!

இலஞ்சம் வாங்கிய போது பாடசாலை அதிபர் வசமாக சிக்கினார்!

யாழில் ஆவா குழுக் காவாலிகளின் இராணுவப்பிரிவின் ஆயுதக் களஞ்சியம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது!!

கிளிநொச்சியில் கண் மாபியாக்களின் கொடூரம்!! 71 மாணவர்களின் கண்களுக்கு நடந்தது என்ன? பெண் வைத்திய அதிகாரி பிரியந்தினி மிரட்டப்பட்டது ஏன்?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற NCG பஸ் பாரிய விபத்துக்குள்ளானது!!

கிளிநொச்சியில் பெண் வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கத்தை அலங்கோலப்படுத்தியவர் யார்??

யாழில் நண்பர்களுடன் தேனீர் குடித்துக்கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட துயரம்!!

சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்து!! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்!! (Photos)

பிரதமர் மகிந்தவின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி மகிந்தவின் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த கில்லாடிக்கு நடந்த கதி!!

Related Posts