முதலிரவு அறையில் உயிர்மாய்த்த மணமகன் – மணமகளிடம் விசாரணை!

சென்னை திருமுல்லைவாயலில் முதலிரவு அறையில் மணமகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் தாலுகா, குள்ளப்பான் தண்டலம் போஸ்ட் நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்வர் சரஸ்வதி. இவர் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், `என்னுடைய தம்பியான கார்த்திகேயனுக்கு உறவுக்கார பெண்ணான நந்தியினுடன் 8-ம் தேதி திருமணம் நடந்தது. திருமுல்லைவாயலிலுள்ள பெண் வீட்டில் அன்றைய தினம் இரவு 9:30 மணியளவில் முதலிரவுக்காக மணமகனையும் மணமகளையும் அறைக்குள் அனுப்பிவிட்டு பக்கத்து அறையில் நாங்கள் தூங்கினோம்.

9-ம் தேதி காலை 6 மணியளவில் மணமகள் நந்தினி கதவைத் தட்டினார். `ஐயோ… இங்கே வந்து பாருங்களேன்’ என்று அவள் அலறினாள். உடனே நாங்கள் பூட்டிய அறையைத் திறந்து பார்த்தபோது மணமகன் காத்திகேயன் முதலிரவு அறையில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தான். உடனே நான் நந்தியினிடம் `இரவில் ஏதாவது பிரச்னையா?’ என்று கேட்டேன். அதற்கு அவள் `பிரச்னை எதுவும் இல்லை. கார்த்திகேயன் பதற்றத்தில் இருந்தார்.

எனவே நான் பரவாயில்லை என சமாதானம் செய்தேன். பிறகு நான் தூங்கிவிட்டேன். காலையில் கண்விழித்துப் பார்த்தபோது கார்த்திகேயன் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்’ என்று கூறினார். எனவே, என் தம்பி கார்த்திகேயனின் உடலை பிரேத பரிசோதனைக்குப் பிறகு என்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் விஜய் முத்துகுமார், இந்திய தண்டனைச் சட்டம், 174 என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், “மணமகனின் சகோதரி சரஸ்வதி என்பவர் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறோம். மணமகன் கார்த்திகேயனின் அத்தை மகள்தான் நந்தினி. பெற்றோர் சம்மதத்துடன்தான் திருமணம் சிறப்பாக நடந்திருக்கிறது. முதலிரவு அறையில் என்ன நடந்தது என்று மணமகள் நந்தினியிடம் விசாரித்தபோது கார்த்திகேயன் பதற்றத்தில் இருந்ததாகவும், பாத்ரூம் சென்றுவிட்டு வந்ததாகவும் குறிப்பிட்டார். அப்போது கார்த்திகேயனிடம் `பிரச்னை எதுவும் இல்லை’ என நந்தினி ஆறுதல் கூறியதாகவும் தெரிவித்தார்.

 மணமகள் நந்தினியும், அவரின் குடும்பத்தினரும் அதிர்ச்சியில் இருப்பதால் இறுதிச் சடங்கு முடிந்த பிறகு இரு தரப்பு குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்திருக்கிறோம். கார்த்திகேயனின் செல்போனை ஆய்வு செய்துவருகிறோம்” என்றனர்.

முதலிரவில் மணமகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.




Latest Posts

யாழில் கும்பிட்டுக் கொண்டிருந்த பெண் உயிரிழப்பு!கொரோனா தொற்று உறுதி

நள்ளிரவு கடந்தும் செல்போனில் பேச்சு: தட்டிக்கேட்ட கணவனை கத்தியால் குத்திய மனைவி!

வவுனியாவில் பசுவை வெட்டி குளத்தில் வீசிய விசமிகள்!

மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்: வெளியான அதிர்ச்சி பின்னணி!

புலம்பெயர் தமிழ்ச் சிறுமியாக தமிழ்க் கலாச்சாரத்துடன் ‘சுப்பர் சிங்கர்’ சென்ற கனடா குயில் ஜெசிக்காகவர்ச்சி உடையில்!! (Photos)

கொவிட் தொற்று குணமடைந்த இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!!

இன்றைய ராசிபலன் (28.09.2021)

கனடாவில் புலம்பெயர் பெண்கள் இருவர் கலியாணம் கட்டிய காட்சிகள்!! (Photos)

யாழில் இரட்டைக் கொலை வழக்கில் பிணையில் வந்தவர் ஆட்டோவை விட்டுவிட்டு தலைதெறிக்க ஓடியது ஏன்???

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்! – இருவர் பலி

பிரித்தானியாவில் இலங்கையரின் மோசமான செயல் – காதலிக்கு நேர்ந்த பரிதாபம்

வாளுடன் டிக் டொக் காணொளி பதிவு; யாழில் 19 வயது ரவுடி கைது!

இந்த விஷயங்களுக்காக தம்பதிகள் சண்டை போட்டுக்கொள்ள வேண்டுமாம்! காரணம் என்ன தெரியுமா?

நாட்டில் அரிசி தேடி வரிசையில் நிற்க வேண்டிய நிலை உருவாகும் என எச்சரிக்கை

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக கல்வி அமைச்சு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

தினம் வாழைப்பழம் சாபிட்டால் போதும்! எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

சடங்கு செய்யச் சென்ற யுவதிக்கு பூசாரியால் நேர்ந்த துயரம்!

பிணையில் வந்தவர் செய்த கொடூரம்; பரிதாபமாக உயிரிழந்த பெண்!

தாடியில் கைவைக்க வேண்டாம்; தலிபான்கள் விடுத்த கடும் உத்தரவு!

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டால் விடுமுறை வழங்கப்படமாட்டாது; கல்வி அமைச்சு!!

ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் மீட்கப்பட்ட பிரித்தானியர் சடலம்.

லண்டனை உலுக்கிய ஆரம்பப்பள்ளி ஆசிரியை மரணம்; வெளியான அதிர்ச்சி தகவல்!!

நால்வரை கொலை செய்து சடலங்களை கிரேனில் தொங்கவிட்ட தலிபான்கள்!! (Video)

யாழ் அல்வாயில் அலங்கோலம் செய்து திரிந்த காவாலி வெட்டுகுமாருக்கு நடந்த கதி இது!

இலங்கையில் எரிபொருள் தட்டுபாடா?….வெளியான தகவல்

நாட்டை திறப்பது தொடர்பில் அரசாங்கம் விடுத்த அறிவிப்பு!

கொவிட் தடுப்பூசியால் பாலியல் பாதிப்புகளா? விசேட வைத்தியர் விளக்கம்

தனது நாக்கை விசித்திரமான முறையில் 2 துண்டுகளாக அறுத்து வைத்திருக்கும் யாழ் இளைஞன்!! பொலிசார் விசாரணை!!(Photos)

நாட்டை திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகள் தயார்! இராணுவ தளபதி அறிவிப்பு

யாழில் தீவிரமடைந்துள்ள வாள் வெட்டுக்குழுக்களின் அட்டகாசம்

இன்றைய இராசிபலன்கள் (27.09.2021)

திடீரென பற்றி எரிந்த முச்சக்கரவண்டி – ஒருவர் பலி

கோட்டாவை கோமாளியாக்கிய வஜிர அபேவர்தன மஹிந்த கொடுக்கும் அதிர்ச்சி வைத்தியம்

பளையில் 800 மிளகாய் செடிகளை பிடிடுங்கி எறிந்தது ஏன்?? யுத்தம் முடிவடைந்த பின்னர் நாம் தமிழனின் மனநிலை மாறிவிட்டதா??

தடுப்பூசியைப் பெற்ற இளம் வயதினருக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

தடுப்பூசி தொடர்பில் மீண்டும் வலியுறுத்திய இராணுவத் தளபதி!







Related Posts

%d bloggers like this: