யாழில் தீவிரமடைந்துள்ள வாள் வெட்டுக்குழுக்களின் அட்டகாசம்

யாழ். வடமராட்சி பிரதேசத்தின் அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் வாள் வெட்டுக்குழுக்களின் அட்டகாசம் மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2 ம் திகதி மதுபோதையில் சென்ற அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தை சேர்ந்த பிரபல வாள் வெட்டு குழு, தலைவர் வெட்டுக்குமாரால் கடுமையாக தாக்கப்பட்டு, வீடுகள் உடைக்கப்பட்டு பலத்த தாக்குதலுக்கு உள்ளான ஆறு குடும்பங்கள் அன்றிரவே உயிருக்கு பயந்து தலைமறைவாகி வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுன்றது.

இந்நிலையில், நேற்று முன்தினம் குறித்த வாள்வெட்டு குழுவினரால் இரண்டு வீடுகள் பெட்ரோல் ஊற்றி தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், பல வீடுகளின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டும் அங்கிருந்த சொத்துக்கள், உடமைகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

குறித்த வாள் வெட்டுக்குழுவின் பிரதான சந்தேகநபர் கஞ்சா கடத்தல், களவு, கசிப்பு உற்பத்தி உட்பட வீடுகளுக்குள் புகுந்து களவாடுதல், ஆட்களை மிரட்டி பணம் ,பொருள் பறித்தல் உட்பட பல்வேறு கொள்ளை சம்பவங்கள், கொலைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதான சந்தேகநபரான வெட்டுக்குமார் நேற்று முன்தினம் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவரது சகோதரனான ஜெயா என்றழைக்கப்படும் ஜெயராசா தலைமறைவாகியுள்ளதுடன், இச்சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை பொலிஸாரால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டும், அவரது சகோதரன் கைது செய்யப்படாத நிலையில்,பலர் தலைமறைவாகியுள்ளமையினால் பிரதேச மக்கள் உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest Posts

மஹிந்தவிற்கு சத்திர சிகிச்சை நடந்தது உண்மையே!

இலஞ்சம் வாங்கிய போது பாடசாலை அதிபர் வசமாக சிக்கினார்!

யாழில் ஆவா குழுக் காவாலிகளின் இராணுவப்பிரிவின் ஆயுதக் களஞ்சியம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது!!

கிளிநொச்சியில் கண் மாபியாக்களின் கொடூரம்!! 71 மாணவர்களின் கண்களுக்கு நடந்தது என்ன? பெண் வைத்திய அதிகாரி பிரியந்தினி மிரட்டப்பட்டது ஏன்?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற NCG பஸ் பாரிய விபத்துக்குள்ளானது!!

கிளிநொச்சியில் பெண் வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கத்தை அலங்கோலப்படுத்தியவர் யார்??

யாழில் நண்பர்களுடன் தேனீர் குடித்துக்கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட துயரம்!!

சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்து!! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்!! (Photos)

பிரதமர் மகிந்தவின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி மகிந்தவின் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த கில்லாடிக்கு நடந்த கதி!!

Related Posts