யாழில் வீதியில் கிடந்த தாலிக்கொடி, நகைப் பொதியை உரியவரிடம் ஒப்படைத்த மதுசன்

பஸ் வந்துவிட்டது என்ற பரபரப்பில் அவசரமாக ஏறியயவர் ஏறும்போது, யாழ்ப்பாணம் , அரியாலை என்ற இடத்திலுள்ள பஸ் தரிப்பிடத்தில் கைப்பை தவறி கீழே விழுந்துவிட்டுவிட்டார்.

கைப்பையின் உரிமையாளர்  இதனைக் கவனிக்கத் தவறிவிட்டார். ஆனால் அந்த வழியாகச் சென்ற தியானேஸ் மதுசன் என்ற இருபத்திரண்டு வயது இளைஞனின் கண்களில் அந்தக் கைப்பை அகப்பட்டுள்ளது.

எடுத்துத் திறந்து பார்த்துள்ளார்.

உள்ளே தாலிக்கொடி உள்ளிட்ட நகைகளைக் கண்டதும் , வெலவெலத்துப் போனவர் அக்கைப்பையை மேலும் ஆராய்ந்து அதனுள் இருந்த உரிமையாளரின் தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து, விடயத்தைக் கூறியதோடு , கைப்பைக்கு உரியவரின் அறிவுறுத்தலுக்கமைய யாழ்ப்பாண உறவினரிடம் நேரில் சென்று ஒப்படைத்துமுள்ளார்.

அடுத்தவர் பொருளை அடித்துப் பறிக்கும் இன்றைய உலகில்…

நேற்றுப் பேருந்தில் இருந்தோர் “பவுண் விற்கிற விலையில எடுத்தவன் தருவானா?” என்று கூறிய கூற்றுக்கெல்லாம் மறுதலையாய் , செயற்பட்ட தியானேஸ் மதுசன் அவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது!

வாழ்த்துக்கள் மதுசன் !

உங்களைப் போன்றவர்களால்தான் உலகம் சுழல்கிறது!

இவரது இச் செயல் சமூகவலைத்தளங்களில் பாராட்டப்படுகின்றது….

Latest Posts

மஹிந்தவிற்கு சத்திர சிகிச்சை நடந்தது உண்மையே!

இலஞ்சம் வாங்கிய போது பாடசாலை அதிபர் வசமாக சிக்கினார்!

யாழில் ஆவா குழுக் காவாலிகளின் இராணுவப்பிரிவின் ஆயுதக் களஞ்சியம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது!!

கிளிநொச்சியில் கண் மாபியாக்களின் கொடூரம்!! 71 மாணவர்களின் கண்களுக்கு நடந்தது என்ன? பெண் வைத்திய அதிகாரி பிரியந்தினி மிரட்டப்பட்டது ஏன்?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற NCG பஸ் பாரிய விபத்துக்குள்ளானது!!

கிளிநொச்சியில் பெண் வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கத்தை அலங்கோலப்படுத்தியவர் யார்??

யாழில் நண்பர்களுடன் தேனீர் குடித்துக்கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட துயரம்!!

சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்து!! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்!! (Photos)

பிரதமர் மகிந்தவின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி மகிந்தவின் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த கில்லாடிக்கு நடந்த கதி!!

Related Posts