யாழ்ப்பாணத்தில் கனவு இல்லம் கட்டும் ஆசையில் இருப்பவர்களை அலங்கோலம் செய்யும் ஒப்பந்தகாரர்கள்!! நடப்பது என்ன?? வாசியுங்கள்.. யோசியுங்கள்!!

யாழ்ப்பாணத்தில் இன்று மூன்று தொழில்கள் கொடிகட்டிப் பறக்கின்றது. காணி விற்கும் தரகர்கள். இரண்டாவது கலியாண புரோக்கர்ஸ். மூன்றாவது வீடு கட்டுமானம் மேற்கொள்ளும் ஒப்பந்தக்காரர்கள்.

கனவு இல்லம் ஒன்றைக் கட்டவேண்டும் என்று எதிர்பார்க்கும், பெருமளவானோர் இந்த ஒப்பந்தக்காரர்களால் ஏமாற்றப்படுகின்றனர்.

சாந்தகப்பை பிடித்தவன் எல்லாம் மேசன் என்ற காலம் போய், இப்ப சும்மா கிடந்தவன் எல்லாம் வீடு கட்டுற வேலை பண்ணுறான். இதனால் தொழில்முறையில் தேர்ச்சி பெற்றவர்களையும் சந்தேகக் கண்ணுடன் பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில காணி வாங்குறதே, பெரியபாடு, வாங்கின காணியில வீடு கட்டுற என்டுறது அதைவிட கொடுமை. இந்த ஒப்பந்தகாரர்களினால்,

இலட்சங்களில் வீடு கட்ட முடியாது. கோடிகள் வேண்டும். கஸ்ரப்பட்டு உழைச்சவன், கோடிகளை எங்கிருந்து சேர்ப்பான்.

முன்னைய காலங்களில், பொருட்களை வாங்கிக் கொடுத்து, அணுஅணுவாக வீடுகள் கட்டினார்கள். இப்போது நிலைமை மாறிவிட்டது.

கூலிக்கு ஒப்பந்தம், முழுமையான ஒப்பந்தம் என்று இரண்டு ஒப்பந்தங்களை ஒப்பந்தக்காரர்கள் வைத்துள்ளனர்.

கூலிக்கு ஒப்பந்தம் என்பது ஓரளவுக்கு வீடு கட்டுறவனை பாதிக்கவிடாது. பொருட்களை நாங்கள் வாங்கிக் கொடுக்க வேண்டும், கூலி மாத்திரம் ஒப்பந்தக்காரர்களுடையது.

மாறாக முழுமையான ஒப்பந்தம் என்று கொடுத்துவிட்டால், அதோகதி தான். காலம்காலமாக வாழவேண்டிய வீடுகளுக்கு, காலாவதியாகிய சாமான்கள் வந்து சேரும். ஒருசில ஒப்பந்தக்காரர்களைத் தவிர மிச்சம் அனைவரும் சுருட்டுற வேலை தான் பண்ணுகிறார்கள்.

ஒப்பந்தக்காரர்களினால், வீடு கட்டி ஏமாற்றமடைந்த சுமார் ஆறு பேருடன் கதைத்திருக்கின்றேன். சொன்னது ஏதோ முடிஞ்சது எதுவோ, காசு காணாது இன்னும் தாங்கோ, பொலிஸிங் பண்ணிய உதவாத பொருட்கள், பனை மர சிலாகைகள் என்ற கதையே இல்லை எல்லாம் லோக்கல் மரங்கள். வீம் பிழை, கட்டுமாணம் பிழை, தரம் குறைந்த அரிகற்கள், படிகளுக்கு சதுர வடிவில்லாமல், ஒரு வரிக்கம்பிகள் என்று தொடங்கி கடைசியில, முடிக்கிற பல வேலைகள் குறைகளில வைச்சிட்டு போயிடுவாங்கள்.

எனக்கு தெரிந்த ஒருவர், 16 மில்லியனில் ஒப்பந்தம் செய்து வீடு கட்டத் தொடங்கினார், 7 படிமுறைகளில் காசு என்று சொல்லி, காசு தவணைக்கு தவணை வாங்கப்பட்டது ஒழிய வீட்டின் கட்டுமானம் நிறைவு பெறுவதாக இல்லை. ஒப்பந்த காலம் 8 மாதங்களும் முடிவுற்ற போதிலும், வீட்டின் 50 வீத வேலைகள் கூட பூர்த்தியாகவில்லை. முரண்பாடுகள் ஏற்பட, கொஞ்சம் கொஞ்சமாக தள்ளிக் கொண்டு சென்றுவிட்டு, தற்போது பொருட்களின் விலைகள் அதிகம் கூடுதலாக 2 மில்லியன் வேண்டும் என்று, கூறி அதிலும் 1 மில்லியன் பெற்றும் செய்து முடிப்பதாக இல்லை. 1 வருடம் கழிந்தும் வீடு நிறைவு பெறாததையடுத்து, ஒப்பந்தக்காரருடன் வினாவியபோது, இன்னும் கூடுதலாக 3 மில்லியன் வேண்டும் என்று கூறப்பட்டது. ஆத்திரமடைந்த வீட்டுக்காரர், ஒப்பந்தக்காரரின் ஒப்பந்தத்தை அத்துடன் நிறுத்தி, மிகுதி வேலையை தனது சுய கண்காணிப்பில், நாளாந்த கூலி அடிப்படையில் செய்து முடித்து, வீட்டுப் பணியினை முடித்தார்.

கஸ்ரப்பட்டு உழைக்கிற ஒருவனும், ஒரு 4.5 மில்லியனில் இருந்து 10 மில்லியன் வரைக்குள் விட கட்டனும் என்று எதிர்பார்ப்பன். கொஞ்சம் வசதிக்காரன். 20, 30 மில்லியன் வரையில் போவனர். வெளிநாட்டுக்காரர் 100 வரை போறதா ஒரு கேள்வி.

ஆனால், ஒப்பந்தக்காரர்கள், அனைவரிடமும் கோடிக்கணக்கில் எதிர்பார்க்கின்றனர். அப்படி வீடு கட்டனும் என்றால், கஞ்சா விற்கனும் இல்ல கார்ட் அடிக்கனும் இல்ல யாரையும் சுத்துமாத்தனும்……

ஒரு சில ஒப்பந்தக்காரர்கள் சமூக பொறுப்புடன் நடந்து, செய்பவர்களாகவும், இருக்கின்றனர். அவர்களை பாராட்டியாகவேண்டும்.

Latest Posts

மாணவர்கள் மத்தியில் கொரோனா அதிகரிப்பு! மாணவர் எண்ணிக்கையை வரையறுக்க கோரிக்கை!

பிரபல நாடொன்றில் பாரிய குண்டுவெடிப்பு !

பிக்பாஸ் ஓடிடியில் பங்கேற்கும் 7 போட்டியாளர்கள் இவர்கள் தான்

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து நாட்டுக்கு முக்கியமா? ஆவேசமான பிரபல நடிகை!

திருவிழாவில் தீ மிதித்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த பெரும் துயரம்!

விஞ்ஞான ஆய்வு கூடத்துக்குள் வைத்து ஒரே நேரத்தில் இரு மாணவிகளுடன் பாலியல் ஆராய்ச்சி செய்த யாழ்ப்பாண ஆசிரிய மன்மதன் இவர்தான்!!(Photos)

பரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவருக்கு வீடு!

அதிபர் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

யாழ்ப்பாணத்தில் ஆட்டுக்குக் குழை வெட்டிய சிறுமி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழப்பு!! (Photos)

இலங்கை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் – மண்ணில் புதைந்த ரகசியம்

யாழில் வயிற்றில் துணி வைத்து தைக்கப்பட்டதால் பெண் உயிரிழந்த விவகாரம்; நீதிமன்றம் விடுத்த உத்தரவு

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து சேமித்து வையுங்கள்!! இலங்கையின் நெருக்கடி குறித்து எச்சரிக்கை!!

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி!

ஆறு மணிநேர மின்வெட்டு!! வெளிவந்த அதிர்ச்சிகர தகவல்!!

மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் பெண்; கணவர் கைது

யாழில் பிரபல தனியார் வைத்தியசாலை சத்திரசிகிச்சையில் ஏற்பட்ட துயர சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் பதின்ம வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து பெறவில்லை”…மனம் திறந்த கஸ்தூரிராஜா

இன்றைய இராசிபலன் ( 20.01.2022)

அடுத்த மாதம் ஊர் திரும்பவிருந்த நிலையில் மட்டக்களப்பு நபருக்கு நேர்ந்த பெரும் சோகம்!

யாழில் வெளிநாட்டில் இருந்துவந்த மகள் பூட்டிய வீட்டில் சடலமாக…தாய் வைத்தியசாலையில்

முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகள் மீது சேட்டைவிட்ட ஆசிரியர் மீது நீதிமன்றம் விடுவித்துள்ள உத்தரவு!

இன்று பிற்பகல் முதல் மின் துண்டிப்பு!! விசேட அறிவிப்பு வெளியானது!!

சமந்தாதான் எனக்கு ஏற்ற ஜோடி – நாக சைதன்யா

யாழ்.போதனா வைத்தியசாலையில் நடக்கும் அலங்கோலம்!! அதிகாரிகள் கவனிப்பார்களா??

யாழில் பிரான்ஸ் மாப்பிளையின் காலைப் பிறாண்டிய பூனையின் வாலைப் பிடித்து தலைகீழாக அடித்த மாப்பிளை!! கலியாணம் குழம்பியது!!

யாழ்ப்பாணத்தில் ‘அலிகள்‘ நடாத்திய பொங்கல் விழா!! (புகைப்படங்கள்)

வவுனியா வைத்தியசாலைக்குள் இப்படி ஒரு சம்பவம்; பலரும் அதிருப்தி

இலங்கை மக்களுக்கான பேரிடியான செய்தி! ஒவ்வொருவர் மீதும் இவ்வளவு கடனா?

இரு மின் ஆலைகளுக்குப் பூட்டு; இருளில் மூழ்குமா இலங்கை?

போர்ட் சிட்டிக்கு விசா தேவையில்லை! நேற்றைய தினம் 50,000 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள்

தனுஷ்.. ஐஸ்வர்யா.. 18 வருட திருமண பந்தம் முறிவு! பரபரப்பை ஏற்படுத்திய திடீர் பிரிவு! என்ன காரணம்?

திடீரென மயங்கி சரிந்த பாடசாலை மாணவர்கள்!

திருமண வைபவத்தில் கொடூர சம்பவம்: மாமனாரை கொலை செய்த மருமகன்

கனடாவில் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் 1400 கோடி ரூபா பரிசு வென்ற யாழ் தமிழர்..! வெளியான தகவல்!

இம்முறை சீனாவில் இருந்து அரிசி

யாழ் வேலணை வைத்தியசாலை டொக்டர் கோபிகிருஸ்ணனின் கிருஸ்ணலீலை!! குடும்பப் பெண் பரிதாபகரமாகப் பலி!!

யாழ்.வேலணை உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் உயிரிழந்த பெண்! முழுமையான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க ஆளுநர் பணிப்பு..

பேருந்துகளில் பயணிக்கும் மாணவிகளின் தலைமுடியை வெட்டி கைப்பையில் சேகரித்த நுாதன ஆசாமி கைது..!




Related Posts