யாழ்.நகரில் விபத்துக்களை குறைக்க பொலிஸார் விசேட நடவடிக்கை!

வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் ஒளித் தெறிப்பு ஸ்டிக்கர்களை பின்புற எச்சரிக்கை விளக்கற்ற வாகனங்களுக்கு ஒட்டும் நடவடிக்கை யாழ்.பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. 

“உங்களின் பாதுகாப்பிற்காக நாம்” எனும் கருப்பொருளில் துவிச்சக்கர வண்டிகளில் இந்த ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பல இடங்களில் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காங்கேசன்துறை வீதியில் உள்ள யாழ்ப்பாணம் பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக வைத்து வீதியினால் சென்ற துவிச்சக்கர வண்டிகள் பொலிஸாரினால் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது. 

யாழ்.மாவட்ட பொலீஸ் நிலையங்களுக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலீஸ் அத்தியச்சகரின் ஆலோசனைக்கமைவாக, மாவட்ட போக்குவரத்து பிரிவு மற்றும் யாழ்ப்பாண பொலீஸ் போக்குவரத்து பிரிவும்

இணைந்து இந்த நடவடிக்கையினை இன்று முன்னெடுத்திருந்தனர்.இன்று இடம்பெற்ற ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கையில் யாழ்ப்பாண போக்குவரத்து பிரிவு பொலீஸ் பரிசோதகர் மஞ்சுல டி சில்வா, 

உப பொலீஸ் பரிசோதகர் பிரியந்த அபேயரத்ன, யாழ்ப்பாண பொலீஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி விதான பத்திரன, உள்ளிட்ட சில பொலீஸார் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

மஹிந்தவிற்கு சத்திர சிகிச்சை நடந்தது உண்மையே!

இலஞ்சம் வாங்கிய போது பாடசாலை அதிபர் வசமாக சிக்கினார்!

யாழில் ஆவா குழுக் காவாலிகளின் இராணுவப்பிரிவின் ஆயுதக் களஞ்சியம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது!!

கிளிநொச்சியில் கண் மாபியாக்களின் கொடூரம்!! 71 மாணவர்களின் கண்களுக்கு நடந்தது என்ன? பெண் வைத்திய அதிகாரி பிரியந்தினி மிரட்டப்பட்டது ஏன்?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற NCG பஸ் பாரிய விபத்துக்குள்ளானது!!

கிளிநொச்சியில் பெண் வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கத்தை அலங்கோலப்படுத்தியவர் யார்??

யாழில் நண்பர்களுடன் தேனீர் குடித்துக்கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட துயரம்!!

சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்து!! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்!! (Photos)

பிரதமர் மகிந்தவின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி மகிந்தவின் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த கில்லாடிக்கு நடந்த கதி!!

Related Posts