ரிஷாட் வீட்டில் சிறுமியை தீயில் தள்ளிய கொடுங்கரங்கள்!

 அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் கொழும்பிலுள்ள வீட்டில் பணிபுரிந்த நுவரெலியா, டயகமவைச் சேர்ந்த சிறுமி ஹிஸாலினி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அண்மையில் உயிரிழந்தார்.

ஆரம்பத்தில் தற்கொலை முயற்சி என்று கூறப்பட்டாலும், முக்கிய பிரமுகர் ஒருவர் வீட்டில் பணிபுரியும் சிறுமியின் கைக்கு, மண்ணெண்ணெயோ அல்லது ஏதோவோர் எரிபொருளோ எப்படிக் கிடைத்தது என்று ஆரம்பித்து, பல சந்தேகங்கள் தொடர்ச்சியாக எழுந்தன. அந்தச் சந்தேகங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக, மரண விசாரணை அறிக்கையும் வெளியாகி இருக்கின்றது.

சிறுமி, பாலியல் ரீதியான வன்முறைகளை எதிர்கொண்டிருந்தமை, அதில் வெளிப்பட்டிருக்கின்றது. இலங்கையில், 16 வயது வரையில் அனைவரும் கட்டாயக் கல்வியைப் பெற வேண்டும் என்கிறது சட்டம். ஆனால், 14 வயது நிரம்பியவர்கள் வேலைக்குச் செல்லலாம் அல்லது அமர்த்தப்படலாம் என்றும் இன்னொரு முரணான விடயத்தை, சட்டம் தன்னுள்ளே வைத்திருக்கின்றது. 

இந்த முரணைச் சரிசெய்யும் நோக்கில், வேலைக்கு செல்லும் வயதை, 16ஆக அதிகரிக்கும் சட்டமூலத்துக்கான அமைச்சரவைப் பத்திரத்தை, 2020ஆம் ஆண்டு அரசாங்கம் ஏற்றிருந்தது. ஆனால், அந்தச் சட்டமூலம் கொவிட்-19 பெருந்தோற்றுக் காலத்தில் நிறைவேற்றப்படாமல் காணாமற்போனது. பாராளுமன்றத்தில் தங்களுக்குத் தேவையான அனைத்துச் சட்டத்திருத்தங்களையும் நிறைவேற்றிய அரசாங்கம், இந்தவிடயத்தில் தவறியது. 

அதுதான், 15 வயது நிரம்பிய ஹிஸாலினியை வீட்டுப் பணிப்பெண்ணாகச் சேர்த்துக் கொள்வதற்கான சட்டத் தடையை இல்லாமல் செய்திருக்கின்றது. இவ்வாறான கவனயீனங்களும், பொறுப்பற்ற தனங்களாலும் கொழும்பு உள்ளிட்ட நகரப் பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் ஆயிரக்கணக்கான சிறுமிகள் பணிப்பெண்களாக அனுப்பப்படுகிறார்கள். அங்கு அவர்கள் தங்களுடைய வயதுக்கு மீறிய பணிச்சுமையையும் உடல் ரீதியான வன்முறைகளையும் எதிர்கொள்கிறார்கள். சவுதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்று, அங்கு கொடூரமாக மரண தண்டனையை எதிர்கொண்ட ரிஷானா நபீக்குக்கு அப்போது 17 வயது. ஆனால், உள்நாட்டிலேயே, அதுவும் மக்கள் பிரதிநிதி ஒருவர் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்து மரணித்திருக்கின்ற ஹிஸாலினியின் வயது 16. இங்கு இருவரும் சிறுமிகளே. வயதுக்குப் பொருந்தாக சூழலில் பணிக்கு அமர்த்தப்பட்டு பலிவாங்கப்பட்டு இருக்கின்றார்கள். ரிஷானா நபீக் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அதுவேகூட மனித உரிமைகளின் தடத்தில் அணுகப்படாத நிகழ்வு. கிட்டத்தட்ட அதுவும் ஒரு படுகொலையே. ஆனால், ஹிஸாலினியின் மரணத்தில் அயோக்கியத்தனமான கரங்கள் நீண்டிருப்பதற்கான காட்சிகள் வெளிப்படுகின்றன.

“…எனது மகள் நெருப்புக்கு பயப்பிடுபவர். அவர் தீமூட்டிக் கொள்ளவில்லை; தீமூட்டியுள்ளனர். ‘இங்கு வேலை செய்ய முடியாது அழைத்துச் செல்லுங்கள்; இங்கு வேலை செய்பவர் என்னைத் தும்புத்தடியால் தாக்குகிறார்’ என மகள் இறுதியாகக் கூறினார். அவர் சிறிய பிள்ளை; தாக்க வேண்டாமெனக் கூறுங்கள் என்று மெடத்திடம் (ரிஷாட்டின் மனைவியிடம்) கூறினேன். மகளே ஏதேனும் செய்திருப்பார் எனக் கூறுவதாக இருந்தால், அந்தவீட்டில் ஏதோ நடந்துள்ளது…” என்று ஹிஸாலினியின் பெற்றோர் கூறியிருக்கின்றனர்.

ரிஷாட் பதியுதீனின் வீட்டில், சிறுமி ஹிஸாலினி தாக்கப்பட்டமை தொடர்பில், ரிஷாட்டின் மனைவியிடம் முறையிட்டுள்ளதாக சிறுமியின் பெற்றோர் கூறுகின்றனர். அப்படியானால், சிறுமி மீதான வன்முறை தொடர்பில், ஏற்கெனவே அறிந்திருந்த ரிஷாட்டின் மனைவி, அது குறித்து எந்த நடவடிக்கையையாவது எடுத்தாரா? எடுத்திருந்தால், அந்தச் சிறுமியின் மரணம் நிகழாமல் தடுக்கப்பட்டிருக்கும் இல்லையா? என்ற கேள்விகள் நிராகரிக்க முடியாதவை. அரசியல் ரீதியான நெருக்கடிகளை, ரிஷாட் பதியுதீன் தற்போது எதிர்கொண்டிருக்கின்றார். 

சிறுபான்மை இனமொன்றின் தலைவராக அவர் மீதான ஜனநாயக மீறல்களை, சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்ப்பதும், போராடுவதும் அனைவரதும் கடமை. அதேபோல, அவரது வீட்டுக்குள் சிறுமி ஒருவருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் தொடர்பிலும், மரணத்துக்கான உண்மையான காரணங்களைக் கண்டறிவதும் அவசியமானது.

அதனை, எந்தக் காரணம் கொண்டும் தவிர்த்துவிட முடியாது. அப்படியான நிகழ்வுகளுக்கு அல்லது பொய் பித்தலாட்டங்களுக்கு யாராவது துணை போகிறார்கள் என்றால், அவர்கள் சிறுமியின் மரணத்தின் பங்காளிகளாவார்கள். இன்றைக்கு நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியோ, அதன் பங்காளிகளோ சிறுமி ஹிஸாலினியின் மரணம் தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான முஜிபூர் ரஹ்மான், சிறுமியின் மரணத்தை ரிஷாட்டுக்கு எதிரான சதி வலை எனும் நோக்கில் பேசுகிறார். இந்த மரணத்தை வைத்து, அரசாங்கமோ, வேறு எந்தத் தரப்போ தனிப்பட்ட நலன்களை அடைய முயற்சிக்கலாம். அதை நிராகரிக்க முடியாது. ஆனால், அதற்காக சிறுமியின் மரணத்தை அப்படியே விட்டுவிட்டு நகர முடியாது. அது, தொடர்ச்சியாக இவ்வாறான மரணங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையாகும். பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான வீட்டு வன்முறையை, வாழ்வின் ஓர் அம்சமாகவே இலங்கை போன்ற நாடுகள் கொண்டு சுமக்கின்றன. 

எவ்வளவு சட்டங்களை இயற்றினாலும், வீட்டு வன்முறைகளை, பாரம்பரிய நெறியாகக் கருதி முன்னெடுக்கின்றவர்கள் இன்னமும் ஏராளம் பேர் உண்டு. தன்னுடைய மனைவி, பிள்ளைகள் மீதே இவ்வாறான வன்முறைகளைப் புரிபவர்களை தண்டிக்காத சமூக மனநிலை, வீட்டுப் பணிப்பெண்கள் மீதான வன்முறைகளை எவ்வாறு கண்டுகொள்ளும் என்பது மேலான கேள்வியாகும்? பெரிய வசதி வாய்ப்புகளுக்காக வீட்டுப் பணிப்பெண்களாக யாரும் செல்வதில்லை. 

வறுமையும் பசி நெருக்கடியும் இவ்வாறான பணிகளை நோக்கி, பெண்களைத் தள்ளுகின்றன. வேலைக்குச் செல்லும் இடங்களில் ஒழுங்கான தங்குமிடம், உணவு, ஊதியம் இன்றி, சமயலறை, குளியலறை ஓரங்களில் படுத்துறங்கி உழைக்கும் ஆயிரக்கணக்கான சிறுமிகளும் பெண்களும், ஹிஸாலினி எதிர்கொண்டது மாதிரியான வன்முறைகளை நாளாந்தம் எதிர்கொள்கிறார்கள். இலங்கையில் வீட்டுப் பணிப்பெண்களின் மரணங்கள் அடிக்கடி பதிவாகின்றன. மாடியில் இருந்து குதித்து இறந்தவர்களாக, திருட்டை மறைப்பதற்காக தற்கொலை செய்தவர்களாக என்று அந்த உயிரிழப்புகள் சட்டத்தின் முன்னால் கட்டப்பட்டு அல்லது, பெரும் பணத்தின் முன்னால் ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டுமிருக்கின்றன.

சிறுமி ஹிஸாலினியின் மரணத்தையும் அவ்வாறான ஒழுங்கொன்றின் ஊடாகக் கடந்துவிட முடியும் என்று ரிஷாட் பதியுதீனின் தரப்பினர் நினைக்கலாம். அவ்வாறான முயற்சியொன்று முன்னெடுக்கப்பட்டு இருப்பதாகப் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டுகின்றார். 

அதனாலேயே, சிறுமியின் மரணத்தை விசாரிக்கும் பொலிஸ் அதிகாரியின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் எழுப்பியிருக்கின்றார். அதிக தருணங்களில் வலியவர்களின் நீதி, அதிகாரத்தாலும் பணத்தாலும் வரையறுக்கப்படுகின்றன. அது, எளியோரை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. 

இன்றைக்கு, சிறுமி ஹிஸாலினியின் மரணத்தை முறையாக விசாரித்து, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதைத் தடுக்க முயற்சிக்கும் அனைத்துத் தரப்பினரும் வலியோருக்கான ஏவல் அடிமைகளே ஆவார்




Latest Posts

கொழும்பில் 3 மாடி சொகுசு வீட்டுக்குள் கஞ்சா பயிரிட்ட கில்லாடிகள்!!

யாழ் வடமராட்சியில் பகுதியில் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்!!

யாழில் சொந்தக்காரர்களுக்கிடையில் நடந்த மோதல்!! கோடரியால் தாக்கப்பட்டு இருவர் படுகாயம்!!

பிரபல நாடொன்றில் குழந்தைகளுக்கு கட்டாயமாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி!

கோட்டாபய அமைதியானவர் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

தீயிட்டு எரிக்கும் விவசாயிகள் – ராஜபக்சவினரின் குரக்கன் சால்வையும் பசளை நாடகமும்! இழந்து விடுவாரா கோட்டாபய?

மைத்திரி அதிரடி முடிவு: தடுமாறும் கோட்டாபய அரசு?

பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனை காலி செய்ய சதி! வீட்டில் இரவு நடந்த சம்பவம்!

தலைநகரில் பலத்த துப்பாக்கி சூடு! அதிரும் இலங்கை! ஒருவர் பலி!

பிரான்ஸில் விடிய விடிய துப்பாக்கி சூடு! எதுவுமே தெரியாமல் காலையில் எழும்பிய மக்கள்!

லண்டன் வரும் கோட்டாவுக்கு இறுதி பரிசு! புலம்பெயர் தமிழர்கள் ஏற்பாடு!

‘டேர்மினேட்டர்’ கோட்டாபய உங்கள் நகரத்திற்கு வருகிறார்!! ஸ்கொட்லன்ட் பத்திரிகையில் விளம்பரம்!!

யாழில் மழை வேண்டி சுமந்திரனின் கொடும்பாவி எரிப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி!

கருப்பு பட்டியலில் நாடு! காரணமான மக்கள்!

பிரான்ஸ் உணவகத்தில் நடந்த கூத்து! அதிரடியாக இறங்கிய பொலிஸார்! ஐவர் கைது!

“உன் கூட நூறு வருசம் வாழனும்டா” பாணியில் இலங்கையை உருட்டும் சீனா!

இலங்கையில் சனிக்கிழமைகளிலும் பாடசாலைகளை நடத்த திட்டம்!!

பாடசாலை அதிபரின் செயலால் கதிகலங்கிய அரசியல்வாதிகள்

17 வயசுச் சிறுமியை கலியாணம் கட்டி கர்ப்பமாக்கியய 20 வயது பெடியன்!! என்ன வேலை என்று கேட்டால் ‘லண்டன் போக றை பண்ணுறாராம்‘!! நடந்தது என்ன?

வெகுவிரைவில் மாற்றமடையவுள்ள இலங்கையின் பெயர் – தேரர் தகவல்

சுவிஸ் மக்களின் ஆயுட்காலம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கொழும்பில் அதிகாலையில் நடந்த துப்பாக்கி சூடு!! ஒருவர் மரணம் மற்றொருவர் காயம்!!

முல்லைத்தீவில் சோக சம்பவம்: இரு பெண்களுக்கு நேர்ந்த பரிதாபம்

யாழில் கொடூர சம்பவம்: கணவனால் மனைவிக்கு நேர்ந்த விபரீதம்

கனடாவில் 29 வயது இளம் தமிழ்க் குடும்பஸ்தர் அகாலமரணம்!! (Photos)

சீனாவால் பேராபத்து! ஒரு கையெழுத்தில் இலங்கையின் எதிர்காலம்

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திகதி அறிவிக்கப்பட்டது!

ஜனாதிபதி கோட்டபாயவின் அதிரடி நடவடிக்கை – கலக்கத்தில் உயர்மட்ட அதிகாரிகள்

யாழில் மாணவர் வரவு குறைவு!

சிங்கள இளைஞனை காதல் திருமணம் செய்த தமிழ் யுவதி; பெற்றோரின் அதிரடி நடவடிக்கை!

ஒரு பெண்ணும் பெண்ணும் காதலிக்க அது போதும்! மற்றது எதுவும் தேவையில்லையாம்! மனம் திறக்கும் இளசுகள்! அப்படியானால் மற்ற விஷயங்கள்?

கையடக்க தொலைபேசியில் பதிவு செய்து கொண்டு உயிரிழந்த 16 வயது மாணவி!!

கோட்டாபயவின் தலையீட்டால் அமைச்சர் பதவியில் இருந்து விலகும் கெஹெலிய?

தாயை கொன்று சமைத்து உண்ட மகன்! மீதியை ப்ரிட்ஜில் வைத்த அவலம்!

ஒருசில புலம்பெயர் தமிழர்களால் கேவலப்படுத்தப்படும் தேசிய சின்னங்கள்

காதலர்களே நீங்கள் இப்படி வழிபட்டால் உங்க காதல் நிச்சயம் நிறைவேறும்..!

மனைவியை தொழிலதிபருக்கு விற்று ஆப்பிள் ஐ போன் வாங்கிய கணவன்!!

இலங்கை வருகிறார் அதானி! இனி இயற்கை வளங்களுக்கு சனி!

இருளில் மூழ்கப்போகும் சிறிலங்கா – பகிரங்க எச்சரிக்கை

யாழில் இளம் குடும்ப பெண்மீது கத்திக்குத்து; கணவன் தலைமறைவு!

யாழில் களமிறக்கப்பட்டுள்ள பொலிஸார்; முன்னெடுத்துள்ள விசேட நடவடிக்கை!

அரசு பதவியை இராஜினாமா செய்ய தயாராகும் சுகாதார அமைச்சர் – அரசியலில் பரபரப்பு.

லண்டனில் தடுப்பூசி போட்ட பிரபலத்துக்கு ரத்தகட்டி! படுத்த படுக்கையான சோகம்!

யாழ்ப்பாணத்திலிருந்து மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகள் இன்று முதல் ஆரம்பம்

இயலாமையின் உச்சத்தில் சிறிலங்கா அரசாங்கம் – வெளிப்படையாகக் கூறிய செல்வம் அடைக்கலநாதன்

சீன தடுப்பூசி ரொம்ப நல்லது! உசுப்பேற்றும் தமிழரசு கட்சி கண்டுபிடிப்பு!

கோட்டாபயவின் நோக்கம் வெளிவந்தது

“என்ன ஆட்டம் போட்டாலும் எதுவும் முடியாது“ பகிரங்க சவால்

நவம்பர் 1 முதல் குறிப்பிட்ட போன்களில் செயலிழக்க உள்ள வாட்ஸ் அப்…காரணம் என்ன?

இலங்கையில் பேருந்து கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு?

பேஸ்புக், வட்சப் போன்ற சமூகவலைத்தள தொடர்புகள் இல்லாத மணமகளைத் தேடும் சுவிஸ்சில் வசிக்கும் யாழ்ப்பாண மாப்பிளை

நாட்டு மக்களின் எதிர்பார்ப்பிற்கு என்னால் பயனில்லை! கோட்டாபயவின் அறிவிப்பு

அரிசி மற்றும் பருப்பு விலைகளை பார்த்துக் கொள்வதற்காகவா என்னை நியமித்தீர்கள்..? ஜனாதிபதி கேள்வி..

ஒரே சூலில் 6 குழந்தைகள்: ’31 வாரங்கள் மனைவி சுமந்த சுமையை இனி நான் சுமப்பேன்’; கணவன் நெகிழ்ச்சி!

முகக்கவசம் இல்லை; 5000 ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்

முல்லைத்தீவு மல்லாவிப் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் குடும்ப்ப பெண் வவுனியாவில் கடத்தப்பட்டது ஏன்?? கணவர் பொலிசாரிடம் முறையிட்டார்!!

அரிசி பருப்பு விலைகளை கவனிக்க தான் என்னை தெரிவு செய்தீர்கள் என்றால் என்னால் பயனில்லை! கோட்டாபய அறிவிப்பு

திருமண செலவு பணத்தை தானம் கொடுத்த சிங்கள தம்பதி! யாழில் நிலநடுக்கம்!

16 நாட்களில் கசந்த முகநூல் காதல்; யுவதியின் விபரீத முடிவு; தந்தை வெளியிட்ட சந்தேகம்

பெற்ற குழந்தையை புதைத்த தாய்! உயிர்த்து எழுந்து வந்த அதிசயம்!

இலங்கையர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய திருமண தம்பதி

ராஜபக்ச அரசாங்கம் சலூன் கடையைப் போன்றது

சிறுமியை துஸ்பிரயோகம் செய்த யாழ் JK Dreams Studio முதலாளி கஜானன் அங்கஜனின் அடியாளா?? அங்கஜன் என்ன கூறுகின்றார்?? இதோ விபரம்!!

பேஸ்புக் காதலனுடன் கலியாணம் கட்டாது ஒன்றாக இருந்த திருகோணமலை யுவதிக்கு நடந்த கதி!!

குழந்தையுடன் நடு வீதியில் இளம் பெண் உதவி செய்வீர்களா?? அதிகம் பகிர்ந்து உதவி செய்யுங்கள்!!!

கரும் பூஞ்சை இலங்கையில் முதலாவது மரணம்

பூச்செண்டுடன் பெண்ணின் சடலம்! தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம்!

6 மாதங்களாக வயிற்றில் இருந்த செல்போன்! பின்னர் நடந்த சம்பவம்

ஆரம்பப் பிரிவு பாடசாலைகளை ஒக்டோபர் 25 முதல் திறக்க முடிவு!

கரும் பூஞ்சை நோயினால் இலங்கையில் பதிவான முதலாவது மரணம்

பிரபாகரனின் மகன் என்னிடம் கல்வி கற்றவர்! பாராளுமன்றத்தை கதற வைத்த சிறிதரன்!

கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள வரும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

பேஸ்புக் காதலால் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி

கடும் நெருக்கடியில் கோட்டாபய அரசாங்கம்; பிற நாடுகளிடம் கையேந்தும் மோசமான நிலை; காரணம் என்ன ?

பிரான்ஸ் செல்ல முற்பட்ட யாழ் இளைஞனிற்கு காத்திருந்த பெரும் சோகம்! அதிர்ச்சியில் குடும்பம்

நாட்டில் நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!!

கோட்டாவின் மண்டையை களுவிய விற்பன்னர்கள் தலை தெறிக்க ஓட்டம்

நீர்கொழும்பில் காணாமல்போன 2 வயது சிறுமி சிலாபத்தில் சடலமாக மீட்பு!!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் உறுப்பினர் வித்தியாசமான முறையில் போராட்டம்!

சகோதரர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலால் தம்பியை குத்திக்கொன்ற அண்ணண்.

வெளிநாட்டு காதலியால் கொழும்பில் இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

தடுப்பூசி செலுத்தாதவர்கள் எங்கும் செல்ல முடியாது; வருகிறது தடை!

கலியாணம் மற்றும் நிகழ்வுகளுக்கு தடை? யாழ்.சாவகச்சோி வைத்திய அதிகாரி பணிமனை விடுத்துள்ள எச்சரிக்கை!

இன்றைய இராசிபலன்கள் (27.10.2021)

யாழ் வடமராட்சியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து; ஒருவர் மரணம்!

“ஒரு கேம்காக பாசத்தை இழப்பீர்களா”…பிக் பாஸ் வீட்டில் வெடிக்கும் புதிய பிரச்சினை

பாடசாலைக்கு மாணவர்களை அழைத்த அதிபருக்கு எச்சரிக்கை!







Related Posts

%d bloggers like this: