ரிஷாத் வீட்டில் 11 மலையக யுவதிகள் துன்புறுத்தப்பட்டனர்… சிலர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகினர்: தோண்டத் தோண்ட கிளம்பும் பூதம்!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்களாக மலையக பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட 11 யுவதிகள் கடுமையான வன்முறைக்குள்ளாகியதாகவும், அவர்களில் சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக அழைத்து வரப்பட்ட யுவதியொருவர், பம்பலப்பிட்டி பகுதியில் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்தும் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ரிஷாத் பதியுதீனின் உத்தியோகபூர்வ வீட்டில் வைத்து டயகம பகுதியை சேர்ந்த 22 வயதான யுவதியொருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது பற்றிய முழுமையான தகவல்கள் கிடைத்ததையடுத்து, ரிஷாத் பதியுதீனின் மனைவியின் சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன்னை துஷ்பிரயோகம் செய்த அறையையும் யுவதி அடையாளம் காட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட ரிஷாத் பதியுதீனின் மனைவி, மனைவியின் தந்தை, மனைவியின் சகோதரன், தரகர் ஆகியோர் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள்.

சிறுமிகளை பணிப்பெண்களாக அமர்த்தியமை, துன்புறுத்தியமை, பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கியமை ஆகிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்க, மேற்கு மாகாண மகளிர் குழந்தைகள் பிரிவை சேர்ந்த வருணி போகவத்த தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்களாக செயற்பட்ட மலையகத்தை சேர்ந்த 11 யுவதிகளிடமும் வாக்குமூலம் பெறுவதற்காக இந்த குழு அந்த பகுதிகளிற்கு சென்றுள்ளது.

தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள தரகர் பொன்னையா என்பவரே, மலையகத்தை இத்தனை யுவதிகளையும் பணிப்பெண்களாக அழைத்து வந்துள்ளார்.

பணிப்பெண்களை வழங்கி, தரகர் பெருமளவு பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த சிறுமி இஷாலினி அண்மையில் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார். அவர் நீண்டகாலமாக துஷ்பிரயோகத்திற்குள்ளாகியது தெரிய வந்துள்ளது.

சிறுமியை 8 மாதங்களாக வீட்டிற்கு செல்ல அனுமதிக்கவில்லை என்றும், ஒரு மாதத்திற்கும் மேலாக தனது பெற்றோருக்கு தொலைபேசியில் பேச அனுமதிக்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

சிறுமி முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டின் பின்னால் ஒரு தனி சிறிய அறையில் தங்க வைக்கப்பட்டார். அந்த அறையில் மின்சாரம் இல்லை. இருவர் படுக்கக்கூடிய இரும்பு கட்டில் இடப்பட்டிருந்தது.

இரவு 10.30 மணியளவில் சிறுமியை அறையில் வைத்து கதவு மூடப்பட்டு மறுநாள் காலை 5.30 மணிக்கு அறை திறக்கப்பட்டது. இதற்கிடையில், அவர் கழிப்பறைக்கு செல்ல கூட அனுமதிக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

மேற்கு மாகாணத்தின் பொறுப்பான மூத்த டி.ஐ.ஜி தேசபந்து தென்னக்கோனின் மேற்பார்வையில் ஐந்து சிறப்பு பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன.
Latest Posts

சீனாவால் பேராபத்து! ஒரு கையெழுத்தில் இலங்கையின் எதிர்காலம்

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திகதி அறிவிக்கப்பட்டது!

ஜனாதிபதி கோட்டபாயவின் அதிரடி நடவடிக்கை – கலக்கத்தில் உயர்மட்ட அதிகாரிகள்

யாழில் மாணவர் வரவு குறைவு!

சிங்கள இளைஞனை காதல் திருமணம் செய்த தமிழ் யுவதி; பெற்றோரின் அதிரடி நடவடிக்கை!

ஒரு பெண்ணும் பெண்ணும் காதலிக்க அது போதும்! மற்றது எதுவும் தேவையில்லையாம்! மனம் திறக்கும் இளசுகள்! அப்படியானால் மற்ற விஷயங்கள்?

கையடக்க தொலைபேசியில் பதிவு செய்து கொண்டு உயிரிழந்த 16 வயது மாணவி!!

கோட்டாபயவின் தலையீட்டால் அமைச்சர் பதவியில் இருந்து விலகும் கெஹெலிய?

தாயை கொன்று சமைத்து உண்ட மகன்! மீதியை ப்ரிட்ஜில் வைத்த அவலம்!

ஒருசில புலம்பெயர் தமிழர்களால் கேவலப்படுத்தப்படும் தேசிய சின்னங்கள்

காதலர்களே நீங்கள் இப்படி வழிபட்டால் உங்க காதல் நிச்சயம் நிறைவேறும்..!

மனைவியை தொழிலதிபருக்கு விற்று ஆப்பிள் ஐ போன் வாங்கிய கணவன்!!

இலங்கை வருகிறார் அதானி! இனி இயற்கை வளங்களுக்கு சனி!

இருளில் மூழ்கப்போகும் சிறிலங்கா – பகிரங்க எச்சரிக்கை

யாழில் இளம் குடும்ப பெண்மீது கத்திக்குத்து; கணவன் தலைமறைவு!

யாழில் களமிறக்கப்பட்டுள்ள பொலிஸார்; முன்னெடுத்துள்ள விசேட நடவடிக்கை!

அரசு பதவியை இராஜினாமா செய்ய தயாராகும் சுகாதார அமைச்சர் – அரசியலில் பரபரப்பு.

லண்டனில் தடுப்பூசி போட்ட பிரபலத்துக்கு ரத்தகட்டி! படுத்த படுக்கையான சோகம்!

யாழ்ப்பாணத்திலிருந்து மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகள் இன்று முதல் ஆரம்பம்

இயலாமையின் உச்சத்தில் சிறிலங்கா அரசாங்கம் – வெளிப்படையாகக் கூறிய செல்வம் அடைக்கலநாதன்

சீன தடுப்பூசி ரொம்ப நல்லது! உசுப்பேற்றும் தமிழரசு கட்சி கண்டுபிடிப்பு!

கோட்டாபயவின் நோக்கம் வெளிவந்தது

“என்ன ஆட்டம் போட்டாலும் எதுவும் முடியாது“ பகிரங்க சவால்

நவம்பர் 1 முதல் குறிப்பிட்ட போன்களில் செயலிழக்க உள்ள வாட்ஸ் அப்…காரணம் என்ன?

இலங்கையில் பேருந்து கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு?

பேஸ்புக், வட்சப் போன்ற சமூகவலைத்தள தொடர்புகள் இல்லாத மணமகளைத் தேடும் சுவிஸ்சில் வசிக்கும் யாழ்ப்பாண மாப்பிளை

நாட்டு மக்களின் எதிர்பார்ப்பிற்கு என்னால் பயனில்லை! கோட்டாபயவின் அறிவிப்பு

அரிசி மற்றும் பருப்பு விலைகளை பார்த்துக் கொள்வதற்காகவா என்னை நியமித்தீர்கள்..? ஜனாதிபதி கேள்வி..

ஒரே சூலில் 6 குழந்தைகள்: ’31 வாரங்கள் மனைவி சுமந்த சுமையை இனி நான் சுமப்பேன்’; கணவன் நெகிழ்ச்சி!

முகக்கவசம் இல்லை; 5000 ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்

முல்லைத்தீவு மல்லாவிப் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் குடும்ப்ப பெண் வவுனியாவில் கடத்தப்பட்டது ஏன்?? கணவர் பொலிசாரிடம் முறையிட்டார்!!

அரிசி பருப்பு விலைகளை கவனிக்க தான் என்னை தெரிவு செய்தீர்கள் என்றால் என்னால் பயனில்லை! கோட்டாபய அறிவிப்பு

திருமண செலவு பணத்தை தானம் கொடுத்த சிங்கள தம்பதி! யாழில் நிலநடுக்கம்!

16 நாட்களில் கசந்த முகநூல் காதல்; யுவதியின் விபரீத முடிவு; தந்தை வெளியிட்ட சந்தேகம்

பெற்ற குழந்தையை புதைத்த தாய்! உயிர்த்து எழுந்து வந்த அதிசயம்!

இலங்கையர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய திருமண தம்பதி

ராஜபக்ச அரசாங்கம் சலூன் கடையைப் போன்றது

சிறுமியை துஸ்பிரயோகம் செய்த யாழ் JK Dreams Studio முதலாளி கஜானன் அங்கஜனின் அடியாளா?? அங்கஜன் என்ன கூறுகின்றார்?? இதோ விபரம்!!

பேஸ்புக் காதலனுடன் கலியாணம் கட்டாது ஒன்றாக இருந்த திருகோணமலை யுவதிக்கு நடந்த கதி!!

குழந்தையுடன் நடு வீதியில் இளம் பெண் உதவி செய்வீர்களா?? அதிகம் பகிர்ந்து உதவி செய்யுங்கள்!!!

கரும் பூஞ்சை இலங்கையில் முதலாவது மரணம்

பூச்செண்டுடன் பெண்ணின் சடலம்! தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம்!

6 மாதங்களாக வயிற்றில் இருந்த செல்போன்! பின்னர் நடந்த சம்பவம்

ஆரம்பப் பிரிவு பாடசாலைகளை ஒக்டோபர் 25 முதல் திறக்க முடிவு!

கரும் பூஞ்சை நோயினால் இலங்கையில் பதிவான முதலாவது மரணம்

பிரபாகரனின் மகன் என்னிடம் கல்வி கற்றவர்! பாராளுமன்றத்தை கதற வைத்த சிறிதரன்!

கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள வரும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

பேஸ்புக் காதலால் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி

கடும் நெருக்கடியில் கோட்டாபய அரசாங்கம்; பிற நாடுகளிடம் கையேந்தும் மோசமான நிலை; காரணம் என்ன ?

பிரான்ஸ் செல்ல முற்பட்ட யாழ் இளைஞனிற்கு காத்திருந்த பெரும் சோகம்! அதிர்ச்சியில் குடும்பம்

நாட்டில் நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!!

கோட்டாவின் மண்டையை களுவிய விற்பன்னர்கள் தலை தெறிக்க ஓட்டம்

நீர்கொழும்பில் காணாமல்போன 2 வயது சிறுமி சிலாபத்தில் சடலமாக மீட்பு!!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் உறுப்பினர் வித்தியாசமான முறையில் போராட்டம்!

சகோதரர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலால் தம்பியை குத்திக்கொன்ற அண்ணண்.

இலங்கை முற்றாக இருளில் மூழ்கும் – 27ஆம் திகதி வெளிவரவுள்ள அறிவித்தல்!!

இரத்தக்காயங்களுடன் இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு!!

18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 61 வயது நபர்!

வானில் இருந்து விழுந்த மர்ம பொருள்!! தென்னிலங்கையில் ஏற்பட்ட பரபரப்பு!!

ராஜபக்ச என்ற பரம்பரை பெயரை கேட்டாலே வீதியில் செல்பவர்கள் தாக்குவார்கள்: இறுதிக்கட்டத்தை நோக்கி கோட்டாபய அரசு

குட்டி உடையில் அந்த இடம் வரை பளிச்சென தெரியும்படி போஸ் குடுத்த டிடிRelated Posts

%d bloggers like this: