வடக்கில் ஊசிபோட்ட தாதியின் இடுப்பை தொட்டவர் சிறை சென்றார்

  முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் மருத்துவமனையில் ஊசிபோட்ட தாதி ஒருவரின் இடுப்பை தொட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசியினை பெற்றக்கொள்ளசென்ற நபர் ஒருவர் தாதி ஊசிபோடும் போது தாதியின் இடிப்பினை பிடித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டார். அதன் பின்னர், டிசெம்பர் 24 ஆம் திகதியன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். 

அதன் போது அவரை எதிர்வரும் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் சுகாதார பிரிவினரால் பாதுகாப்பான மற்றும் இலகுவான முறையில் மக்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

கொரோனா தடுப்பூசி ஏற்றும் போது எந்த தாக்கமோ, வருத்தமோ, இல்லாத நிலையில் மக்கள் தடுப்பூசியை பெற்று வருகின்றார்கள்.

இந்நிலையில் தடுப்பூசியினை பெறசென்றவர் தனக்கு கையில் வலி ஏற்பட்டபோது அதனை தாங்கமுடியாமல் தாதியின் இடுப்பை பிடித்துள்ளதாக கூறப்படுகின்றது.

Latest Posts

மஹிந்தவிற்கு சத்திர சிகிச்சை நடந்தது உண்மையே!

இலஞ்சம் வாங்கிய போது பாடசாலை அதிபர் வசமாக சிக்கினார்!

யாழில் ஆவா குழுக் காவாலிகளின் இராணுவப்பிரிவின் ஆயுதக் களஞ்சியம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது!!

கிளிநொச்சியில் கண் மாபியாக்களின் கொடூரம்!! 71 மாணவர்களின் கண்களுக்கு நடந்தது என்ன? பெண் வைத்திய அதிகாரி பிரியந்தினி மிரட்டப்பட்டது ஏன்?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற NCG பஸ் பாரிய விபத்துக்குள்ளானது!!

கிளிநொச்சியில் பெண் வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கத்தை அலங்கோலப்படுத்தியவர் யார்??

யாழில் நண்பர்களுடன் தேனீர் குடித்துக்கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட துயரம்!!

சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்து!! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்!! (Photos)

பிரதமர் மகிந்தவின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி மகிந்தவின் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த கில்லாடிக்கு நடந்த கதி!!

Related Posts