வன்புணர்வு செய்யப்பட்ட விமானப்படை பெண் அதிகாரிக்கு பெண் உறுப்பில் இரு விரல் பரிசோதனை!! வலுக்கும் எதிர்ப்பு

தமிழ்நாட்டின் கோவையில் உள்ள இந்திய விமானப்படை கல்லூரியில் தன்னை ஆண் அதிகாரி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக 28 வயது பெண் அதிகாரி உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கூறியிருந்த நிலையில், சட்டவிரோதமாக தம்மை விமானப்படை மருத்துவர்கள் இரு விரல் பரிசோதனைக்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட பெண் அதிகாரியே முதல் அறிக்கையில் கூறியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான செய்தி சில ஊடகங்களில் வெளியான நிலையில், தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா, இந்திய விமானப்படை தளபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தனி உரிமை மற்றும் மதிப்பை மீறும் வகையிலும் உச்ச நீதிமன்றம் இதுபோன்ற விவகாரங்களில் பிறப்பித்த உத்தரவை மீறும் வகையிலும் இரு விரல் பரிசோதனை நடத்திய இந்திய விமானப்படை மருத்துவர்களின் செயல் தேசிய மகளிர் ஆணையத்துக்கு ஏமாற்றத்தை தருகிறது என்றும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா கூறியுள்ளதாக அந்த ஆணையம் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து, அரசாங்கமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் 2014ஆம் ஆண்டில் அறிவித்தபடி இருவிரல் பரிசோதனை முறை அறிவியல் பூர்வமற்றது என்பது குறித்து இந்திய விமானப்படை மருத்துவர்களுக்கு புரிய வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் ரேகா சர்மா கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 29 வயதாகும் ஆண் அதிகாரி சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர். அந்த பெண் அதிகாரி புகார் தெரிவித்தவுடனேயே அந்த ஆண் அதிகாரி மாவட்ட நீதிபதி முன்பு சரண் அடைந்தார். இதற்கிடையே, இந்த விவகாரத்தில் பெண் அதிகாரி அளித்த பாலியல் வன்புணர்வு புகாரை விமானப்படையே விசாரிக்க முடியும். அதை உள்ளூர் காவல்துறை விசாரிக்க வரம்பு இல்லை என்று கூறி குற்றம்சாட்டப்பட்ட அதிகாரியும் விமானப்படை தரப்பும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதன் மீது முடிவு எடுக்கும்வரை குற்றம்சாட்டப்பட்ட ஆண் அதிகாரியை நீதிமன்ற காவலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கை விமானப்படையே விசாரிக்கலாம் என்று நீதிபதி மகேஸ்வரி இன்று உத்தரவிட்டிருக்கிறார்.

ஃபிளைட் லெப்டிணன்ட் அந்தஸ்தில் உள்ள ஆண் அதிகாரியால் செப்டம்பர் 10ஆம் தேதி தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக விமானப்படை தள பொறுப்பு அதிகாரியிடம் புகார் தெரிவித்த பிறகும் அவர் 20ஆம் தேதிவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்த பெண் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், உச்ச நீதிமன்றம் சில ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பித்த உத்தரவுக்கு முரணாக தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதைக் கண்டறிய தன்னை இரு விரல் பரிசோதனைக்கு விமானப்படை மருத்துவர்கள் உட்படுத்தியதாகவும் அந்த பெண் அதிகாரி கூறியிருக்கிறார்.

புகார் தெரிவித்த பெண் அதிகாரியும் ஆண் அதிகாரியும் கோவை விமானப்படை பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வந்துள்ளனர். இந்த நிலையில், செப்டம்பர் 9ஆம் தேதி இரவு படையின் மெஸ்ஸில் நடந்த இரவு விருந்தில் கலந்து கொண்டதாகவும் பயிற்சியின்போது காலில் ஏற்பட்ட காயத்துக்கு மருந்து சாப்பிட்டு விட்டு உறங்கி விட்டதாகவும் பெண் அதிகாரி புகாரில் கூறியுள்ளார். மேலும், அன்றைய தினம் நள்ளிரவைக் கடந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ஆண் அதிகாரி குடிபோதையில் தன்னிடம் தவறாக நடந்து கொண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் பெண் அதிகாரி கூறியுள்ளார்.

தனக்கு நேர்ந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து விமானப்படை குழு தலைவரிடம் கூறியதும், மற்றொரு பெண் அதிகாரியுடன் தன்னை சந்தித்த அவர், “உன் எதிர்காலம், குடும்ப மரியாதை போன்றவற்றை நினைத்துப் பார்,” என்று கூறியதாகவும் பெண் அதிகாரி தெரிவித்துள்ளார். பின்னர் அந்த இரு உயரதிகாரிகளும் மீண்டும் தன்னை சந்தித்து, ஒன்று எழுத்துபூர்வமாக புகார் தெரிவிக்க வேண்டும் அல்லது கருத்தொற்றுமையுடன் உறவு கொண்டதாக எழுத்துபூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்று கூறியதாகவும் பெண் அதிகாரி கூறியுள்ளார். இதையடுத்து புகார் தெரிவிக்க துணிந்தபோது அன்றைய தினம் மருத்துவமனையில் இரு விரல் பரிசோதனைக்கு தான் உட்படுத்தப்பட்டதாக அந்த பெண் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அந்த பரிசோதனையில் முடிவு நெகட்டிவ் என்று வந்ததாக தன்னிடம் கூறிய உயரதிகாரி, எழுத்துபூர்வ புகாரை திரும்பப் பெறவேண்டும் என்றும் இல்லாவிட்டால் இந்த தகவல் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்து விமானப்படைக்கு மட்டுமின்றி உனக்கும் களங்கத்தை ஏற்படுத்தி விடும் என்று தன்னிடம் எச்சரித்ததாக பெண் அதிகாரி தெரிவித்தார் என்று காவல்துறையினர் கூறுகின்றனர். இருந்தபோதும், இந்த விவகாரத்தில் அவர் துணிந்து சென்று நகர காவல் ஆணையரை சந்தித்து புகார் அளித்ததைத் தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, “விமானப்படை அதிகாரியை உள்ளூர் காவல்துறை வழக்கு ஒன்றில் கைது செய்திருப்பது தவறு என்றும் அந்த அதிகாரியை தங்களிடம் ஒப்படைத்தால் விமானப்படை சட்டத்தின்படி அவருக்கு எதிரான விசாரணை நடத்தப்படும்,” என்றும் கூறி நீதிமன்றத்தில் இந்திய விமானப்படை மனு தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இந்திய விமானப்படை தரப்பில் இருந்து இன்னும் கருத்து ஏதும் ஊடகங்களிடம் தெரிவிக்கப்படவில்லை.

2014ஆம் ஆண்டு ஹரியாணா மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. அதில், ‘இரு விரல் பரிசோதனை’ மற்றும் அதன் விளக்கம் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் தனியுரிமை, உடல், மன ஒருமைப்பாடு மற்றும் கண்ணியத்திற்கான உரிமையை மீறுவதாக உள்ளது,” என்று கூறப்பட்டுள்ளது. ‘இரண்டு விரல் பரிசோதனை’ மற்றும் கன்னித்தன்மை பரிசோதனைகள் மூலம் வன்முறையின்றி உறவு கொண்டார்கள் என்பதை உறுதிபட குறிப்பிட முடியாது என ஆராய்ச்சியாளர்களும் மருத்துவ நிபுணர்களும் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளனர். கன்னித்திரை கிழிந்தோ சேர்ந்தோ இருப்பதை மட்டும் வைத்து இதில் முடிவெடுக்க முடியாது. அதற்கும் பாலியல் வன்முறை அல்லது துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணைக்கும் தொடர்பு இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை மேற்கோள்காட்டி சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானின் லாகூர் நீதிமன்றத்தில் கூட ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், இதுபோன்ற இருவிரல் பரிசோதனை, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எவ்வித பயனையும் தரப்போவதில்லை. மாறாக அவர் மீதே சந்தேகம் கொள்ளும் பார்வையை தோற்றுவித்து விடும் என்று நீதிமன்றம் கூறியது. ஒரு பெண்ணின் கன்னித்திரை தன்மையை வைத்து அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்ற முடிவுக்கு வர முடியாது என்றும் பாகிஸ்தான் நீதிமன்றம் கூறியிருந்தது.

உலக சுகாதார அமைப்பும், கடந்த 2018ஆம் ஆண்டு இதே கருத்தை வெளியிட்டுள்ளது. “கன்னித்தன்மை சோதனை பெரும்பாலும் கன்னித்திரை தன்மை அல்லது அது கிழிந்த அளவு, மற்றும்/அல்லது யோனியில் விரல்களைச் சொருகுவதன் மூலம் (“இரண்டு விரல்” சோதனை) பரிசோதிக்கப்படுகிறது. ஒரு பெண்ணின் ‘பாலியல் செயல்பாட்டு வரலாறை’ இந்த முறையில் அறியலாம் என்பது நம்பிக்கை அடிப்படையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஒரு பெண் யோனி வழியாக உடலுறவு கொண்டாரா இல்லையா என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்கிறது உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
Latest Posts

கொழும்பில் 3 மாடி சொகுசு வீட்டுக்குள் கஞ்சா பயிரிட்ட கில்லாடிகள்!!

யாழ் வடமராட்சியில் பகுதியில் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்!!

யாழில் சொந்தக்காரர்களுக்கிடையில் நடந்த மோதல்!! கோடரியால் தாக்கப்பட்டு இருவர் படுகாயம்!!

பிரபல நாடொன்றில் குழந்தைகளுக்கு கட்டாயமாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி!

கோட்டாபய அமைதியானவர் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

தீயிட்டு எரிக்கும் விவசாயிகள் – ராஜபக்சவினரின் குரக்கன் சால்வையும் பசளை நாடகமும்! இழந்து விடுவாரா கோட்டாபய?

மைத்திரி அதிரடி முடிவு: தடுமாறும் கோட்டாபய அரசு?

பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனை காலி செய்ய சதி! வீட்டில் இரவு நடந்த சம்பவம்!

தலைநகரில் பலத்த துப்பாக்கி சூடு! அதிரும் இலங்கை! ஒருவர் பலி!

பிரான்ஸில் விடிய விடிய துப்பாக்கி சூடு! எதுவுமே தெரியாமல் காலையில் எழும்பிய மக்கள்!

லண்டன் வரும் கோட்டாவுக்கு இறுதி பரிசு! புலம்பெயர் தமிழர்கள் ஏற்பாடு!

‘டேர்மினேட்டர்’ கோட்டாபய உங்கள் நகரத்திற்கு வருகிறார்!! ஸ்கொட்லன்ட் பத்திரிகையில் விளம்பரம்!!

யாழில் மழை வேண்டி சுமந்திரனின் கொடும்பாவி எரிப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி!

கருப்பு பட்டியலில் நாடு! காரணமான மக்கள்!

பிரான்ஸ் உணவகத்தில் நடந்த கூத்து! அதிரடியாக இறங்கிய பொலிஸார்! ஐவர் கைது!

“உன் கூட நூறு வருசம் வாழனும்டா” பாணியில் இலங்கையை உருட்டும் சீனா!

இலங்கையில் சனிக்கிழமைகளிலும் பாடசாலைகளை நடத்த திட்டம்!!

பாடசாலை அதிபரின் செயலால் கதிகலங்கிய அரசியல்வாதிகள்

17 வயசுச் சிறுமியை கலியாணம் கட்டி கர்ப்பமாக்கியய 20 வயது பெடியன்!! என்ன வேலை என்று கேட்டால் ‘லண்டன் போக றை பண்ணுறாராம்‘!! நடந்தது என்ன?

வெகுவிரைவில் மாற்றமடையவுள்ள இலங்கையின் பெயர் – தேரர் தகவல்

சுவிஸ் மக்களின் ஆயுட்காலம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கொழும்பில் அதிகாலையில் நடந்த துப்பாக்கி சூடு!! ஒருவர் மரணம் மற்றொருவர் காயம்!!

முல்லைத்தீவில் சோக சம்பவம்: இரு பெண்களுக்கு நேர்ந்த பரிதாபம்

யாழில் கொடூர சம்பவம்: கணவனால் மனைவிக்கு நேர்ந்த விபரீதம்

கனடாவில் 29 வயது இளம் தமிழ்க் குடும்பஸ்தர் அகாலமரணம்!! (Photos)

சீனாவால் பேராபத்து! ஒரு கையெழுத்தில் இலங்கையின் எதிர்காலம்

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திகதி அறிவிக்கப்பட்டது!

ஜனாதிபதி கோட்டபாயவின் அதிரடி நடவடிக்கை – கலக்கத்தில் உயர்மட்ட அதிகாரிகள்

யாழில் மாணவர் வரவு குறைவு!

சிங்கள இளைஞனை காதல் திருமணம் செய்த தமிழ் யுவதி; பெற்றோரின் அதிரடி நடவடிக்கை!

ஒரு பெண்ணும் பெண்ணும் காதலிக்க அது போதும்! மற்றது எதுவும் தேவையில்லையாம்! மனம் திறக்கும் இளசுகள்! அப்படியானால் மற்ற விஷயங்கள்?

கையடக்க தொலைபேசியில் பதிவு செய்து கொண்டு உயிரிழந்த 16 வயது மாணவி!!

கோட்டாபயவின் தலையீட்டால் அமைச்சர் பதவியில் இருந்து விலகும் கெஹெலிய?

தாயை கொன்று சமைத்து உண்ட மகன்! மீதியை ப்ரிட்ஜில் வைத்த அவலம்!

ஒருசில புலம்பெயர் தமிழர்களால் கேவலப்படுத்தப்படும் தேசிய சின்னங்கள்

காதலர்களே நீங்கள் இப்படி வழிபட்டால் உங்க காதல் நிச்சயம் நிறைவேறும்..!

மனைவியை தொழிலதிபருக்கு விற்று ஆப்பிள் ஐ போன் வாங்கிய கணவன்!!

இலங்கை வருகிறார் அதானி! இனி இயற்கை வளங்களுக்கு சனி!

இருளில் மூழ்கப்போகும் சிறிலங்கா – பகிரங்க எச்சரிக்கை

யாழில் இளம் குடும்ப பெண்மீது கத்திக்குத்து; கணவன் தலைமறைவு!

யாழில் களமிறக்கப்பட்டுள்ள பொலிஸார்; முன்னெடுத்துள்ள விசேட நடவடிக்கை!

அரசு பதவியை இராஜினாமா செய்ய தயாராகும் சுகாதார அமைச்சர் – அரசியலில் பரபரப்பு.

லண்டனில் தடுப்பூசி போட்ட பிரபலத்துக்கு ரத்தகட்டி! படுத்த படுக்கையான சோகம்!

யாழ்ப்பாணத்திலிருந்து மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகள் இன்று முதல் ஆரம்பம்

இயலாமையின் உச்சத்தில் சிறிலங்கா அரசாங்கம் – வெளிப்படையாகக் கூறிய செல்வம் அடைக்கலநாதன்

சீன தடுப்பூசி ரொம்ப நல்லது! உசுப்பேற்றும் தமிழரசு கட்சி கண்டுபிடிப்பு!

கோட்டாபயவின் நோக்கம் வெளிவந்தது

“என்ன ஆட்டம் போட்டாலும் எதுவும் முடியாது“ பகிரங்க சவால்

நவம்பர் 1 முதல் குறிப்பிட்ட போன்களில் செயலிழக்க உள்ள வாட்ஸ் அப்…காரணம் என்ன?

இலங்கையில் பேருந்து கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு?

பேஸ்புக், வட்சப் போன்ற சமூகவலைத்தள தொடர்புகள் இல்லாத மணமகளைத் தேடும் சுவிஸ்சில் வசிக்கும் யாழ்ப்பாண மாப்பிளை

நாட்டு மக்களின் எதிர்பார்ப்பிற்கு என்னால் பயனில்லை! கோட்டாபயவின் அறிவிப்பு

அரிசி மற்றும் பருப்பு விலைகளை பார்த்துக் கொள்வதற்காகவா என்னை நியமித்தீர்கள்..? ஜனாதிபதி கேள்வி..

ஒரே சூலில் 6 குழந்தைகள்: ’31 வாரங்கள் மனைவி சுமந்த சுமையை இனி நான் சுமப்பேன்’; கணவன் நெகிழ்ச்சி!

முகக்கவசம் இல்லை; 5000 ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்

முல்லைத்தீவு மல்லாவிப் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் குடும்ப்ப பெண் வவுனியாவில் கடத்தப்பட்டது ஏன்?? கணவர் பொலிசாரிடம் முறையிட்டார்!!

அரிசி பருப்பு விலைகளை கவனிக்க தான் என்னை தெரிவு செய்தீர்கள் என்றால் என்னால் பயனில்லை! கோட்டாபய அறிவிப்பு

திருமண செலவு பணத்தை தானம் கொடுத்த சிங்கள தம்பதி! யாழில் நிலநடுக்கம்!

16 நாட்களில் கசந்த முகநூல் காதல்; யுவதியின் விபரீத முடிவு; தந்தை வெளியிட்ட சந்தேகம்

பெற்ற குழந்தையை புதைத்த தாய்! உயிர்த்து எழுந்து வந்த அதிசயம்!

இலங்கையர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய திருமண தம்பதி

ராஜபக்ச அரசாங்கம் சலூன் கடையைப் போன்றது

சிறுமியை துஸ்பிரயோகம் செய்த யாழ் JK Dreams Studio முதலாளி கஜானன் அங்கஜனின் அடியாளா?? அங்கஜன் என்ன கூறுகின்றார்?? இதோ விபரம்!!

பேஸ்புக் காதலனுடன் கலியாணம் கட்டாது ஒன்றாக இருந்த திருகோணமலை யுவதிக்கு நடந்த கதி!!

குழந்தையுடன் நடு வீதியில் இளம் பெண் உதவி செய்வீர்களா?? அதிகம் பகிர்ந்து உதவி செய்யுங்கள்!!!

கரும் பூஞ்சை இலங்கையில் முதலாவது மரணம்

பூச்செண்டுடன் பெண்ணின் சடலம்! தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம்!

6 மாதங்களாக வயிற்றில் இருந்த செல்போன்! பின்னர் நடந்த சம்பவம்

ஆரம்பப் பிரிவு பாடசாலைகளை ஒக்டோபர் 25 முதல் திறக்க முடிவு!

கரும் பூஞ்சை நோயினால் இலங்கையில் பதிவான முதலாவது மரணம்

பிரபாகரனின் மகன் என்னிடம் கல்வி கற்றவர்! பாராளுமன்றத்தை கதற வைத்த சிறிதரன்!

கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள வரும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

பேஸ்புக் காதலால் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி

கடும் நெருக்கடியில் கோட்டாபய அரசாங்கம்; பிற நாடுகளிடம் கையேந்தும் மோசமான நிலை; காரணம் என்ன ?

பிரான்ஸ் செல்ல முற்பட்ட யாழ் இளைஞனிற்கு காத்திருந்த பெரும் சோகம்! அதிர்ச்சியில் குடும்பம்

நாட்டில் நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!!

கோட்டாவின் மண்டையை களுவிய விற்பன்னர்கள் தலை தெறிக்க ஓட்டம்

நீர்கொழும்பில் காணாமல்போன 2 வயது சிறுமி சிலாபத்தில் சடலமாக மீட்பு!!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் உறுப்பினர் வித்தியாசமான முறையில் போராட்டம்!

சகோதரர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலால் தம்பியை குத்திக்கொன்ற அண்ணண்.

அரசாங்க உத்தவை மீறி இலங்கை வந்த வாகனங்கள்!

வெளிநாட்டு காதலியால் கொழும்பில் இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

தடுப்பூசி செலுத்தாதவர்கள் எங்கும் செல்ல முடியாது; வருகிறது தடை!

கலியாணம் மற்றும் நிகழ்வுகளுக்கு தடை? யாழ்.சாவகச்சோி வைத்திய அதிகாரி பணிமனை விடுத்துள்ள எச்சரிக்கை!

இன்றைய இராசிபலன்கள் (27.10.2021)

யாழ் வடமராட்சியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து; ஒருவர் மரணம்!

“ஒரு கேம்காக பாசத்தை இழப்பீர்களா”…பிக் பாஸ் வீட்டில் வெடிக்கும் புதிய பிரச்சினைRelated Posts

%d bloggers like this: