வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்பும் புலம்பெயர் தமிழர்களுக்கு முக்கிய அறிவித்தல் !!

இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தலை அப்படியே இங்கு தந்துள்ளோம்…..

வெளிநாடுகளில் தொழில்புரிகின்ற சில இலங்கையர்கள், இலங்கையில் தம்மைச் சார்ந்திருக்கிறவர்களுக்கு பணம் அனுப்புகின்ற போது, அறிந்தோ, அறியாமலோ, சட்டத்திற்கு புறம்பான வழிகளுடாக பணத்தை அனுப்புகின்றனர் என இலங்கை மத்திய வங்கிக்கு தகவல் கிடைத்துள்ளது.

அவ்வாறு பணம் அனுப்புகின்ற போது. சில தரகர்கள், வெளிநாட்டில் தொழில்புரிகின்ற இலங்கையர்களின் வெளிநாட்டு நாணயத்தைச் சேகரித்து அதற்கு சமனான தொகையை இலங்கை ரூபாவில் அத்தகைய பணியாளர்களைத் சார்ந்துள்ளோர்களின் கணக்குகளுக்கு நிதியியல் முறையினூடாக பணமாக அல்லது பரிமாற்றல்களாக வரவு வைக்கின்ற நிகழ்வுகள் தொடர்பில் மத்திய வங்கிக்கு தெரியவந்துள்ளது.

பணம் தூயதாக்குதலைத் தடுப்பதற்காக சட்டத்தின் ஏற்பாடுகளை மீறுகின்றமைக்காக சட்டத்தின் நியதிகளுக்கமைய அவர்கள் தண்டனை விதிக்கத் தக்க தவறுகளைப் புரிகின்றனர் என்பது பற்றி பொதுமக்கள் அறியாது இருக்கக் கூடும்.

மேலும் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், அத்தனை கொடுக்கல்வாங்கல்கள் போதைப்பொருட்கள் கடத்தலுடன் அல்லது வேறு சட்ட விரோத நடவடிக்கைகளுடன தொடர்புடையதாக இருக்கக்கூடுமென சந்தேகம் எழுந்துள்ளது.

ஆகவே அறிந்தோ, அறியாமலோ இத்தகைய சட்டரீதியற்ற நடவடிக்கைகளுக்குள் சிக்கிக் கொள்ள வேண்டாம் என வெளிநாட்டில் பணிபுரியும் அனைத்து இலங்கையர்களுக்கும், அதேபோன்று அவர்களைத் சார்ந்திருப்பவர்களுக்கும், இலங்கை மத்திய வங்கி அறிவிக்கின்றது, சட்டத்திற்குப் புறம்பான தொழிற்படுத்துநர்களாக பாதிக்கப்படவேண்டாம் என்றும் இலங்கைக்கு பணம் அனுப்புகின்ற போது இலங்கை மத்திய வங்கியால் மேற்பார்வை செய்யப்படுகின்ற வங்கிகள் மற்றும் நிதியியல் நிறுவனங்கள் அல்லது சர்வதேச வங்கிகள் அல்லது நிதியியல் நிறுவனங்களூடாக மாத்திரம் பணம் அனுப்புவதை, உறுதி செய்யுமாறும் மத்திய வங்கி தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் வலியுறுத்துகின்றது.

இலங்கை மத்திய வங்கி
இல – 30
சனாதிபதி மாவத்தை
கொழும்பு 01

Latest Posts

மஹிந்தவிற்கு சத்திர சிகிச்சை நடந்தது உண்மையே!

இலஞ்சம் வாங்கிய போது பாடசாலை அதிபர் வசமாக சிக்கினார்!

யாழில் ஆவா குழுக் காவாலிகளின் இராணுவப்பிரிவின் ஆயுதக் களஞ்சியம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது!!

கிளிநொச்சியில் கண் மாபியாக்களின் கொடூரம்!! 71 மாணவர்களின் கண்களுக்கு நடந்தது என்ன? பெண் வைத்திய அதிகாரி பிரியந்தினி மிரட்டப்பட்டது ஏன்?

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற NCG பஸ் பாரிய விபத்துக்குள்ளானது!!

கிளிநொச்சியில் பெண் வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கத்தை அலங்கோலப்படுத்தியவர் யார்??

யாழில் நண்பர்களுடன் தேனீர் குடித்துக்கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட துயரம்!!

சாவகச்சேரி மறுவன்புலவுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்து!! ஒருவர் பலி!! மற்றொருவர் படுகாயம்!! (Photos)

பிரதமர் மகிந்தவின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி மகிந்தவின் சொந்தப் பணத்தைக் கொள்ளையடித்த கில்லாடிக்கு நடந்த கதி!!

Related Posts